தினசரி பிளாஸ்டிக் சாப்பிடுகிறோமா?



Photo: Getty Images

நாம் சாப்பிடும் உணவில் பிளாஸ்டிக் உள்ளது. அதன் அளவு வாரத்திற்கு கிரடிட் கார்டு அளவு என்று இது குறித்து வெளியான ஆய்வு குறிப்பிடுகிறது.

ஆஸ்திரேலியாவிலுள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. உலகளவில் 2 ஆயிரம் சிறு துகள்கள் அளவுக்கு சாப்பிடுகின்றனர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் துகள்களின் எடை வாரத்திற்கு 5 கிராம் என ஆண்டிற்கு 250 கிராம் பிளாடிஸ்க்கை நாம் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

பொதுக்குடிநீர் பைப்புகளில்தான் பெரும்பான்மையான பிளாஸ்டிக் கலப்படம் நிகழ்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதன் அளவு அதிகமாக உள்ளது. உப்பு, மீன், பீர் ஆகியவற்றில் இந்த பிளாஸ்டிக் கலப்பு அபரிமிதமாக உள்ளது.


இந்த ஆய்வு நாம் கவனிக்க வேண்டிய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. எனவே நாடுகள் உடனடியாக மக்கள் பிளாஸ்டிக் கலப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவ வேண்டும் என்று கூறுகிறார் உலக வைல்ட் ஃபன் உலக இயக்குநர் மார்கோ லாம்பெர்டினி. இந்த ஆராய்ச்சியை தவ பழனிச்சாமி செய்துள்ளார். இந்த அறிக்கை சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

டவுன் டு எர்த்