ஊடக உலகில் பெண்களின் சாதனை! - செல்வாக்கு வாய்ந்த பெண்கள்- காளி பூரி, அனுபிரியா, ஃபயா டி சூசா
ஊடகங்கள் சார்ந்தும் பெண்கள் சாதிக்கின்றனர். இவர்களை அடையாளப்படுத்தும் தன்மை இந்தியாவில் குறைவாக உள்ளது. மெல்ல இந்த நிலைமை மாறி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஊடக உலகில் பெண்களின் சாதனைகளைப் பற்றி இம்பேக்ட் 50 என்ற இதழில் 50 சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியுள்ளனர்.
1
காளி பூரி
இந்தியாடுடே குழுமம்
இந்தியாடுடே குழுமத்தில் இந்தியா டுடே, பிஸ்னஸ் டுடே பத்திரிகைகள் உள்ளன. இந்தியா டுடே டிவி, ஆஜ்தக் ஆகியவை புகழ்பெற்ற டிவிகள். இவற்றை டிஜிட்டல் உலகிற்கு ஏற்றாற்போல மாற்றியது காளி பூரியில் தனித்துவமான சாதனை. இந்தியா டுடே குழுமத்திற்காக ஏராளமான வலைத்தளங்களை இப்போது உருவாக்கி வருகிறார். கூடவே பத்திரிகைகளை இணையத்தில், மொபைலில், செயலில் படிக்குமாறு மாற்றியுள்ளார். மேலும் மொபைல்தக் என்ற பெயரில் மொபைல்களுக்கான சேனல்களை உருவாக்குவதில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதில் இவருக்கு நிகர் இப்போதைக்கு யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். குழும இதழ்களோடு, காஸ்மோபாலிட்டன், ஹார்பர் பஜார். ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய இதழ்களையும் இந்தியாவில் வெளியிடும் உரிமை பெற்றுள்ளனர்.
சமூகத்தில் உழைப்பவர்களை, சிந்தனையாளர்களை கௌரவப்படுத்துவதில் வார, மாத இதழ்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தியா டுடே கான்கிளேவ், யூத் ராக்ஸ், சாகித்திய ஆஜ்தக், அஜெண்டா ஆஜ்தக் என பல்வேறு நிகழ்ச்சிகளை உருவாக்கி சமூகத்திற்கு உழைப்பவர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரை அழைத்து பேச வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியதில் காளி பூரிக்கு முக்கியமான பங்குண்டு. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் செல்வாக்கு பெற்ற ஊடகப்பெண்மணி என்ற விருதை வாங்கினார். 21ஆம் நூற்றாண்டின் ஐகான் விருதையும் வாங்கியுள்ளார்.
2
அனுபிரியா ஆச்சாரியா
பப்ளிசிஸ் குழுமத்தின் இயக்குநர், தெற்காசியா
உலகம் முழுக்க விளம்பரம் செய்யும் பன்னாட்டு நிறுவனம்தான் பப்ளிசிஸ். கடந்த 25 ஆண்டுகளாக இந்தியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலைந்து திரிந்து ஊடகம் மற்றும் விளம்பரத்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் சம்பாதித்து வைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு ஜெனித் ஆப்டிமீடியா என்ற நிறுவனத்தின் இயக்குநராக இணைந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு ப ப்ளிசிஸ் நிறுனவத்தின் இயக்குநரானார். துறைரீதியான வள்ளர்ச்சி 15 சதவீதம்தான் இருக்கும் என கணிக்கப்பட்டது. அக்காலத்தில் அனுபிரியாவின் நிறுவன வள்ச்சி 40 சதவீதத்தை எட்டியது. இயக்குநரானவுடன் இரண்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்களை வாங்கிப்போட்டார். அந்த சாமர்த்திய தனத்தினால்தான் இன்று ப ப்ளிசிஸ் குழுமத்தின் வருமானத்தில் 55 சதவீதம் இப்படித்தான் கிடைக்கிறது.அனுபிரியா முழு வெற்றியை ஈட்டியது. இன்றும் பல்வேறு சந்தை விற்பனை வழிகளைத் தேடி பொருட்களை விற்க உழைத்து வருகிறார்.
ஃபயா டி சூசா
பத்திரிகையாளர்,தொழில்முனைவோர்
டைம்ஸ் டிவி குழுமத்தில் குறைந்த வயதில் பத்திரிகையின் எடிட்டர் ஆனவர் டைம்ஸில் வேலைக்கு சேரும் முன்பு சிஎன்பிசி 18 நிறுவனத்தில் வணிகச்செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தார். பின்னாளில் அனைத்து விஷநங்களும் மாறிவிட்டன. தற்போது தனிநபராக சுதந்திர ஊடகம் ஒன்றை உருவாக்க உள்ளார். சமூக வலைத்தளத்தை இவர் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு இளைஞர்களுக்கு ஊக்கம் தந்தார். பலரும் டிவியில் உரக்க கத்தி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, சாலை பழுது, குடிநீர் வசதி என மக்களின் பிரச்னைகளை மிரர் நவ் டிவியில் பேசினார். இதற்கு பெயர்தான் அர்பன் டிபேட். இதன் காரணமாக ஏராளமான பிரச்னைகளை உடனடியாக கவனிக்கப்பட்டு தீர்க்கப்பட்டன. இவரின் பணியைப் பாராட்டி ஏராளமான அமைப்புகள் விருதுகளை வழங்கியுள்ளன.
impact
கருத்துகள்
கருத்துரையிடுக