2021ஆம் ஆண்டோடு முடிவுக்கும் வருகிறது மைக்ரோசாப்டின் இன்டர்நெட்எக்ஸ்ப்ளோரர் 11!
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
கடந்த வாரம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர ருக்கான ஆதரவை நிறுத்திக்கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்டர்எக்ஸ்ப்ளோரர் 11 உடன் நிறுவனத்தின் ஆதரவும், உதவிகளும் நிறுத்தப்படவிருக்கின்றன. இந்த ப்ரௌசர் சாதித்த விஷயங்களைப் பார்ப்போம்.
1994ஆம் ஆண்டு நெட்ஸ்கேப் நேவிகேட்டர் மொசைக் ஆகிய ப்ரௌசர்கள் சந்தையில் இருந்தன. இவை இலவசம் கிடையாது. காசு கொடுத்து பிளாப்பி வடிவில்தான் வாங்க வேண்டும். 1995ஆம் ஆண்டு விண்டோஸ் ஓஎஸ்சுடன் இன்டர்எக்ஸ்ப்ளோரர் இலவசமாக வெளிவந்தது. இதன்காரணமாக சந்தையில் நெட்ஸ்கேப் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர ரைவிட அதிக ஆப்சன்களை நெட்ஸ்கேப் கொண்டிருந்தது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 3, 95 விண்டோஸ் ஓஎஸ்சுடன் இலவசமாக வந்தது. மக்கள் அதுவரை ப்ரௌசரை காசு கொடுத்து வாங்கினார்கள். விண்டோஸ் இலவசமாக ப்ரௌசரைத் தந்தவுடன் யாரும் நெட்ஸ்கேப்பை நாடவில்லை. இதன் காரணமாக நெட்ஸ்கேப் சந்தையில் தன் வலிமையை இழந்து வந்தது. 1998ஆம் ஆண்டு தனது ப்ரௌசரை திறமூல மென்பொருளாக்கி விட்டு சந்தையிலிருந்து வெளியேறியது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு கட்டத்தில் சந்தையில் 95 சதவீதத்தை தன்னிடமே வைத்திருந்தது. இதற்கு காரணம், அதன் ப்ரௌசர் சிறப்பாக செயல்பட்டது என்று அர்த்தமல்ல. மைக்ரோசாப்ட் பல்வேறு நாட்டு அரசுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தபடி, அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலம் மட்டுமே தெரியும். அதனை பிறர் பார்க்கமுடியும் கட்டாயத்தை உருவாக்கி அதனை தரவிறக்கும் சூழலுக்கு பிறரை நிர்பந்தித்தது. இதற்கு விளக்கம் கேட்டு வழக்கு தொடரப்பட்டபோது, விண்டோஸ் ஓஎஸ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இன்றி தனியாக இயங்காது என நிறுவனம் புதுமையாக ஒரு காரணத்தைச் சொன்னது.
1999ஆம்ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் மீது ஸ்பை கிளாஸ் என்ற கோடிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான கோடிங்கை எழுதிய பணிக்கு மைக்ரோசாப்ட் பேசிய பணத்தைக் கொடுக்கவில்லை என்பதுதான் பிராது. வழக்கில் மைக்ரோசாப்ட் தோற்றுப்போனது. அதற்கு முன்னரே பிற ப்ரௌசர்களை அழிக்கும் பணியை மைக்ரோசாப்ட் தொடங்கிவிட்டது. ஓஎஸ்களில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை இலவசமாக இணைத்து வழங்கத்தொடங்கியது.
2003க்குப் பிறகு குரோம், ஃபயர்பாக்ஸ் இணைய உலகில் நுழைந்த பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு அடிமேல் அடிதான். 2013இல்தான் இன்டர்நெட்எக்ஸ்ப்ளோரர் 11 வெளியானது. பின்னர் எட்ஜ் என்ற ப்ரௌசரையும் உருவாக்கியது. ஆனாலும் கூட இன்று அதன் சந்தைப் பங்களிப்பு 1.3 சதவீதம்தான்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக