11ஆம் வகுப்பு படிப்பை மீண்டும் படிக்க தேவி மஹ்டோ என்ற பள்ளியில் சேர்ந்துள்ளேன். ஜகர்நாத் மஹ்டோ, கல்வி அமைச்சர்
திரும்ப மாணவரான கல்வி அமைச்சர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜகர்நாத் மஹ்டோ, மெட்ரிகுலேசன் படிப்பு மட்டுமே முடித்தவர். தற்போது மாநிலத்தில் கல்வித்துறை அமைச்சராக, கல்வி இயக்க தலைவராகவும் இருக்கிறார். படிக்காதவர் அமைச்சரா என மக்கள் அவரைக் கிண்டல் செய்ய, ரோஷம் வந்த அமைச்சர் தனது படிப்பை மீண்டும் தொடர்வேன் என்று அறி்வித்துள்ளார். அமைச்சருக்கு வயது 54தான் ஆகிறது என்பது நீங்கள் அறியவேண்டிய சமாச்சாரம்
வாழ்த்துகள் சார். மீண்டும் படிப்பைத் தொடர ஆர்வம் காட்டியிருக்கிறீர்கள்.?
கடந்த ஜனவரி மாதம் நான் ஹேமந்த் சோரன் அரசில், நான் கல்வி அமைச்சராக பதவியேற்றேன். பத்தாவது மட்டும் படித்தவர் எப்படி கல்வி அமைச்சர் ஆகலாம் என மக்கள் இணையம் முதல் நாளிதழ்கள் வரை கிண்டல் செய்தனர். அது என் மனதை கடுமையாக காயப்படுத்தி விட்டது. எனவே நான் அதிலுள்ள உண்மையை உணர்ந்து 11ஆம் வகுப்பு படிப்பை மீண்டும் படிக்க தேவி மஹ்டோ என்ற பள்ளியில் சேர்ந்துள்ளேன். இந்த பள்ளியை நான் 2005ஆம் ஆண்டு தொடங்க உதவினேன்.
படிப்பை ஏன் சிறுவயதில் கைவிட்டீர்கள்?
நான் ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்தவன். போகாரோவிலுள்ள டெலோ எனுமிடத்திலுள்ள நேரு உயர்நிலைப்பள்ளியில் நான் பத்தாவது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். அதற்கு பிறகு படிக்க வசதி இல்லை என்று கூறமுடியாது. இப்படிப்பட்ட சூழலைக் கடந்துதான் பலரும் முன்னேறி வந்திருக்கிறார்கள். நான் அப்போது சிபுசோரன், பினோத் பிகாரி மகாடோ ஆகியோரின் அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டு படிப்பை மறந்துவிட்டேன். இந்த தலைவர்கள் அப்போது தனி மாநில கோரிக்கை கோரி வந்தனர்.
அதற்காக படிப்பை கைவிட்டுவிட்டீர்கள்?
எங்கள் மாநிலம் அப்போது பீகாரின் பிடியில் இருந்த து. வளர்ச்சிபெறாத பிற்படுத்தப்பட்ட பகுதியாக இருந்த து. அந்த நிலையை நான் மாற்ற விரும்பினேன். எனவே, நான் அதுதொடர்பான அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டேன். இந்த நிலை மாற தனி மாநிலம் என்பது தேவை என்பது எனது கனவாக இருந்தது. நான் அரசியல்வாதியாக மாறுவேன். அமைச்சர் ஆவேன் என்பதையெல்லாம் நான் நினைத்தே பார்க்கலில்லை.
அமைச்சர் என்பதே பெரும்பொறுப்பு. இப்போது நீங்கள் கல்வி கற்கும் மாணவர் வேறு. எப்படி பொறுப்புகளை சமாளிக்க போகிறீர்கள்?
என்னால் மாணவராகவும், கல்வித்துறை அமைச்சராகவும் அதேநேரம் எனது நிலத்தில் விவசாயம் செய்யும் எளிய விவசாயியாகவும் இருக்கமுடியும் என்ற நம்புகிறேன். என்னுடைய செயல்களுக்கு ஆதரவாக மாநில முதல்வர் இருக்கிறார் என்பதால் அனைத்து விவகாரங்களையும் சமாளித்து விடுவேன் என்று நம்புகிறேன்.
உங்கள் கடமையை செய்ய உயர்கல்வி இல்லாமை எப்போதேனும் தடையாக இருந்துள்ளதா? பிற அமைச்சர்கள் உங்களைப் பின்பற்றுவார்களா?
எப்போதும் இல்லை. ;நான் படிக்கவில்லை என்றாலும் இத்துறை சார்ந்த விவகாரங்களை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். எனவே, என்னால் எளிதாக கொள்கைகளை மக்களின் குறைபாடுகளை பூர்த்தி செய்யும்விதமாக வகுக்க முடியும். அவர்களின் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். கல்வியைத் தொடர்வது என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு். அதில் நான் தலையிட ஏதும் இல்லை. படிக்க நினைத்தால் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் தவறில்லை. கற்பதற்கு வயது எப்போதும் தடையாக இருக்காது.
ஜார்க்கண்டில் கல்வி எப்படி இருக்கிறது?
அரசு கல்வி இங்கு பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. மேலும் தனியார் பள்ளிகளைப் போன்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வசதிகளும், எண்ணமும் அரசுபள்ளிகளில் இல்லை. இவற்றை விரைவில் மாற்றுவோம்.
தி இந்து ஆங்கிலம்
சத்யசுந்தர் பாரிக்
மொழிபெயர்ப்பு நேர்காணல், ஜகர்நாத் மஹ்டோ
கருத்துகள்
கருத்துரையிடுக