பிரிவினைக்குள்ளாக்கி மக்களை ஆராய்ச்சி செய்யும் ஆபத்தான மனிதர்கள்! டைவர்ஜென்ட் - அலிஜீயன்ட்

 

 

 

 

 

Download Allegiant (2016) Dual Audio (Hindi-English) 480p ...
டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்      

 

 

 

Allegiant (2016) Dual Audio Hindi 720p BluRay 850MB ESubs ...
டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்

 

டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்

directed by Robert Schwentke 

with a screenplay by Bill Collage, Adam Cooper, and Noah Oppenheim

Based onAllegiant
by Veronica Roth 

Music byJoseph Trapanese
CinematographyFlorian Ballhaus

 

ஒரு நாட்டை பிரித்து அதனைக் கண்காணித்து அங்கு வாழும் மக்கள் மீது மரபணு ஆராய்ச்சி செய்கிறது ஒரு கூட்டம்.  அதனை ஒரு ஆட்சிக்குழுத் தலைவியின் மகன் தலைமையிலான இளைஞர்களின் குழு கண்டுபிடித்து தனித்தனியாக இருக்கும் நாடுகளை எப்படி ஒன்றாக இணைக்கிறார்  என்பதுதான் கதை.

படத்தில் நாயகனுக்கு பெயரே 4தான். ட்ரிஸ் தான் நாயகியின் பெயர். அவரது மாசு மருவற்ற மேனியைப் போலவே அவரது டிஎன்ஏ மட்டும் பரிசுத்தமாக உள்ளது. இதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்குழுவினர், அவளை அவர்களது நாட்டிற்கு வரவைத்து அழைத்துச்செல்கின்றனர். அவளது டிஎன்ஏ மாதிரியைப் பயன்படுத்தி தூய மனித இனத்தை உருவாக்குவதே அவர்களது லட்சியம்.

தொடக்கத்தில் அவர்களது அம்மா பற்றி ஆராய்ச்சிக்குழுத் தலைவர் டேவிட் பேசி ட்ரிஸ் மனதை சென்டிமென்டாக மடக்குகிறார். இதனால் அவளுக்கு ஆராய்ச்சியின் கொடூர பின்னணி தெரிவதில்லை. இறுதியில் அவர்களது திட்டத்தை அறிந்து அங்கிருந்து தப்பி, சிகாகோவுக்கு வந்து ஊர், உறவுகளை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை.

டைவர்ஜென்ட் என்ற படவரிசையில் இது தொடக்க படம். எனவே பல்வேறு கேள்விகள் நமக்கு எழுந்தால், அவற்றுக்காக அடுத்தடுத்த பாகங்களை தரவிறக்கி பார்த்தால்தான் பதில் கிடைக்கும். ஒரு வேலி, இரண்டு நாடுகளைப் பிரிக்கிறது. ஒரு நாடு வளர்ச்சியின் பாதையில் உள்ளது. மற்றொரு நாடு சோமாலியா போல சோற்றுக்கே அல்லாடி சண்டை போட்டு வருகிறது. படத்தில் கிராபிக்ஸ் சமாச்சாரங்கள் ஒகே அளவில் தேறுகின்றன. சண்டைக்காட்சிகள் ஆர்வம் ஊட்டும்படி இல்லை. முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் சென்றுவிடுவதால், ஃபோர் பாதிநேரம் பரிதாபமாக கஃபேடீரியாவில் உட்கார்ந்து பன் பட்டர்ஜாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

மற்ற நாட்டை அவர்களுக்கே தெரியாமல் உளவுபார்க்கும் தொழில்நுட்பத்தை உ ருவாக்கியவர்களால் தங்கள் நாட்டை வெடிகுண்டுகளிடமிருந்து காப்பாற்ற முடியாதா என்ன? அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு நொடியில் எதிரி நாட்டைக் கொல்ல முடிந்தும் அந்த நாட்டு அதிகாரி பொங்கல் சாப்பிட்டு காபி குடித்தது போல இருப்பது எதற்கு? வேறு எதற்கு - அடுத்த பாகத்திற்காகத்தான்.

ஒற்றுமை தேசியம் சகோதரத்துவம்

கோமாளிமேடை டீம்

 
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்