பூமியில் உயிர்வாழ போராடும் லோரியன் கோள் இளைஞனின் போராட்டம் - ஐயம் நம்பர் 4

 








ஐயம் நம்பர் 4 2011


இயக்கம் -டி.ஜே.காருசோ

மூலம்- ஐயம் நம்பர்போர் -பிட்டாகஸ்லோர்


ஒளிப்பதிவு கில்லர்மோ நவாரோ


இசைடிரேவர்ராபின்


லோரியன் என்ற உலகில் அந்நியர்கள் படையெடுத்து வர அங்கிருந்து ஒன்பது பேர் தப்பி பிழைத்து பூமிக்கு வருகிறார்கள். இவர்களைப் பாதுகாக்க ஒரு பாதுகாவலர் உண்டு. அதாவது ஒன்பது குழந்தைகள். இவர்களைக் கொல்ல எதிரிகள் தனியாக படை ஒன்றை அமைத்து பூமிக்கு வருகின்றனர். அவர்கள் கையில் ஒன்பது பேரில் மூன்றுபேர் செத்துவிடுகிறார்கள். இவர்கள் யார் இறந்தாலும் அடுத்து இறப்பவர்களின் உடலில் வடுக்கள் தோன்றும். அவர்களின் சக்தி அபரிமிதமாக வெளிப்படும்.

இப்படி சிக்கலில் சிக்கும் இளைஞனின் வாழ்க்கையும், அவனது அன்பைத் தேடும் மனதும்தான் கதை.


கடற்கரையில் தனது வகுப்பு தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கும் இளைஞனின் காலில் திடீரென ஆரஞ்சு நிற நெருப்பு பற்றி ஓர் அடையாள ம் ஏற்படுகிறது. இரு கைகளிலும் வெளிச்சம் ஆடி காரின் ஹெட்லைட்டில் வருவது போல வருகிறது. இதனால் அவனைச் சுற்றியுள்ள பெண்தோழி பயந்து ஓடுகிறாள். இளைஞனின் பாதுகாவலர் அவனை ்உடனே அங்கிருந்து கிளம்ப ஆயத்தம் செய்கிறார். அவனுக்கு தான் யார் என்பது பற்றியெல்லாம் தெரியாது. சந்தோஷமாக பள்ளிக்குச் சென்று படிக்கவேண்டும் என்பதுதான் கனவாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவன் தான் என்பதை மெல்ல தெரிந்துகொள்கிறான். இந்த நேரத்தில் பள்ளியில் காதலும் கைகூடுகிறது. அவளை காதலிக்கும் முன்னாள் காதலனும் இவனுக்கு எதிரியாக பிரச்னையின் தீவிரம் அதிகமாகிறது.

இறுதியில் இளைஞனைக் கொல்ல வந்தவர்களை அவன் எப்படி சமாளித்தான் என்பதுதான் கதை.


கதை சுவாரசியமாகவே இருக்கிறது. பல பாகங்களாக திட்டமிட்டு எடுக்கப்பட்ட கதை போல. அடுத்தடுத்த பாகங்கள் வந்தால்தான் படம் முடியும். இதில் கூறப்பட்ட கதை குறைவுதான். இதிலேயே லோரியன் கோளின் கதை, அவனது எதிரிகளின் சக்தி, மீதியுள்ள லோரியன் வாசிகள் என நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது.


நான்கு பாகம் எடுக்கவேண்டிய படம்.


கோமாளிமேடை டீம்


கருத்துகள்