ஆன்லைன் விளையாட்டுகளில் விராட்கோலி! ஆதித்ய சாவந்த்




Indian Hero of PUBG | DYNAMO Gaming | Aditya Sawant interview - YouTube
ஆதித்ய சாவந்த் -பப்ஜி விளையாட்டு வீரர்





ஆதித்ய சாவந்த்
ஆன்லைன் விளையாட்டில் சூப்பர்ஸ்டார் இவர்தான். பப்ஜி லைவாக விளையாடி ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்தார்.


கிரிக்கெட்டில் விராட்கோலியைப் போல என்று உங்களைச் சொல்லலாமா?

சிரிக்கிறார். விராட்கோலியை தயவு செய்து ஒப்பிட வேண்டாம். நான் இணையம் மூலமாக இ விளையாட்டுகளை விளையாடி வருகிறேன். என்னிடம் இணைய இணைப்பும் போனும் உள்ளது. அதைப் பயன்படுத்தி புதிய விளையாட்டுக்களத்தைக் கண்டுபிடித்தேன். எனது அப்பா ஆசிரியர். அவர் என்னை விளையாட்டு மைதானத்திற்கு அனுப்பி விளையாடச்சொல்லுவார். எனக்கு இணைய மையங்களில் விளையாட்டுகளை உற்சாகத்துடன் விளையாடுபவர்களைப் பார்த்து ஏக்கமாக இருந்தது. எனவே நானும் இணைய விளையாட்டுகளை விளையாடத் தொடங்கினேன்.

அதனை எப்படி ஒளிபரப்பும் யோசனை தோன்றியது?

அப்போது ஒருவர் விளையாடுவதை அப்படியே ஒளிபரப்பினால் என்ன என்று யாரும் யோசித்திருக்க  மாட்டார்கள். அது பிறருக்கு ஆர்வமூட்டுவதாக அமையும என நினைத்தேன். அதனால்தான் யூடியூப் சேனல் தொடங்கி ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி அதனை ஒளிபரப்பத்தொடங்கினேன். நான் இதை தொடங்கும்போது இந்தியாவுக்கு இந்த பாணி புதிது.

ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துவிட்டீர்களே?

2017இல் நான்  பப்ஜி விளையாடத்தொடங்கினேன். மொபைலில் விளையாடும்போது அதற்கான திறன்களை வளர்த்துக்கொண்டேன். இதனால் நிறைய போட்டிகளில் என்னால் வெல்ல முடிந்தது. இதன் காரணமாக எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள். எனது வாழ்க்கையை இன்று விளையாட்டுகளையே தேர்ந்தெடுத்துவிட்டேன்.


எத்தனை மணிநேரம் விளையாட்டுகளை விளையாடிவருகிறீர்கள்.

எனக்கு காலையில் ஆறு மணிக்கு எழுந்து பள்ளிக்கு செல்வது பிடிக்காது. காலையில் 11 மணிக்கு எழுவேன். நான்கு மணிநேரம் விளையாடுவேன். லாக்டௌன் சமயத்தில் எட்டு மணிநேரம் விளையாடி வருகிறேன். ஆன்லைனில் நிர்வாக மேலாண்மை படித்து வருகிறேன்.

இதற்கு உங்களுக்கு கிடைக்கும் சம்பளம் எவ்வளவு?

அதனை நான் உங்களுக்கு சொல்ல மாட்டேன். மாதம் மூன்று ஐபோன் 11 புரோ போன்களை என்னால் வாங்க முடியும். எனக்கு இது போதுமான வருமானம்தான். எனது வீடியோ சேனலில் விளம்பரம் வருகிறது. அதற்கு நன்கொடை கிடைக்கிறது.யாராவது என்னிடம் பேச விரும்பினால் அதற்கும் நான் கட்டணம் ரூ.20 முதல் 10 ஆயிரம் வரை வாங்குகிறேன். திறமையான ஒருவருக்கு இது  ஒன்றும் மோசமான வருமானம் அல்லதானே?

அவுட்லுக்
சௌமித்ர போஸ்

கருத்துகள்