ஆங்கிலம் கற்பதை அரசு தடுக்கவில்லை! - டாக்டர் கஸ்தூரி ரங்கன்
ஆங்கிலம் அறிவதை அரசு தடுக்கவில்லை!
டாக்டர். கே. கஸ்தூரிரங்கன்
முதலில் இருந்த கல்விக்கொள்கைக்கும் இப்போதைய கல்விக்கொள்கைக்கும் என்ன வேறுபாடு?
புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் பிரச்னைகளை தீர்ப்பது என்பது பற்றி தீர்க்கமாக கற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் புதிய பல்வேறு திறன்களை சுயமாகவே அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். தொடக்க கல்வியில் மாணவர்கள் மொழிகளையும், கணிதத்தையும் சிறப்பாக கற்றுக்கொள்ளும் வசதி புதிய கல்விக்கொள்கையில் உள்ளது. உயர்கல்வியை பயில்வதில் இப்போது நிறைய சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் நிறைய மாணவர்கள் ஆராய்ச்சித்துறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
நீங்கள் சமர்பித்த அறிக்கைக்கும் இப்போதுள்ள கொள்கைக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளதா?
எங்களது அறிக்கையில் இருந்த பெரும்பான்மையான அம்சங்கள், கொள்கையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணம், அவர்கள் மாணவர்களுக்கு வழங்குவதாக நாங்கள் குறிப்பிட்ட 50 சதவீத உதவித்தொகை அம்சம், மாற்ற ப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தில் தலையீட்டினால் அரசு மாற்றியது.
கொள்கையில் எவற்றை மாநில, மத்திய அரசு வேகமாக நிறைவேற்றவேண்டும் என்ற நினைக்கிறீர்கள்?
அனைத்து கொள்கைகளின் பலன்களையும் நாம் பார்க்க இரண்டு அரசுகளும் ஒருங்கிணைத்து வேலை செய்வது அவசியம்.
உள்ளூர்மொழியை ஆறாவது வரைதான் படிக்கவேண்டும் என்பது விமர்சனங்களை சந்தித்து வருகிற கொள்கையாக உள்ளதே?
இதில் குழப்பமே இல்லை. பள்ளிகள் எந்த மொழி வழியாக பாடங்களை கற்பிக்கிறார்கள், மாணவரின் தாய்மொழி, மாநில மொழி என்ன என்பதை கல்விக்கொள்கை அடையாளப்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகள் தாம் எந்த மொழியில் பாடங்களை மாணவர்களுக்கு சொல்லித்தருகிறோம் என்பதை பெற்றோர்களுக்கு சரியான முறையில் விளம்பரம் செய்யவேண்டும். உள்ளூர்மொழி, தாய்மொழி, மாநிலமொழி ஆகியவற்றை மாணவர்கள் சிறுவயதில் நன்றாக பயிலவேண்டும் என்பதுதான் கல்விக்கொள்கையின் நோக்கம். ஆங்கிலம் முக்கியமான மொழி. அதனை தவிர்க்குமாறு கொள்கை கூறவில்லை.
பல்கலைக்கழக அதிகாரமின்றி கல்லூரிகள் சுயாட்சியாக இயங்குவதை கல்விக்கொள்கை வலியுறுத்தி உள்ளதே. இதன்காரணமாக நிறைய கல்லூரிகள் மூடப்பட வாய்ப்புள்ளதே?
நாட்டில் தரமின்றி ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்பதை விட சூழலிலிருந்து கற்பது அதிகம். அந்த வசதிகள் கல்லூரிகளிடம் இல்லை என்றால் எப்படி? நீங்கள் கூறும் கல்லூரிகள் குறைந்த அட்மிஷன்களைக் கொண்டவை. இவற்றில் தங்கிப்படிக்கும் வசதிகள் கூட இருக்காது.
பிஸினஸ் ஸ்டாண்டர்டு
டி.இ.நரசிம்மன்
கருத்துகள்
கருத்துரையிடுக