நீரிலுள்ள நச்சை நீக்கும் புதுமையான முறை! - நீர்நிலைகளில் நச்சு ஏற்படுத்தாத புதிய முறை!

 

 

 

Hintersee, Bergsee, Mountains, Ramsau, Alpine, Clouds
cc


 

 

 

நச்சை நீக்கலாம் எளிதாக...

பருவகாலங்களில் மழை நன்றாக பெய்தாலும் அதனை தேக்கி வைக்கும் ஆறு, குளங்கள் மாசுபட்டிருந்தால் அந்த நீரால் நமக்கு அணுவளவும் பயனில்லை. இதற்கு தீர்வாக நீர்நிலைகளிலுள்ள நச்சு வேதிப்பொருட்களை நீக்க உதவும் மேட்ரிக்ஸ் அசெம்பிளி கிளஸ்டர் சோர்ஸ் (MACS) என்ற கருவியை இங்கிலாந்தின் வேல்ஸ் நகரைச்சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக இத்தகைய கருவிகளில் வேதிப்பொருட்களை அடிப்படையாக கொண்ட கரைப்பான்களைப் பயன்படுத்துவார்கள். இந்த கருவியில் அந்த அம்சம் இல்லை. ஸ்வனேசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் பால்மர் தலைமையிலான குழுவினர் மாக்ஸ் என்ற நச்சு நீக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக நீரிலுள்ள நச்சுக்களை நீக்க ஓஸோன் போன்ற வேதிப்பொருட்களை தயாரிப்பார்கள். இதன் தயாரிப்பு முறையே சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதில் கழிவுப் பொருட்களும் வெளியேறும் என்பதால் நாங்கள் இம்முறையை முழுமையாக தவிர்த்து விட்டோம்” என்கிறார் ஆய்வாளர் பால்மர். நச்சுகள் இல்லாத வினையூக்கியாக வெள்ளி அணுக்களைப் பயன்படுத்துகிறார்கள். கரைப்பானாக எப்பொருட்களையும் பயன்படுத்தாமல் நீரை சுத்திகரித்துள்ளனர்.

வேதிப்பொருட்களுக்கு மாற்றாக கூறப்படும் பொருட்களை நீரிலுள்ள மாசுக்களை நீக்குவதில் அவ்வளவு திறன் கொண்டவையாக இல்லை. மாக்ஸ் எனும் இக்கருவி, இந்த நம்பிக்கையை மாற்றக்கூடும். வெள்ளி அணுக்கள் இதில் உருவாக்கப்படுகின்றன. இவை நமது தலைமுடியை விட பத்தாயிரம் மடங்கு மெலிதானவை. இந்த அணுக்களுடன், ஓஸோனை சேர்த்து நீரிலுள்ள வேதிப்பொருட்களை அழிக்கலாம். இம்முறையில் சோதனைக்காக நைட்ரோபெனாலை நீரிலிருந்து அகற்றியுள்ளனர்.

நாங்கள் இச்சோதனை முறையை மேலும் விரிவுபடுத்தி வினையூட்டி, பயோசென்சார், புதுப்பிக்கும் ஆற்றல் மூலங்கள் என பல்வேறு அம்சங்களை இக்கண்டுபிடிப்பில் இணைத்து செயல்பட யோசித்து வருகிறோம்” என்கிறார் ஆய்வாளர் ரிச்சர்ட் பால்மர்.

தகவல்:phys.org

source

https://phys.org/news/2020-06-toxic-chemicals-environmentally-friendly-method.html?utm_source=nwletter&utm_medium=email&utm_campaign=daily-nwletter

கருத்துகள்