சொத்தைக் கைப்பற்ற குடும்பத்திற்குள் நடக்கும் ரத்தக்களறி! - கணேஷ், வசந்த் துப்பறியும் கொலை அரங்கம்

 

 

 People, Knife, Stabbing, Stab, Kill, Murder, Man

 

 

 

 

 

 

 

கொலை அரங்கம்

சுஜாதா


கணேஷ் துப்பறியும், வசந்த் ஏராளமான எசகுபிசகு நையாண்டி செய்யும் கதை.

மௌபரி ரோடில் தொடக்கவிழா காணும் காம்ப்ளக்ஸ்தான் உத்தம்பீனா முத்தமிழ் மன்றம். தொடங்கிய முதல்நாளே இலங்கை அமைப்புகள் பாம் வைக்கின்றன. அடுத்தடுத்த தாக்குதல்கள் பீனா, உத்தம்மை குறிவைத்து நடக்கின்றன. கட்டட தொடக்க விழாவிற்கு போன கணேஷ் - வசந்த் இந்த விவகாரங்களை அவர்களே சுயமாக எடுத்து விசாரிக்கின்றனர். ஏராளமாக கிடைக்கும் சொத்துக்காக உத்தம் அல்லது பீனாதான் கொலைகளை செய்ய முயல்கிறார்கள் என நினைக்கிறார்கள். ஆனால் அப்போது அமெரிக்காவிலிருந்து வரும் உத்தம் பீனாவின் உறவினர் ராஜேந்திரன் மீதும் சந்தேக நிழல் விழுகிறது. அவரை பின்தொடர்ந்து போகும்போது, ராஜேந்திரன் கொலையாகி லிப்டில் கிடக்கிறார். உண்மையில் யார் கொலைகாரன் கணேஷ் அடிபட்டும் வசந்த் முதுகில் குத்துப்பட்டு கண்டுபிடிப்பதுதான் இறுதிக்காட்சி.

கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை சுஜாதாவின் நையாண்டி ரசிக்கவைக்கிறது. அதேநேரம் கொலையை யார் செய்திருப்பார்கள் என்று கணேஷை விட வாசகர்களை குழப்பிவிடுகிறார். பிறருக்கு ஏற்படும் காயங்களை விட உத்தமுக்கு ஏற்படும் காயம் குறைவு எனும்போது நீங்கள் சந்தேகப்பட்டால் அத்தோடு கதை முடிந்தது. ஆனால் அதில் நிலையின்றி பீனா மீது சந்தேகப்பட்டவர்கள் கதையின் இறுதியை படித்தே ஆகவேண்டு்ம்.


கோமாளிமேடை டீம்

நூல்விமர்சனம், சுஜாதா


கருத்துகள்