புல்லட் ப்ரூப் கண்ணாடிகள் எப்படி தயாரிக்கப்படுகிறது?

 

 


அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

தோட்டா துளைக்காத கண்ணாடி எப்படி தயாரிக்கப்படுகிறது?

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த எடுவர்ட் பெனடிக்டஸ் என்ற அறிவியலாளர் நவீன தோட்டா துளைக்காத கண்ணாடியை உருவாக்கினார். இதில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் அடுக்குகள் உள்ளன. தொடக்கத்தில் கண்ணாடி இரண்டு அடுக்கும், நடுவில் பசை ஒன்றை வைத்து வெப்பம், அழுத்தம் கொடுத்து கண்ணாடியை உருவாக்கி வலிமையேற்றினார்கள். துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றால், விரிசல் விழுமே ஒழிய முழுக்க உடையாது.

சல்பியூரிக் அமிலம் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?

உரம் மற்றும் பல்வேறு வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுவதால். இதை விட்ரியோல் எண்ணெய் என்று கூறினர். அனைத்து வேதிப்பொருட்களிலும் கூட சல்பியூரிக் முதன்மை பெற அதன் தலைமை தாங்கும் குணமே காரணம். பதினெட்டாம் நூற்றாண்டில் சோடா தயாரிக்க பயன்பட்டது. தொழிற்சாலைகளில் நீரையும், சல்பியூரிக் ட்ரை ஆக்சைடு என இரண்டையும் ஒன்று சேர்த்தால், சல்பியூரிக் அமிலம் கிடைக்கும்.

தெர்மோபேன் கண்ணாடியை கண்டுபிடித்தது யார்?

வீடுகளில் சாளரத்திற்கு பயன்படும் கண்ணாடி வகையான தெர்மோபேனை 1930ஆம் ஆண்டு சிடி ஹெவன் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர் கண்டுபிடித்தார். சூரியனில் இருந்து வெளியாகும் நீண்ட அலைதூரம் கொண்ட கதிர்வீச்சுகளை தடுக்கும் திறன் கொண்ட கண்ணாடி இது.

சிமெண்ட் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

1756ஆம் ஆண்டு, இங்கிலாந்து பொறியாளர் ஜான் ஸ்மிட்டன், லைம் எனும் கற்களில் களிமண் இருப்பதை அடையாளம் கண்டார். இதற்கு அடுத்து ஜேம்ஸ் பார்க்கர், சிமெண்டை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினார். 1824ஆம் ஆண்டு ஆங்கிலேயரான ஜோசப் ஆஸ்பிடின் போர்ட்லேண்ட் சிமெண்ட் என்ற கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வாங்கினார். லைம் கற்கள், களிமண் என இரண்டையும் கலந்தால் போர்ட்லேண்ட் சிமெண்ட் தயார். இந்த சிமெண்டைப் பயன்படுத்தி ஐரோப்பாவில் ஏராளமான கட்டுமானங்கள் உருவாயின. தொன்மைக் காலத்தில் எகிப்தியர்கள், கால்சினேடட் ஜிப்சத்தை கட்டுமானத்திற்கு பயன்படுத்தினர். இவர்களுக்கு அடுத்து, ரோமானியர்கள் கால்சினேட்டட் லைம்ஸ்டோனை பயன்படுத்தினர்.

சோல்டர் என்றால் என்ன?
குழாய், மின் வேலைகளுக்கு பயன்படுத்தும் பல்வேறு குழாய்களை நிறைய உலோகங்களை பயன்படுத்தி உருவாக்குவதே சோல்டர் எனப்படும். இதில் காரீயம், தகரம் முக்கியமாக இடம்பிடிக்கிறது. வேறு உலோகங்களாக அலுமினியம், காட்மியம், துத்தநாகம், நிக்கல், தங்கம், வெள்ளி , பிஸ்மத், பல்லாடியம், செம்பு, ஆன்டிமோனி ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்