டைனோசர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியது யார்?

 



 அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

காற்று மாசுபாடு என்றால் என்ன?

விவசாயிகள், கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதுதான் காற்று மாசுபாடு என ஒன்றிய அரசு கூறுகிறது. அதெல்லாம் கிடையாது. கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டையாக்சைடு ஆகிய வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதே காற்று மாசுபாடு என்ற வரையறைக்கு பொருந்தும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், குப்பைகள், கழிவுகளை எரித்தல், படிம எரிபொருட்களை பயன்படுத்துதல், இரும்பு உருக்கு ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள் மூலமாகவும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வேளாண்மையை விட தொழிற்சாலை மூலமே அதிக காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்கள் என்னென்ன?

ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், தலைவலி, உளவியல் பிரச்னைகள், நெஞ்சுவலி ஆகியவை ஏற்படும்.

பொல்யூடன்ட் ஸ்டேண்டர்ட் இண்டெக்ஸ் என்றால் என்ன?

மாசுபாட்டு தொகுப்பு பட்டியல். இந்த பட்டியலில் பூச்சியம் முதல் ஐநூறு வரை பிரிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பொறுத்து பாதிப்பை அடையாளம் காணலாம். இந்த அளவீட்டு முறையை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தனர். தேசியளவில் 1978ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.

பசுமைக் குடில், பசுமை இல்ல வாயுக்கள் எவை?

கார்பன் டையாக்சைட், மீத்தேன், குளோரோபுளுரோகார்பன், நைட்ரஸ் ஆக்சைட் ஆகியவை. இவை பூமியில் சூரியனின் வெப்பத்தை விடுவிக்காமல் அப்படியே ஈர்க்கின்றன. இதனால் இயல்பாகவே பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. 1861ஆம் ஆண்டு ஜான் டிண்டால் என்பவர் இதைப்பற்றி முதலில் உலகிற்கு தெரிவித்தார். இவர் கூறியதை ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வன்டே அர்ஹெனியஸ் என்பவர் விரிவுபடுத்தி கூறினார்.

அமிலமழை என்றால் என்ன?
காற்றிலுள்ள சல்பியூரிக், நைட்ரிக் அமிலம் மழை வழியாக மண்ணுக்கு வந்து சேர்வதே அமில மழை ஆகும். இதை, இங்கிலாந்து நாட்டு வேதியியலாளர் ராபர்ட் ஆங்குஸ் ஸ்மித் என்பவர் கண்டுபிடித்து தனது நூலில் கூறினார். ஏர் அண்ட் ரெயின் - தி பிகினிங் ஆப் எ கெமிகல் கிளைமேட்டோகிராபி என்ற இவரது நூல் 1872ஆம் ஆண்டு வெளியானது. அமிலமழை பொழியும்போது, அதனால் காடுகள், பயிர்கள், கட்டுமானங்கள் என பலதும் பாதிக்கப்படும். காடுகளிலுள்ள மரங்கள் வேகமாக அழியும். இதை வால்ஸ்டெர்பென் என குறிப்பிடுகிறார்கள்.

அதிகளவு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் பொருட்கள் எவை?
வாகன பேட்டரிகள், அலுவலக பயன்பாட்டு காகித தாள்கள், ஸ்டீல் கேன்கள் ஆகியவை அதிகளவு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

குளிர்பான அலுமினிய கேன், மறுசுழற்சி செய்யப்பட எத்தனை நாட்கள் தேவை
அறுபது நாட்கள்

இசைக்கிளிங் என்றால் என்ன?
எலக்ட்ரானிக் பொருளை குப்பையில் எறியாமல் திரும்ப பயன்படுத்துவது மற்றும் அதை மறுசுழற்சி செய்வதை இசைக்கிளிங் என்று கூறலாம். எலக்ட்ரானிக் பொருட்களை தூக்கி குப்பையில் எறிந்தாலும் அவற்றில் பதினெட்டு சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

தூக்கி எறியப்பட்ட டயர்களின் பயன்பாடு என்ன?

அவற்றைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரிக்கிறார்கள். அதை டிடிஎஃப் என்கிறார்கள். இப்படி பெறும் எரிபொருளை சிமெண்ட் ஆலை, காகித ஆலைகளில் பயன்படுத்துகிறார்கள். பெரும்பகுதி டயர்கள் குப்பைகளாக நிலத்தில் வீசப்படுகின்றன.

பசுமை எலக்ட்ரானிக் பொருட்கள் சாத்தியமா?

நச்சுப்பொருட்கள் குறைவாக இருப்பது, எளிதாக அதை மேம்பாடு செய்துகொள்ள முடிவது, மறுசுழற்சி செய்த பொருட்களில் ஒன்றை செய்வது, ஆற்றலை குறைவாக பயன்படுத்துவது, செயல்பாட்டில் திறன் கொண்டதாக உள்ளதை பசுமை எலக்ட்ரானிக் பொருட்கள் எனலாம்.

டைனோசர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது யார்?

ரிச்சர்ட் ஓவன் என்ற ஆராய்ச்சியாளர் 1841ஆம் ஆண்டு டைனோசர் என்ற வார்த்தையை தனது அறிக்கையில் பயன்படுத்தினார். அச்சுறுத்தும்படியான பல்லி என்பதே இதன் பொருள். ஓவன், படிம ஊர்வனவற்றை ஆராய்ச்சி செய்து வந்தார்.























































































கருத்துகள்

பிரபலமான இடுகைகள்