ஹென்றி லெண்டரு - விதவைகளை தீர்த்துக்கட்டிய குரூரன்!




Henri Landru’s severed head





அசுரகுலம் - இன்டர்நேஷனல்


ஹென்றி லெண்டரு

பிரான்சைச் சேர்ந்தவர் ஹென்றி. அவசரவேலையாக ஊருக்கு போகும்போதுதான் சாவிக்கொத்தை மனைவியிடம் கொடுத்தார். ஒரே ஒரு விஷயத்தைத்தான் கசியவிட்டார். அனைத்து ரூம்களையும் திறந்துகொள். கடைசி ரூமை மட்டும் திறக்காதே என்றார். அப்படியென்றால் நம் மனதில் என்ன தோன்றுமோ அதே குறுகுறுப்புதான் அவர் மனைவிக்கும். உடனே அவர் தலை தெருவில் மறைந்ததும், மனைவி அந்த அறையை திறந்து பார்த்தார். மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. அந்த  அறை கீழேயுள்ள அறைக்கும் செல்லும் வழி கூடத்தான். அந்த அறையில்தான் ஏழு சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனை பிணங்களிலும் கழுத்து மட்டும் அறுக்கப்பட்டிருந்தன.


பார்சி இனத்தைச் சேர்ந்த நாற்காலி  விற்பவராக இருந்தார். ஓவியங்களையும் வரைந்து கொண்டிருந்தார். சின்ன வயதில் தன் சகோதரியோடு பாலுறவு வைத்திருந்தார். நான்கு குழந்தைகளையே இம்முறையில் பெற்றெடுத்தார். ஆனால் அவர்களை வளர்க்க காசு வேண்டுமே?

பல்வேறு தில்லுமுல்லுகளை செய்யத்தொடங்க சிறை வாசம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை கிடைத்தது. சந்தோஷமாக வாழ வேண்டும்? என்ன செய்வது? வசதியான விதவைப் பெண்களை மோசடி செய்வது சரியான வழி என முடிவுக்கு வந்தார். முதல் உலகப்போர் காலம். இதனால், நிறைய பெண்கள் விதவையாக திரிந்த வேதனையாக காலகட்டம். சரியான பெண்களைத் தேர்ந்தெடுப்பது முதல்பணி. அடுத்து அவர்களை புகழ்ந்து பேசி வளைப்பது இரண்டாம் பணி, மூன்றாவது அவர்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். பெண்களின் நம்பிக்கையைப் பெற்றாலே நிதியுதவி கிடைத்துவிடும். முழுக்க பொருளாதாரத்தை கைப்பற்றியவுடன் பெண்களை வைகுண்டத்திற்கு அனுப்பிவிட்டு, உடல்களை ஆதாரமின்றி எரித்துவிட்டு சொத்துக்களோடு எஸ்கேப்தான். இப்படியே பத்து பெண்களைப் போட்டுத் தள்ளினார் ஹென்றி.


1914- 19 வரையிலான காலகட்டத்தில் இந்த மரணங்களை நிகழ்த்தினார். பிடிபட்டது கூட தற்செயலான விதவை பெண்களின் உறவினர் ஒருவர் சந்தேகப்பட்டு புகார் கொடுத்த தால்தான். புகார் கொடுத்தால் மட்டும் ஒருவரை சிறை வைக்க முடியுமா? ஆதாரம் வேண்டுமே? பல பெண்களிடம் பல பெயர்களில் பழகி வந்தார் ஹென்றி. அதை நினைவு வைத்துக்கொள்ள ஒரு நோட்டில் எதார்த்தமாக எழுதி வைத்திருந்தார். அது போலீஸ் கையில் கிடைத்தது. ஹென்றியின் தலைவிதியும் முடிவுக்கு வந்தது.

1921ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று ஹென்றியின் கொலைகளுக்கு தீர்ப்பு. கில்லட்டினால் தலையை வெட்டி மரண தண்டனை. தண்டனை நிறைவேற்றப்பட்டபின் அவரது தலை கலிஃபோர்னியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.


நன்றி - ஆல்தட்இஸ் இன்ட்ரஸ்டிங் வலைத்தளம்

கில்லர்ஸ் நூல்