இந்திய அரசின் புதிய சட்டத்திருத்தங்கள்!






it's always sunny rules GIF


புதிய சட்டத் திருத்தங்கள்!

1951 முதல் சட்டம்

எஸ்சி, எஸ்டி ஆகிய பட்டியலினத்தவருக்கான சிறப்புச் சலுகைகள் அளிக்கும் சட்டம் இது. சட்டம் 15 இன் கீழ் வருகிறது. பின் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டம் 19இன் கீழ் வந்தது. 31 ஏ, 31பி ஆகிய சட்டங்கள் நிலங்களை பாதுகாக்க உருவானவை.

24வது சட்டத்திருத்தம், 1971

நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மாற்றும் அதிகாரம் உண்டா என்பது போன்ற விவாதம் எழுந்தது. கோலக்நாத் எனும் வழக்கில் இந்த சட்டத் திருத்தம் உருவானது. அரசியலமைப்பை மாற்றும் சட்டத்திருத்தை குடியரசுத்தலைவர் மாற்றுவதற்கு அதிகாரம் உள்ளது என சட்டத் திருத்தம் உருவானது.


26வது சட்டத்திருத்தம்

இங்கு, தனியுரிமை சொத்துகளைப் பாதுகாக்கும் சட்டம். மாநிலங்களை, சமஸ்தானங்களை ஆண்ட ஆட்சியாளர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் சட்டம் இது.

1985ஆம் ஆண்டு 52ஆவது சட்டத்திருத்தம்

இது கட்சிக்காரர்கள், பிற கட்சிகளுக்கு மாறி பதவிகளை அனுபவிப்பதை தடை செய்கிறது. ஆம் கட்சித்தாவல் தடைச்சட்டம்தான். இதை இன்று பாஜக அரசு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.

1989, 64 வது சட்டத்திருத்தம்

வாக்களிக்கும் வயது 21லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.


1995, 77 வது சட்டத்திருத்தம்

இது பட்டியலினத்தவரின் இட ஒதுக்கீடு பற்றியது.

2003, 91 வது சட்டத்திருத்தம்

மத்திய, மாநில அரசுகளில் இருந்து 15 சதவீத உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையில் இடம்பெறுவதை இச்சட்டம் உறுதி செய்கிறது.

2014, 99வது சட்டத்திருத்தம்

தேசிய நீதித்துறை கமிஷன், உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பை ஏற்றது. பின்னர் இச்சட்டத்தை உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது.

2016, 101 வது சட்டத்திருத்தம்

இச்சட்டப்படிதான் ஜிஎஸ்டி வரி அமலானது. இதனால் நாடு என்னானது என்பது உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறோம்.

நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ்