விமானத்தில் ஜன்னல்கள் வட்டமாக இருப்பது ஏன்?
சாகச விளையாட்டு பற்றி சொல்லுங்கள்?
விங் சூட் என்ற ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த வகை உடைகள் 1930இல் உருவாக்கப்படத் தொடங்கிவிட்டன. ஹெல்மெட், பறவைகளின் இறக்கை போன்ற அமைப்புகளுடன் ஹெலிகாப்டரிலிருந்து எட்டி குதித்தால் போதும். இதில் ஒருவரின் வேகம் மணிக்கு 165கி.மீ. ஆகும். உடலை சரியானபடி அமைத்துக்கொண்டால் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறந்து நிலத்தை அடையலாம்.
இன்றைய விங் சூட்டை பின்லாந்து நா்ட்டைச் சேர்ந்த ஜாரி குவாஸ்மா என்பவர்தான் உருவாக்கினார். பாய்ண்ட்பிரேக் என்ற படத்தில் விங் சூட்டில் குழுவாக பறக்கும் காட்சி வரும். அதைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் உடலை எப்படி கட்டுப்படுத்தி வேகத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் செய்கிறார்கள் என்பதை அறியலாம். பறவைகள் காற்றில் பறப்பதற்கும், அந்த திறமை இல்லாத மனிதர்கள் காற்றில் பறப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. விங் சூட்டின் வடிவத்தை ஏரோபில் என்று கூறு்வார்கள்.
ஒலி வெவ்வேறு ஊடகங்களில் செல்லும்போது வேகம் மாறுபடுவது ஏன்?
ஊடகங்களில் அடர்த்தி மாறுபடும்போது ஒலியின் தன்மை மாறுபடுகிறது. ஒலி திடப்பொருளை விட திரவத்தில் வேகமாக செல்லும். வாயுவில் அதைவிட மெதுவாக செல்லும். அறைவெப்பநிலையில் காற்றில் 343 மீட்டர் வேகத்தில் செல்லும் என்றால் நீரில், நொடிக்கு 1480 மீட்டர் வேகத்தில் செல்லும்.
தோலில் அரிப்பு ஏற்படுவது ஏன்?
தோலில் வலி, அரிப்பு ஏற்படுவது உடலில் என்ன ஏற்பட்டுள்ளது என்பதை நமக்கு தெரிவிக்கத்தான். நமக்கு தோலில் எரிச்சல், வீக்கம் ஏற்படாதபோது, பூச்சி, விலங்கு கடித்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை உணரமுடியாது. உடலில் ஏற்படும் மாற்றங்கள், மூளைக்கு தகவல்களாக அனுப்பப்படுகிறது.
விமானத்தில் ஜன்னல்கள் வட்டமாக இருப்பது ஏன்?
அழகாக இருப்பதற்காக அமைக்கப்படவில்லை. முதலில் விமானத்தில் உள்ள ஜன்னல்கள் சதுரமாகவே அமைக்கப்பட்டன. ஆனால் அதிக உயரத்தில் விமானம் செல்லும்போது, சதுர வடிவில் இருக்கும் ஜன்னல்கள் பலவீனமான பகுதியாக பார்க்கப்பட்டடன. எனவே அதை சரிசெய்ய வட்டவடிவில் ஜன்னல்கள் அமைக்கப்பட்டன.
how it works magazine
கருத்துகள்
கருத்துரையிடுக