சர்வாதிகார அதிபரின் கோமாளித்தனமான உரைகள்! - பன் பட்டர் ஜாம் - மின்னூல் வெளியீடு- அமேஸான்
பொதுவாகவே சர்வாதிகாரிகள் ஊடகங்களை மிக திறமையாக தந்திரமாக கையாண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். இதன்படி மெகந்தியா நாட்டு அதிபர் ******** மாதம்தோறும் மக்களுக்கு வானொலி வழியாக உரையாற்றுகிறார். நாட்டின் பிரச்னைகளை பேசுவதை விட அதை மடைமாற்றி தனது கனவுகளைப் பற்றியும், தொழிலதிபராக உள்ள நண்பர்களின் முன்னேற்றங்களையும் பேசுகிறார். அதனை சாத்தியப்படுத்துவதால் என்ன நன்மை என்பதையும் வெளிப்படையாக சில சமயங்களில் உளறுகிறார்.
நாடு முழுக்க பிரிவினை, சீரழிவுகள் இருந்தாலும் அதிபரின் சொத்துக்களும் அவரின் இனாம் தாரர்களான தொழிலதிபர்களும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதுபற்றிய பகடியான சில சமயம் கோபம் வரும்படியான பதினெட்டு உரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.
பன்பட்டர்ஜாம் நூலை வாசிக்கும்போது, சமகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு காரணம், நாம் கேள்வி கேட்காமல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதே என்று உணருங்கள். சர்வாதிகார, ராணுவ ஆட்சி நடைபெறும் தேசங்களை உதாரணமாக கொண்டு எழுதப்பட்ட நூல் இது.
இதற்கான உத்வேகத்தை திரைப்படக் கலைஞர் சார்லி சாப்ளின் வழங்கினார். நூலின் அட்டைப்படத்தை அழகுற வரைந்த கதிர் அவர்களுக்கும், உள்படங்களுக்கு கேலிச் சித்திரங்களை தாராள மனதுடன் வழங்கிய டங்கா பாலமுருகன் அவர்களுக்கும் என்றென்றைக்குமான எங்களது கோமாளிமேடை குழுவினரின் அன்பு...
அட்டைப்பட ஓவியம் - கார்டூன் கதிர்
உள்பக்க ஓவியங்கள் - டங்கா பாலமுருகன்
நூலை வாசிக்க...
https://www.amazon.in/dp/B09WLSJ5QB
ஸ்கேன் செய்யுங்க...
சிறப்பு நன்றி
கணியம் சீனிவாசன், தமிழ் லினக்ஸ் குழுவைச் சேர்ந்த மோகன் ராமன்
கருத்துகள்
கருத்துரையிடுக