பனிச்சிறுத்தையை அழிவில் இருந்து காக்கும் உயிரியலாளர் - முகமது

 






”விவசாயிகளுக்கு உதவி பனிச்சிறுத்தையை காக்கிறேன்”


உலகில் பனிச்சிறுத்தைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான். அவை, இங்கும் அழியும் நிலையில்தான் உள்ளது. உணவுக்காக, அங்குள்ள விவசாயிகளின் பண்ணைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மனிதர்களால் எளிதாக கொல்லப்படும் நிலையில் பனிச்சிறுத்தை உள்ளது. 

உயிரியலாளரான முகமது, பனிச்சிறுத்தை இனத்தைக் காக்க முயன்று வருகிறார். இந்த விலங்கு பற்றி கிராமத்தினருக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார். கூடவே விவசாயிகளின் வளர்க்கும் விலங்குகளுக்கு காப்பீடும், தடுப்பூசியும் கிடைக்க உதவினார்.  2013ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு நாடுகளில் உலக பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி பனிச்சிறுத்தைகள் வாழும் 12 நாடுகள் அடையாளம் காணப்பட்டன.  

பாகிஸ்தானிலுள்ள பனிச்சிறுத்தை இனத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மக்கள் ஆதரவு ஆகியவற்றை முகமது ஒருங்கிணைத்து வருகிறார். பாதுகாப்பு பணியை மேலாண்மை செய்ய, 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி  அளித்துள்ளார். விலங்குகளை வளர்ப்பவர்களுக்கு நஷ்டம்  ஏற்படாமல் பாதுகாப்பதன் மூலமே பனிச்சிறுத்தையைக் காக்கலாம் என்பதை முகமது அறிந்துள்ளார். 

”2010ஆம் ஆண்டு மேய்ச்சல் விலங்குகளைக் கொண்ட விவசாயி ஒருவரைச் சந்தித்தேன். அவர், பனிச்சிறுத்தையின் தாக்குதலில், ஒரே நாளில் ஐம்பது ஆடுகளை இழந்திருந்தார். ஆடுகள்தான் அவரது சொத்துகள். இப்பொருளாதார இழப்பிலிருந்து மீளவே அவருக்கு அதிக நாட்கள் தேவைப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதன் மூலமாக பனிச்சிறுத்தையைக்  காக்க முயல்கிறேன்”,  என்றார் இயற்கை செயல்பாட்டாளர் முகமது அலி நவாஸ்.  

தகவல்

Whitleyaward.org

https://www.natgeokids.com/za/discover/animals/general-animals/conservation-heroes-whitley-awards/

https://whitleyaward.org/winners/a-landscape-level-approach-to-conserve-the-snow-leopards-of-pakistan/

கருத்துகள்