மூளையின் கட்டளைக்கு ரோபோக்கள் பணிந்தால்...

 











மூளையின் கட்டளைக்கு பணியும் ரோபோ!

ஸ்விட்சர்லாந்து நாட்டின் தொழில்நுட்ப மையம் (EPFL), செயல்பட்டு வருகிறது. இதிலுள்ள  இரண்டு குழுக்கள்  மூளையின் கட்டளைக்கு ஏற்ப, ரோபோக்கள் செயல்படும் ஆய்வை செய்துவருகிறார்கள். இந்த ஆய்வில் கிடைக்கும் முடிவுகள், கை, கால் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு (Tetraplegic) உதவும். 

மனிதர்களின் மூளையில் உருவாகும் மின்தூண்டல்களுக்கு ஏற்ப ரோபோக்களை செயல்பட வைக்க முயன்று வருகிறார்கள். இவ்வகையில், மாற்றுத்திறனாளிகள், எளிதாக பிற மனிதர்கள் போல தினசரி வேலைகளை தாங்களே செய்யலாம்.  

பேசுவது, உடல் பாகங்களை அசைப்பது என எளிதான விஷயங்களைக் கூட செய்யமுடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களை ரோபா ஆய்வில் பங்கேற்க வைத்து, சிறு வேலைகளை கொடுத்து சோதித்து வருகிறார்கள்.

 ”விபத்தின் காரணமாக தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். இதனால் உடலின் பெரும்பாலான பாகங்கள் செயலிழந்துபோய்விட்டன. இதனால் ஒரு சிறிய பொருளை பிடிப்பது போன்ற மோட்டார் இயக்கங்கள் கூட கடினமானதாக உள்ளது. இவர்களின் வேலைகளை இனி ரோபோ புரிந்துகொண்டு சாமர்த்தியாக செய்யும்” என்றார்  ஆய்வாளர் ஆடா பில்லார்ட். ரோபோக்கள் மாற்றுத்திறனாளிகளின்  மூளை கொடுக்கும் சமிக்ஞைகளை புரிந்துகொண்டு செயல்பட்டு அவர்களின் உதவியாளர்களாக இருக்கும். 

பேராசிரியர்கள் பில்லார்ட் மற்றும் மிலன் ஆகிய இரு ஆராய்ச்சி குழுவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் ஆய்வுமுறையில், பயனரின் மூளை சமிக்ஞைகள்தான் பயன்படுகிறது. இதில் அவரின் பேச்சு அல்லது தொடுதல் அவசியமில்லை. இக்குழுவினரின் ஆய்வு, கம்யூனிகேஷன் பயாலஜி இதழில் வெளியாகியுள்ளது . நோயாளியின் தலையில் பொருத்தப்படும் கருவி மூலம் மூளையின் சமிக்ஞைகளை ரோபோ புரிந்துகொள்கிறது. தவறான செயல் என்றாலும் அதுவும் அதன் அல்காரிதத்தில் சேர்க்கப்படுகிறது. நான்கே முறைகளில் தனது தவறை ரோபோ திருத்திக்கொள்கிறது. சோதனைகளுக்காக பில்லார்ட் குழுவினர், ரோபோ  கரம் ஒன்றைத் தயாரித்து சோதித்து வருகின்றனர்.  அடுத்ததாக, மூளை சமிக்ஞைகள் மூலமாக வீல்சேரை இயக்கமுடியுமா என்றும் ஆய்வுகளை செய்ய திட்டமிட்டு வருகின்றனர். 

தகவல்

The week magazine

https://www.theweek.in/news/sci-tech/2021/12/28/mind-controlled-robots-now-one-step-closer-to-reality.html

pinterest





 

கருத்துகள்