சத்யஜித்ரே - மறக்கமுடியாத சினிமாக்கலைஞன்









 

சத்யஜித்ரேவுக்கு நிறைய அடைமொழிகள் உண்டு. சினிமா இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இதழ் ஆசிரியர், ஓவியர், சித்திர எழுத்துக்கலைஞர், இசை அமைப்பாளர் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். 

1921ஆம் ஆண்டு மே 2 அன்று பிறந்தவர், சத்யஜித்ரே. வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிறந்தார். இவரது குடும்பமே அன்று வங்காளத்தில் புகழ்பெற்றதுதான். பத்து தலைமுறையாக புகழ்பெற்ற மனிதர்கள் அந்த குடும்பத்தில் இருந்து வந்தனர். சத்யஜித்ரேவின் தாத்தா, உபேந்திர கிஷோர் ரே எழுத்தாளராக இருந்தார். கூடுதலாக, அன்றைய பிரம்ம சமாஜத்தின் தலைவராகவும் இருந்தார். சத்யஜித்ரேவின் தந்தை ஓவியராக இருந்தார். இவர் குழந்தைகளின் புத்தகங்களுக்கு நூல்களுக்கு படம் வரைந்துகொண்டிருந்தார். 

ரே, பாலிகுங்கே அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் இருந்த பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் பட்டம் பெற்றார். 

ரேவுக்கு கலைகளின் மீது பெரும் ஆர்வம் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.  இதன் மூலமாக வங்காள மொழி நூல்களுக்கு புத்தக அட்டைகளை வடிவமைத்தார். பதேர் பாஞ்சாலி நூலுக்கும் அட்டைப்பட வடிவமைப்பு ரேதான். இதனை எழுதியவர், பிபுடிபூஷன் பந்தோபாத்யாய். 







1955ஆம்ஆண்டு பதேர் பாஞ்சாலி படத்தை உருவாக்கினார். பல்வேறு விமர்சனங்களை படம் சந்தித்தது. இதனை தொடர் படங்களாகவ ரே உருவாக்கினார். 1956இல் அபராஜிதோ என்ற படமும், 1959இல் அபுர் சன்சார் என்ற படமும் வெளியானது. 

ரே தனது திரைப்பட உருவாக்கத்திற்காக 36 தேசிய விருதுகளை வென்றார். தங்கச்சிங்கம், தங்க கரடி, இரண்டு வெள்ளி கரடி விருதுகள் இவை தவிர உலகளவிலான பல்வேறு விருதுகளை வென்றார். 1992 ஆம் ஆண்டு அகாடமி கௌரவ விருதும் கிடைக்கப் பெற்றார். 

இந்திய அரசு எதுவுமே செய்யவில்லை என கூறக்கூடாது அல்லவா? 1992ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதை ரேவுக்கு அறிவித்தது. இந்த ஆண்டுதான் ரேவுக்கு உடல்நலம் குன்றியது. இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டன. 1992ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 அன்று ரே காலமானார். 2022ஆம் ஆண்டு ரே இறந்துபோய் 30 ஆண்டுகள் ஆகின்றது. 

tell me why



கருத்துகள்