கிழிந்த பட்டம் போல பறக்கும் காதல் கதை! - காதல் இது காதல்

 

 

 

Pattam Pole Malayalam Movie Stills | Hotstillsupdates ...

 காதல் இது காதல்

 அழகப்பன்

 

malayalam movies: Pattam Pole

மலையாளத்தில் பட்டம் போலே என்ற பெயரில் வெளியான படம். தமிழில் காதல் இது காதல் என காதல் பேசியிருக்கிறது. 

 

படத்தில் தொடக்கமும் முடிவும் ஒன்றுபோலவ இருக்கவேண்டும் என நினைத்திருப்பதைத் தாண்டி படத்தில் எதுவும் இயல்பாகவே இல்லை. 

ஐயர் குடும்பத்து பையன் கார்த்திக்குக்கும், கிறிஸ்துவக் குடும்பத்து பையன் மன்னிக்கவும் பெண் ரியாவுக்கும் வரும் காதலும், ஈகோவும் இன்னபிற பஞ்சாயத்துகளும்தான் படத்தின் கதை. 

எஞ்சினியரிங் படித்துவிட்டு அதற்கு தொடர்பில்லாத ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்பை படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறார் கார்த்திக். அதைப்போலேவே ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியில் வேலைதேடி கொண்டிருக்கிறாள் ரியா. இருவருக்கும் மனதிற்கு பிடித்திருக்கிறது. எனவே கல்யாணம் செய்துகொண்டு தனியாக வாழ்வோம் என கிளம்புகிறார்கள். வீட்டில் கலவரம் ஆகிறது. ஊட்டியில் சொகுசு ஹோட்டலில் தங்கும் கார்த்திக் ரியா ஜோடிக்கு பணம் பிரச்னையாக இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டு ஊர் வந்து சேர்கிறார்கள். 

 கார்த்திக் ரோசாரியோ என்ற கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். டீம் லீடர் ஆகிறார். அதே கம்பெனியில் தற்செயலாகத்தான் ரியாவும் வேலைக்கு சேர்கிறாள். ஈகோ காரணமாக ஊட்டியிலிருந்து பேசாமலிருக்கிறார்கள் ரியாவும் கார்த்தியும். ஆனால் அவர்கள் பெற்றோர் இருவரையும் நன்றாக நடத்துகிறார்கள். இருவருக்கும் பிரியம் என்றால் கல்யாணம் செய்து வைக்க கூட தயார் என ரியாவின் தந்தை மேத்யூஸ் முன்னுக்கு வருகிறார். ஆனால் கார்த்திக்கின் பாட்டி அதனை மறுக்கிறார். அதற்கு முன்னரே கார்த்திக் ஈகோவிற்கு இடம்கொடுத்து காதலை மறுக்கிறார். மெல்ல அலுவலகத்தில் ரியாவுக்கு கார்த்திக் மீது கவனம் திரும்புகிறது. கார்த்திக்குக்கும்தான். அந்த நேரம் பார்த்து ரியாவுக்கு பிரான்ஸ் மாப்பிள்ளை ஜேன்சன் கிடைக்கிறார். கார்த்திக்கிற்கு கும்பகோணம் வரலட்சுமி. இறுதியில் ரியாவும் கார்த்திக்கும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் சலிப்பு தரும் படத்தின் இறுதிப்பகுதி. 

துல்கர் சல்மான், மாளவிகா மோகனன் ஆகியோரை இப்படிக்கூட நடிப்பு என்ற பெயரில் வீண்டிக்க முடியுமா என்று தெரியவில்லை. இவர்களின் கார்த்திக், ரியா பாத்திரங்கள் தொடக்கம் முதலே சரியாக வடிவமைக்கப்படவில்லையோ என்று தோன்றும்படி இருக்கிறது. இளவரசு நன்றாக நடித்திருக்கிறார். கும்பகோணம் நன்றாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. கேரளப்பகுதிகளில் எடுக்கப்பட்டு பாடல் காட்சிகள் அனைத்தும் பிரமாதம். 

எம். ஜெயச்சந்திரன் இசையில் மழையே தூமழையே என்ற பாடல் பிரமாதமாக இருக்கிறது. படம் முடிந்தபிறகும் காதில் ஒலிக்கும் பாடல் இதுவே. 


இது காதலா என்று குழப்பமாகவே இருக்கும்


கோமாளிமேடை டீம்



 

 

 

 

 

 

 

 


 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்