என் மீது அவதூறு கூறியவர்களை சட்டப்படி போராடி வெல்வேன்! - ரியா சக்ரபர்த்தி

 

 

 

https://images.indiawords.com/wp-content/uploads/2018/02/beautiful-hd-wallpaper-of-Rhea-Chakraborty.jpg
ரியா சக்ரபர்த்தி


 

 

ரியா சக்ரபர்த்தி, இந்தி நடிகை

சுசாந்தின் அப்பா பற்றி சொல்லுங்கள்.
சுசாந்த சொன்ன விஷயங்களின் படி அவருக்கும் அவரது அப்பாவிற்கும் உறவு சரியாக இல்லை. சுசாந்த் அவருடைய இளம் வயதிலேயே அப்பா, அவரது அம்மாவிட்டு பிரிந்துசென்றதை பார்த்திருக்கிறார். சுசாந்த் அவரது அம்மாவுக்கு நெருங்கியவராக இருந்திருக்கிறார். நான் சுசாந்தை சந்தித்தது 2019இல். அப்போது அவர் அவரது தந்தையை ஐந்து ஆண்டுகளாக சந்திக்கவில்லை என்பதை அறிந்துகொண்டேன்.

சுசாந்த மனச்சோர்வில் இருந்ததுதான் நீங்கள் அவரை விட்டு பிரியக்காரணமா?

 
அவர் 24 மணிநேரமும் மனச்சோர்வில் இல்லை. சில நாட்கள் அப்படியிருந்தார் என்பது உண்மை. என்னிடம் அவர் தன்னுடைய உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். நானும் சுசாந்திடம் அப்படித்தான் பழகினேன். நீங்கள் ஒருவரைப் பற்றி அக்கறைப்படும்போது, அவர் சிரமமான சூழலில் இருந்தால் எப்படி அவரை விட்டு பிரிவீர்கள். இந்த முறையில் உருவாகும் உறவு மிக அழுத்தமானது. நோயாளிக்கும் உதவும் நர்ஸ், அல்லது அவரது அம்மா என்று வைத்துக்கொண்டால் கூட குறைகளை பொருட்படுத்தாமல் அவர்களுடன்தானே இருப்பார்கள்.

நீங்கள் சுசாந்தின் வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவரது வேலையாட்களை மாற்றியதாக கூறப்படுகிறதே? உண்மையா?

இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. நான் சுசாந்தை சந்திக்கும்போதே அவரது வீட்டில் சித்தார்த் பிதானி தங்கியிருந்தார் வீட்டில் இருந்த மேனேஜர் மிராண்டாவை நியமித்திருந்தார்கள். சமையல்கார ர் கேசவ், வீட்டை பார்த்துக்கொள்ளும் நீரஜ் ஆகியோர் அங்கு இருந்தனர். இவர்களை சுசாந்த்தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

வளர்ந்து வந்த நடிகர் சுசாந்தை உங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறதே?
இதுபற்றி ரூமி ஜாஃப்ரியிடம்தான்  நீங்கள் கேட்கவேண்டும். ஜூலை 2019இல் சேரை படப்பிடிப்பில் இருந்தபோது சுசாந்த் என்னைப் பார்க்க வந்தார். அப்போது அங்கு ரூமி இருந்தார். அவர்களுக்கு நாதிரா பாபர் நாடக குழுவில் நடித்து முதலிலேயே அறிமுகம் இருந்த து. லைலா மஜ்னு என்ற நாடகத்தில் என்னுடன் நடிக்க விரும்புவதாக சுசாந்த் ரூமியிடம் சொன்னார். மேலும் அன்னு கபூர் அதனை இயக்குவதாகவும், ரூமி அதை எழுதுவதாகவும் திட்டமிட்டனர். மேலும் சுசாந்த் தன்னையும் என்னையும் பாத்திரங்களாக வைத்து ரூமி படம் ஒன்றைத் தொடங்கவும் ரூமியிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்காகத்தான் 15 கோடி சம்பளமாக  பேசப்பட்டதா?

வாசு பக்னானி சுசாந்திற்கு சம்பளத்தை 15 கோடி என வாய்மொழியாக பேசினார். அக்ரிமெண்ட் ஏதும் கையெழுத்தாகவில்லை. பொதுமுடக்கம் காரணமாக திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்றது பிப்ரவரி 2019 என நினைக்கிறேன். சுசாந்த், அவரது அக்கா, மாமாவிடம் இதுபற்றிய செய்தியை பகிர்ந்துகொண்டார் என்று நினைவிலுள்ளது.

உங்களுக்கு போதைப்பொருட்கள் விற்கும் ஆட்களுடன் தொடர்புள்ளது என்று கூறப்படுகிறதே?

இந்த குற்றச்சாட்டு ஒன்றுதான் மிச்சமுள்ளது. நீங்கள் எங்கள் குடும்பத்துடன் என்னை சுட்டுத்தள்ளவேண்டும் அல்லது நாங்களே தற்கொலை செய்துகொள்ளவேண்டும். போதைப்பொருட்கள் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

வீட்டைப் பார்த்துக்கொள்ளும் மிராண்டா உங்களுக்கு வாட்ஸ் அப் வழியாக அனுப்பிய செய்தியில் டிரக் தீர்ந்துவிட்டது என்று கூறியிருக்கிறாரே? போதைப்பொருட்களை பயன்படுத்தியது யார்?

ஒருவர் இறந்தபிறகு அவரைப பற்றி நான் இப்படி சொல்வது கடினமானது. என்னை சந்திக்கும் முன்னரே சுசாந்திற்கு மரிஜூவான புகைக்கும் பழக்கம் இருந்தது. அவர் அதனை தினசரி பயன்படுத்தி வந்தார்.  நான் அவரது பழக்கத்தை கட்டுப்படுத்த முயன்றேன். ஆனால் சுசாந்த தனக்கு பிடித்த விஷயங்களை அவர் எப்போதும் போல செய்து வந்தார்.

ஜூன் 8, 14 தேதிகளில் சுசாந்த் உங்களை தொடர்பு கொண்டாரா?

ஜூன் 9 அன்று எப்படி இருக்கிறாய் பேபு என செய்தி அனுப்பினார் சுசாந்த். ஆனால் போனில் தொடர்பு கொண்டு பேசவில்லை. நான் அப்போது சோகமாக இருந்தேன். அவருக்கு நான் தேவைப்படவில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மேலும் அவருக்கும் அவரது அக்காவிற்கும் இடையில் நான் நிற்கவிரும்பவில்லை. ஆனால் அவர் எங்களுடைய குடும்ப குரூப்பில் இணைந்திருந்தார். என்னுடைய சகோதரருடன் தொடர்ச்சியாக இணைந்திருந்தார். நான் எப்படியிருக்கிறேன் என்று கேட்டிருந்தார். இந்தக்கேள்வியை அவர் என்னிடம் கேட்டிருந்தால் நான் சுசாந்தின் பின்னால் எப்போதும் நின்றிருப்பேன்.

பினவறைக்கு சென்று ஐயம் சாரி பாபு என்று சுசாந்தின் பிணத்தைப் பார்த்து சொல்லியிருக்கிறீர்கள்.?

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை இழந்துவிட்டார். அவருக்கு நான் வேறென்ன சொல்லமுடியும்? இன்று சினிமாவில் அவர் செய்த சாதனைகள், அவரின் புத்திசாலித்தனம், தாராளகுணம் என அனைத்துமே நகைச்சுவையாக, தவறாக திரிக்கப்படுகிறது. நான் இதற்கு என்னதான் சொல்வது?

இந்தி திரைப்பட உலகில் உள்ள நெப்போடிசம் காரணமாக சுசாந்த் பலியானதாக கூறப்படுகிறது. அவர் இதைப்பற்றி உங்களிடம் எப்போதேனும் கூறியிருக்கிறாரா?

சோன்சிரியா, சிச்சோரே ஆகிய படங்களில் நன்றாக நடித்திருந்தார். அதற்காக அவரது பெயர் சினிமா விருதுகளில் இடம்பெறவில்லை என்பதில் வருத்தம் கொண்டிருந்தார். அப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

உங்களுக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியிருக்கிறதா?

ஆம். நான் மட்டுமல்ல எங்கள் நடுத்தர வர்க்க குடும்பம் முழுவதுமே தற்கொகை அல்லது யாராவது எங்களை சுட்டு கொன்றால் தேவலை என்று தோன்றியிருக்கிறது. மரியாதை, மானம் இல்லாதபோது வாழ்வில் என்ன முக்கியத்துவம் தேவை? போதைப்பொருள் விற்பனையாளர், கொலைகாரி என்று தூற்றப்பட்டேன். இவை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்.

நீங்கள் இதற்கு எதிராக போராடுவீர்களா?

ஒருவருக்கு பிடித்தமானவரோடு வாழ நினைத்த, வாழ்ந்த பெண்களை அவதூறுக்கு உள்ளாக்குபவர்களை நான் நிச்சயம் தோற்கடிப்பேன்.
india today
 

மொழிபெயர்ப்பு நேர்காணல், சுசாந்த்சிங் ராஜ்புத், தற்கொலை, ரியா சக்ரபர்த்தி, போதைப்பொருட்கள், கொலை, நெப்போடிசம்

கருத்துகள்