விநோதரச மஞ்சரி தொகுப்பு 1: ரோனி ப்ரௌன்
விநோதரச மஞ்சரி தொகுப்பு: ரோனி ப்ரௌன்
ஐன்ஸ்டீனை முந்திய
ஐக்யூ சிறுவன்!
முக்கு கடை அண்ணாச்சி
கடையில் வாங்கிய பால்,
ரஸ்குக்கான காசு போக பேலன்ஸ் எவ்வளவுப்பா தரணும்? என்றாலே பேப்பரும் பேனாவையும் நீ எங்கே என் அன்பே! என
தேடும் நம் ஐக்யூவை வைத்து அண்ணாச்சியையே ஜெயிக்க முடியாது. இந்த
லட்சணத்தில் ஐன்ஸ்டீனை எல்லாம் நினைத்து பார்க்கலாமா? ஆனால் இங்கிலாந்தைச்
சேர்ந்த 11 வயது சிறுவன் இறந்தகால, சமகால
ஜீனியஸ்களையும் சிம்பிளாக தன் ஐக்யூவால் அதிரடியாக ஓவர்டேக் செய்திருக்கிறான்.
இங்கிலாந்தைச்
சேர்ந்த அர்னாவ் சர்மாதான் அந்த ஐக்யூ அறிவாளி. ஐக்யூ டெஸ்ட் நடத்தும் மென்சா என்பது
1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புகழ்பெற்ற அறிவியல் அமைப்பு.
இதில் கலந்துகொண்ட இந்தியப் பூர்வீகச் சிறுவனான அர்னாவ் சர்மா. தேர்வு மதிப்பெண், ரீசனிங் திறன் மூலம் ஐன்ஸ்டீன்,
ஸ்டீபன் ஹாக்கிங் என இருவரின் ஐக்யூ பாய்ண்ட்களையும் எளிதாக ஹைஜம்ப் செய்து சாதித்திருக்கிறார்.
பெற்றோர்கள் பதற்றமாக இருந்தாலும் இரண்டரை மணிநேர ஐக்யூ டெஸ்ட்டை பிரிப்பரேஷனே
இல்லாமல் அசால்டாக எழுதி முடித்து அர்னாப் பெற்ற ஐக்யூ பாய்ண்ட் 162. ஐக்யூ அர்னாவ் சர்மாவுக்கு ஐக்யூ சல்யூட்!
மனிதநேய கிட்னிதானம்! -ரோனி
சாத்தூர் காபி
பாரில் டீ வாங்கி குடுடா என்றாலே, டீ? வித் பட்டர் பிஸ்கட்டா? என லந்து பண்ணி டீபிரேக்கில் நானோ நொடியில் எஸ்கேப் ஆகும் ஆத்ம நண்பர்களை
பெற்றிருக்கும் நமக்கு இது புதுசுதான். யாரென்றே முகம் தெரியாத
ஒருவருக்கு தன் கிட்னியை எடுத்துக் கொடுப்பது என்றால் சும்மாவா?
அமெரிக்காவின்
ஓக்லஹாமாவின் துல்ஸா நகரைச் சேர்ந்த பார்ஷியன் என்பவர் ரெட்டிட் தளத்தில் பதிவிட்ட
கடிதம் மூலம் இந்த கிட்னிதானம் குறித்த நெகிழ்ச்சி செய்தி உலகிற்கு தெரிந்து லைக் ஷேர்
என மாஸ் ஹிட்டானது. "நான் வேலை செய்து வரும் டயாலிசிஸ் மையத்தில் கிட்னிக்காக
10 ஆண்டுகளாக காத்திருக்கும்
லிஸ்ட் கண்ணீர் வரவைத்துவிட்டது. அதனால் என் கிட்னியை அவர்களில் ஒருவருக்கு வழங்கினேன்"
என கூறும் பார்ஷியன் கிட்னியை ஜனவரியில் தானமளித்தார். தானம் பெற்றவர் ஏப்ரலில் பார்ஷியனுக்கு அனுப்பிய கடிதத்தில் "இன்று நான் வாழும் வாழ்க்கை நீங்கள் எனக்களித்த கொடை" என உருகியிருக்கிறார் முகம் தெரியாத மனிதர். தானம் நல்லது!
மனிதநேய கிட்னிதானம்! -ரோனி
சாத்தூர் காபி
பாரில் டீ வாங்கி குடுடா என்றாலே, டீ? வித் பட்டர் பிஸ்கட்டா? என லந்து பண்ணி டீபிரேக்கில் நானோ நொடியில் எஸ்கேப் ஆகும் ஆத்ம நண்பர்களை
பெற்றிருக்கும் நமக்கு இது புதுசுதான். யாரென்றே முகம் தெரியாத
ஒருவருக்கு தன் கிட்னியை எடுத்துக் கொடுப்பது என்றால் சும்மாவா?
அமெரிக்காவின்
ஓக்லஹாமாவின் துல்ஸா நகரைச் சேர்ந்த பார்ஷியன் என்பவர் ரெட்டிட் தளத்தில் பதிவிட்ட
கடிதம் மூலம் இந்த கிட்னிதானம் குறித்த நெகிழ்ச்சி செய்தி உலகிற்கு தெரிந்து லைக் ஷேர்
என மாஸ் ஹிட்டானது. "நான் வேலை செய்து வரும் டயாலிசிஸ் மையத்தில் கிட்னிக்காக
10 ஆண்டுகளாக காத்திருக்கும்
லிஸ்ட் கண்ணீர் வரவைத்துவிட்டது. அதனால் என் கிட்னியை அவர்களில் ஒருவருக்கு வழங்கினேன்"
என கூறும் பார்ஷியன் கிட்னியை ஜனவரியில் தானமளித்தார். தானம் பெற்றவர் ஏப்ரலில் பார்ஷியனுக்கு அனுப்பிய கடிதத்தில் "இன்று நான் வாழும் வாழ்க்கை நீங்கள் எனக்களித்த கொடை" என உருகியிருக்கிறார் முகம் தெரியாத மனிதர். தானம் நல்லது!
70 வயதில்
சுதந்திர யானை!
இளமைக்குத்தானே
என்றும் உலகில் மவுசு. முதுமையில் செல்கள் குறைய,
தோல் சுருங்க மெகா பிரமாண்டங்கள் மினிமலிசமாக மாறும் காட்சியை பார்ப்பதைவிட கொடுமை வேறென்ன இருக்கிறது?
மகராஷ்டிராவின் ராஜ குடும்பத்தின் 50 ஆண்டு விசுவாச
அடிமைக்கு கிடைத்த விடுதலையும் அப்படித்தான்.
மகாராஷ்டிராவின்
சதாரா மாவட்டத்திலுள்ள அந்த் என்ற ராஜகுடும்ப சொத்தான கஜராஜ் என்ற செல்ல யானைக்குத்தான் 50 ஆண்டுகளுக்குப்
பிறகு 70 வயதில் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. கோவில் பணிகளில் கம்பீரமாக பவனிவந்த கஜராஜூக்கு சில ஆண்டுகளாக உடல்நிலையில்
ஏற்பட்ட டஜன் கணக்கிலான நோய்களால் தடுமாறி வந்தது. அதன் உடல்நிலையை
ஆராய்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் வற்புறுத்தலால் கஜராஜூக்கு விடுதலை வசப்பட்டிருக்கிறது. ஊரே கூடி ஃபேர்வெல் விருந்து நடத்தி
டாட்டா காட்ட, யானையை கொண்டுசெல்ல இந்தியாவின் முதல் ஸ்பெஷல்
ஆம்புலன்ஸ் ரெடி. 1500 கி.மீ. தூரம் பயணதூரத்திலுள்ள காப்பகத்தில் தன் லைஃபில் முதல்முறையாக காலில் செயின்களில்லாமல்
70 வயதில் சுதந்திரத்தை அனுபவித்து நடைபோட்டுவருகிறது கஜராஜ் யானை.
ஏழைகளுக்கு வீடு
கொடுத்த குஜராத் பாக்ஸர்!
பட்டர் பிஸ்கெட்
கடன் கேட்டாலே பட்டப்பகல் சூரியனாகும் ஆத்மாக்களுக்கு மத்தியில் தனக்கு கிடைக்கும்
பரிசுப்பொருட்களையெல்லாம் ஏழைகளுக்காக அள்ளிக்கொடுக்கிறார் குஜராத்தைச் சேர்ந்த பாக்ஸர்
பெண்.
குஜராத்தின் உத்தர்சண்டா
நகரில் வசித்துவரும் சிம்ரன் மெக்வான், தான் வெல்லும் தேசிய குத்துச்சண்டைப்
போட்டி பரிசுகள் அனைத்தையும் ஏழை மக்களுக்காக துடைத்து கொடுத்துவிடுகிறார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கிடைத்த வெள்ளி
மெடலோடு கூடுதல் பரிசாக கிடைத்த கார், வீடு, 11 லட்ச ரூபாய் அனைத்தையும் டெல்லியிலுள்ள என்ஜி அமைப்புக்கு அப்படியே அள்ளிக்
கொடுத்துவிட்டார். "நான் என் 14 வயதிலிருந்து
ஹாபியாக குத்துச்சண்டை விளையாடி வருகிறேன். போட்டியில் ஜெயிப்பது
எனக்கு போதும். மாற்றுத்திறனாளிகள் என்ன செய்வார்கள்?" என புன்னகைக்கிறார் சிம்ரன். தேவதை மனசு!
டூட்டி 10 மணிநேரம்! வாங்குவது 30 ரூபாய்!
விலைவாசி உயர்வில்
ஒவ்வொரு ஆண்டும் இன்க்ரிமென்டோடு போனஸ் வரவில்லையென்றால், பலரும்
விஜயகாந்தாய் கண்கள் சிவக்கும் வாடிக்கை. எரிச்சல் லிஸ்டில் இப்போது
ஜிஎஸ்டி புதிய வரவு. இந்த சிச்சுவேஷனில், இந்தியாவில்
பத்து மணிநேர வேலைக்கு சம்பளமாக வெறும் 30 ரூபாய் மட்டுமே ஒருவர்
வாங்குகிறார் என்றால் ஆச்சரியம்தானே!
புனேவிலுள்ள டாக்டர்
பல்வந்த் கட்பாண்டே என்ற டாக்டர்தான் பத்து மணிநேர வேலைக்கு வெறும் முப்பது ரூபாய்
பீஸ் வாங்குகிறார்.
"மருத்துவத்தொழில் மக்கள் சேவைக்கானது. என்
வாழ்நாள் முழுக்க மக்களுக்கு சிகிச்சையளிக்க விரும்புகிறேன். எனக்கு கிடைத்த மரியாதை, பணம் அனைத்துக்கும் காரணம் மருத்துவம்தான்.
என் இறப்பும் கூட என் கிளினிக்கிலேயே நிகழ விரும்புகிறேன்"
என புன்னகையுடன் பேசும் பல்வந்த், தொடர்ந்து மருத்துவ
சிகிச்சைகள் குறித்த நூல்களை படித்துவருகிறார். சல்லீசு ரேட்டில்
மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் இந்தியாவில் நிறைய உண்டுதான் என்றாலும் அதனை தன்
வாழ்நாள் அர்ப்பணிப்பாக ஒருவர் தொடர்ந்து செய்யவேண்டுமல்லவா? டாக்டர் பல்வந்த் கட்பாண்டேவின் வயது 102!
நன்றி: குங்குமம் வார இதழ்