பிட்ஸ்!
பிட்ஸ்!
நீளமான சிகரெட்!
அமெரிக்காவின்
போஸ்டனைச் சேர்ந்த நிறுவனம், 32 மீ. நீளமான மரிஜூவானா சிகரெட்டை 40 தன்னார்வலர்களின் உதவியுடன் தயாரித்து வொர்செஸ்டரிலுள்ள டிசியு சென்டரில் நடந்த
கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. தற்போது இது கின்னஸ் சாதனைக்காக
அனுப்பப்படவிருக்கிறது.
சாதனை சேலை!
பிரான்சின் காட்ரி
நகரில் ரெடியாகியுள்ள கல்யாண புடவை மக்களுக்கு செம சர்ப்ரைஸ் ஷாக். 8,095
மீ. நீளத்திலுள்ள இப்புடவையின் மூலம் எவரெஸ்ட்
மலையையே மூடிவிடலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சாரிட்டி
நிகழ்வுக்காக உருவான சேலையை இரண்டு மாதங்களில், 15 நபர்கள் செதுக்கி
உருவாக்கியுள்ளனர்.
நெருப்பிலிருந்து
எஸ்கேப்!
சீனாவின் சோங்க்விங்
நகரிலுள்ள அபார்ட்மெண்ட்டில் தீ. ஃபயர் சர்வீஸ் ஆட்கள் வந்து தீயை அணைக்கும்போதுதான்
ஜன்னல் வழியாக ஒருவர் தீயிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதை கவனித்தார்கள். அருகிலிருந்த கண்ணாடியை உடைத்து தப்ப முயன்றவரை வீரர்கள் காப்பாற்றிய இந்த
வீடியோ, உலகெங்கும் எமோஷனல் ஹிட் அடித்துள்ளது.
கேமராவைத் திருடிய பறவை!
நார்வே புகைப்படக்காரர்
ஜெல் ராபர்ட்ஸன் கடற்பறவைகளை போட்டோ எடுக்க, சில உணவுகளை அவைகளுக்கு கொடுத்தார்.
அதில் ஒரு பறவை அவரது உணவை சாப்பிட்டுவிட்டு, ட்ரோன்
கேமராவையும் அபேஸ் செய்து பறந்துவிட்டது. ஐந்து மாதங்களுக்கு
பிறகு கண்டுபிடித்த கேமராவிலிருந்த பதிவுகளுக்கு கோபுரோ விருது ராபர்ட்ஸனுக்கு கிடைத்துள்ளது.
2
பிட்ஸ்!
ரன்னிங் குதிரைகள்!
தாய்லாந்தின் சியாங்
மை சாலையில் பயணிகளுக்கு சூப்பர் சர்ப்ரைஸ். அவர்களுக்கு இணையாக 3 குதிரைகள் சேசிங் செய்து ஃபாலோ செய்தால் குதூகலமாகத்தான் இருக்கும். விவசாய பண்ணையிலிருந்து எஸ்கேப்பான குதிரைகள் ஒரு கி.மீ மேல் சாலையில் அதிவேக ரன்னிங் சென்றதை தனாபத் என்ற இளைஞர் பைக்கில் சென்றபடி
எடுத்த வீடியோ வைரல் ஹிட்.
ஃபெய்லியர் மியூசியம்!
அமெரிக்காவில்
லாஸ் ஏஞ்சல்ஸில் ஃபெய்லியரான பொருட்களின் கலெக்ஷன்களை வைத்து மியூசியம் தொடங்கப்பட்டுள்ளது. இதில்
கோல்கேட்,வால்வோ, உட்பட அதிபர் ட்ரம்பின்
போர்ட் கேமும் உண்டு. ஸ்வீடனின் உளவியலாளர் சாமுவேல் வெஸ்ட் இதன்
பிரம்மா. விசிட் செய்யும் ஆடியன்சும் தங்கள் தோல்வியை பதிவு செய்ய
ரெஜிஸ்டர் உண்டு.
மெகா அவகாடோ!
ஹவாயின் கியாலாகேகுவாவைச்
சேர்ந்த பமீலா வாங்,
அருகிலுள்ள பள்ளிக்கு செல்லும்போது எதேச்சையாக அங்கு விளைந்திருந்த ராட்சஷ
அவகாடோவைப் பார்த்து சர்ப்ரைஸ் ஷாக் ஆனார். 5 பவுண்ட்ஸ் எடையிலான
மெகா அவகாடோ கின்னஸ் புக்கில் ரெஜிஸ்டரானபின் ஹோட்டலில் பரிமாறப்பட்டுவிட்டது.
காட்டுத்தீயில்
முயல்!
அமெரிக்காவின்
கலிஃபோர்னியாவில் ஒரு லட்சம் ஏக்கர்களுக்கும் மேல் காட்டுத்தீ பரவி அழித்துவருகிறது. லா கான்சிடா
நெடுஞ்சாலையில் புதருக்குள் நெருப்பு சூழ சிக்கிய முயலை ஒருவர் உயிரை பணயம் வைத்து
காப்பாற்றி இருக்கிறார். இந்த எமோஷனல் வீடியோ இணையத்தில் நெகிழ்ச்சியுடன்
ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
3
பிட்ஸ்!
நமக்கு நாமே உணவு!
அமெரிக்காவின்
சவுத் கரோலினாவைச் சேர்ந்த அலெக்ஸ் போவென் அதிகாலை 3 மணிக்கு உள்ளூர் ஹோட்டலுக்கு
சென்றிருக்கிறார். ஆர்டர் செய்தும் உணவு வரவில்லை. ஊழியர் குறட்டை விட்டு தூங்க, நமக்கு நாமே என தனக்கான
உணவை ரெடி செய்து சாப்பிட்டுவிட்டு அதற்கான பணத்தை வைத்துவிட்டு வந்துவிட்டார்.
சாப்பிடும் போட்டோக்கள் இணையத்தில் பதிவிட்டதுதான் செம ரவுசு.
விண்வெளியில் பீட்ஸா!
சர்வதேச விண்வெளி
மையத்தில் தங்கியுள்ள இத்தாலி வீரர் பாலோ நெஸ்போலி, தனது டீம் லீடர் கிர்க்
ஷிரெமன்னுக்கு நான் பீட்ஸாவை மிஸ் செய்கிறேன் என ட்விட்டினார். நட்பு சும்மா விடுமா? ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும்
பல்வேறு சைஸ்களில் பீட்ஸா செய்து அசத்திவிட்டனர் சக விண்வெளி வீரர்கள்.
குடிகார எலி!
அமெரிக்காவின்
ஃளோரிடாவில் உள்ள விலங்கு காப்பகத்திலிருந்து எஸ்கேப்பான எலி, அருகிலுள்ள
ஆல்கஹால் கடையில்
திருட்டுத்தனமாக நுழைந்து
சரக்கு அடித்து
செம போதை ஆகியுள்ளது.
தற்போது ஐசியூவில் எலிக்கு ட்ரீட்மென்ட் ஆன் தி வே.
கார் வைப்பரில்
வயலின்!
இஸ்ரேலைச் சேர்ந்த
வயலின் வித்வான் ஆதர் கோல்டுஃபார்ப், புதிய பாதை அறிவாளி. தன் கார் வைப்பரின் மூலம் வயலின் வாசிக்கும்படி செட்டப் செய்து அசத்துகிறார்.
வயலின் வாசிக்கும் வைப்பர் வீடியோ இணையத்தில் ஹைப்பர் ஹிட். இவர் இதற்கு முன்பு வைப்பரில் ட்ரம்ஸ் இசைக்கும்படி செட் செய்த ஆசாமி.
4
பிட்ஸ்!
குதிரையில் பர்சேஸ்!
மெக்சிகோவின் அகாபுல்கோவிலுள்ள
ஆக்ஷோ சூப்பர் மார்க்கெட்டில் கஸ்டமர் தனது வாகனத்தில் கடைக்குள்ளே வந்ததுதான் பெரும்
சர்ச்சை.
தனது குதிரையில் அமர்ந்தபடி கடைக்குள் வந்து பீர் பர்சேஸ் செய்ய முயன்றதுதான்
கடைக்காரர்கள் பீதியானதற்கு காரணம். பீரைக் கொடுத்து குதிரைக்காரரை
அனுப்பியுள்ள வீடியோ இணையத்தில் வைல்டு ஹிட்.
பொறுமையிழந்த நாய்!
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள
நானைமோ பார்க்கில் ஒருவர்,
தன் காரை தன் செல்ல நாயுடன் நிறுத்திவிட்டு உலாவச்சென்றார். நாயும் எவ்வளவு நேரம் வெயிட் செய்யும்? நாய் அடித்த ஹாரனில்
பார்க்கே மிரண்டது. பின் செக் செய்து பார்த்ததில் அப்பாவியாக
ஸ்டீரிங்கில் பாதம் வைத்திருந்த நாய்தான் ஓனரை டென்ஷனாகி அலர்ட் செய்திருக்கிறது என
தெரிந்திருக்கிறது.
ஜிக்ஸா சாதனை!
அமெரிக்காவின்
மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஜாக் ப்ரெய்ட் 6 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட டிஸ்னி ஜிக்ஸாவை மூன்று மாதங்களாக போராடி தீர்த்திருக்கிறார்.
ஜெர்மனியின் ஜிக்ஸா நிபுணர் ராவன்பர்க்கரின் டிசைன் இது.
40,230 ஜிக்ஸா துண்டுகளை ஒன்றிணைத்து சாதனை படைத்த முதல் அமெரிக்கர்
ஜாக்தான்.
குட்டிப்பெண்ணுடன்
சேசிங்!
அமெரிக்காவின்
இண்டியானாவைச் சேர்ந்தவர் பெண், கிராஸ் கவுண்டி பகுதியில் என் காரைக் காணோம்
என ரிப்போர்ட் செய்தார். காரை திருடியது அவரது எட்டு வயது மகள்தான்.
40 கி.மீ வேகத்தில் சென்ற காரை நிறுத்தச்சொல்லியும்
அடமாக ஆக்சிலேட்டரை மிதித்த சுட்டிப்பெண்ணை காரின் மிரர் உடைத்து மீட்டிருக்கிறது ஆண்டர்சன்
காவல்துறை.
தொகுப்பு: ரஞ்சனா கிரிஸ்பி