முத்தாரம் கட்டுரைகள்!





செவ்வாய் டூர்


ஸ்பேஸ்எக்ஸ்
எலன் மஸ்கின் விண்வெளி ஆராய்ச்சி கம்பெனி. BFR எனும் 350 அடி உயர ராக்கெட் பற்றி அறிவித்தார். இதில் மீத்தேனை எரிபொருளாக பயன்்படுத்தும் ராப்டர் ராக்கெட்டுகள் பிஎஃப்ஆரை மேலே உயர்த்தும். இதோடு நூறுபேர்களை அமர்த்தும் கேப்ஸ்சூலை இணைத்து வெளி கோள்களுக்கு டூர் செல்லலாம் என்பது எலனின் ஐடியா. மனிதர்களோடு 2024 ஆம் ஆண்டும், ராக்கெட்டுகள் மட்டும் 2022  விண்ணில் செலுத்துவது எலனின் ஏழாவது அறிவு திட்டம்.  

மார்ஸ் ஒன்
மார்ஸ் ஒன்னைப் பொறுத்தவரை பிற விண்வெளி நிறுவனங்கள் கண்டுபிடித்த டெக்னாலஜி என்றாலும் உடனே காசு கொடுத்து பயன்படுத்த தயங்குவதேயில்லை. முதலில் நான்கு பேரை அனுப்புவதற்கான பட்ஜெட் 6 பில்லியன் டாலர்கள். அதன்பிறகான திட்டங்களுக்கு பட்ஜெட் 4 பில்லியன் டாலர்கள்.

நாஸா

மனிதர்களையும் பொருட்களையும் பூமியின் வட்டப்பாதை தாண்டி வெளியே எடுத்துச்செல்லும் அமைப்பு(SLS) பற்றி நாஸா தற்போது ஆராய்ச்சியில் உள்ளது. நாசாவின் ஓரியன் கேப்ஸ்சூல் விண்வெளியில் பயணிக்கும் வாகனமாக தெம்பளிக்கிறது. நாசாவின் மார்ஸ் வாகனத்தை தயாரிக்கும் டெண்டரைப் பெற Bigelow Aerospace, Boeing, Lockheed Martin, Orbital ATK, Sierra Nevada Corporation’s Space Systems, and NanoRacks ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. அரசு நிதியுதவியுடன் நாசா தன் லட்சியங்களை அடைவது அவ்வளவு எளிதல்ல என்றாலும் 2030 ஆண்டில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் முயற்சிக்கும் என்பதில் டவுட் வேண்டாம்.

ரஷ்யா, சீனாவும் விண்வெளி பிசினஸில ஆர்வம் கொண்டவை. அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸின் ப்ளூ ஒரிஜின் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு நிலவுக்கு சரக்கு போக்குவரத்தைத் தொடங்க முயற்சித்து வருகிறது. எலன் மஸ்க் பூமி, நிலவு, செவ்வாய் என மூன்று கோள்களையும் இணைக்க முயற்சிக்கிறார் என்றால், நாசா நிலவில் விண்வெளி மையத்தை அமைத்தால் செவ்வாய்க்கு சென்று வரும் பட்ஜெட் குறையும் என்ற முடிவுக்கே வந்துவிட்டது. நாசா, எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தோடு சில ஒப்பந்தங்கள் போட்டிருப்பதால், தன் லட்சியத்தை அடைவதில் நாசா சுணக்கம் காட்டப்போவதில்லை. எதிர்காலத்தில் பலர் நிலவில் குடியேறி பூமியிலுள்ள நண்பர்களுக்கு காலையில் குட்மார்னிங் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
 2
Cryo-EM நுண்ணோக்கிக்கு நோபல்!

ஸ்விட்சர்லாந்தின் ஜாக்யூஸ் ட்யூபோசெட், ஜெர்மனியின் ஜோசிம் ஃபிரான்க், ஸ்காட்லாந்தின் ரிச்சர்ட் ஹென்டர்ஸன் ஆகிய மூவருக்கும், கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி கண்டுபிடித்ததற்காக வேதியியல் பிரிவில் 2017 ஆம் ஆண்டுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் மூலக்கூறுகளை அதிதுல்லியமாக காண உதவும் நுண்ணோக்கி இது. "வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை பார்க்க உதவும் கூல் கருவி இந்த நுண்ணோக்கி" என பாராட்டியுள்ளார் நோபல் கமிட்டி உறுப்பினரான கோரன் கே ஹான்ஸன். உறைய வைக்கப்பட்ட புரத மாதிரி மீது எலக்ட்ரான் ஒளி பாய்ச்சப்பட்டு அது லென்ஸ் வழியாக உருப்பெருக்கப்பட அந்த துல்லிய படத்தை நாம் நுண்ணோக்கியில் காணலாம் என்பதுதான் Cryo-EM டெக்னிக். இதற்கு முன்பு மூலக்கூறுகளை காண பயன்பட்டது எக்ஸ்‌ரே கிரிஸ்டல்லோகிராபி.  
 3
 ப்ளட் டெஸ்டுக்கு ஒலி போதும்!

ஒலி அலைகளின் மூலம் ரத்தத்தை டெஸ்ட் செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவின் எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள். சிம்பிளாக சோதனை செய்யும் கிட் ஒன்றும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

"உடலுக்கு நோய் ஏற்பட்டால் அதனை மூளைக்கு சொல்லுவது செல்கள் வெளியிடும் பாக்கெட்டுகளான எக்சோசோம்களே. எனவே இவற்றைப் பற்றி அறிந்தால் நோய் பற்றி அறியலாம். இதற்கு ஒலி அலைகள் நல்ல தீர்வு" என்கிறார் ஆராய்ச்சியாளரான மினோ தாவோ. 2014 ஆம் ஆண்டு தொடங்கிய ஆராய்ச்சி இது. ஒலி மூலம் செல்களையும், எக்சோசோம்களையும் பிரித்து இச்சோதனையில் வென்றுள்ளது ரிசர்ச் குழு. புதிய கருவி மூலம் நூறு மைக்ரோலிட்டர் ரத்த மாதிரியில் உள்ள நோய்களை 25 நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம். "அடுத்து வரும் நோய் கண்டறியும் சோதனைகளுக்கு இது வாசல்" என்கிறார் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலை ஆராய்ச்சியாளர் சுப்ரா சுரேஷ்.

4


அம்னீசியா அபாயம்!

ஹென்றி மொலைஸன்

நியூரோசயின்ஸில் மறக்கமுடியாத நோயாளி. H.M என குறிப்பிடப்படும் இவருக்கு 27 ஆம் வயதில் 1953 ஆம் ஆண்டு வலிப்பு நோய்க்கு ஆபரேஷன் நடந்தது.அதன்பிறகு ஹென்றி 2008 ஆம் ஆண்டு இறக்கும்வரை அம்னீசியா இவரை விடவில்லை. மின்னல்வேகத்தில் நினைவுகள் மறக்கத்தொடங்கியதால் மருத்துவர்கள் மெமரி ஆராய்ச்சிக்கு ஹென்றியை பயன்படுத்திக்கொண்டனர்.

அகதா கிறிஸ்டி

திகில்நாவல் ராணி அகதா கிறிஸ்டி, 1926 ஆம் ஆண்டு திடீரென 11 நாட்கள் காணாமல் போய்விட்டார். ஊரே கூடி தேடினால் அம்மணி  320 கி.மீ. கடந்து காரில் சுயநினைவின்றி கிடந்தார். என்ன ஆச்சு மேடம் என்றபோது அவருக்கு எதுவும் நினைவில்லை. இதற்கு பெர் சைக்கோஜெனிக் அம்னீசியா. இவர் குறித்த ஆய்வு 2003 ஆம் ஆண்டு Practical Neurology  இதழில் வெளியானது.

அன்செல் பார்னே
மேட் டாமனின் ஜேஸன் பார்னே படத்தில், அம்னீசியா கொலையாளியாக தூள் கிளப்பியிருப்பார். அன்செல் பார்னேவின் கதையும் அதேதான். 1887 இல் பென்சில்வேனியாவில் கிடந்தவரின் சொந்த ஊர் ரோட் தீவு. ஆனால் தான் யார் என்பதே மறந்துவிட்டார் அன்செல். dissociative fugue என இந்த அம்னீசியாவைக் குறிக்கிறார்கள். லைஃப் பிரச்னையில்லை ஆனால் உங்களது ஃபிளாஷ்பேக் நினைவுக்கு வராது அவ்வளவுதான்.
class=MsoNormal style='margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none'>ரஷ்யா, சீனாவும் விண்வெளி பிசினஸில ஆர்வம் கொண்டவை. அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸின் ப்ளூ ஒரிஜின் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு நிலவுக்கு சரக்கு போக்குவரத்தைத் தொடங்க முயற்சித்து வருகிறது. எலன் மஸ்க் பூமி, நிலவு, செவ்வாய் என மூன்று கோள்களையும் இணைக்க முயற்சிக்கிறார் என்றால், நாசா நிலவில் விண்வெளி மையத்தை அமைத்தால் செவ்வாய்க்கு சென்று வரும் பட்ஜெட் குறையும் என்ற முடிவுக்கே வந்துவிட்டது. நாசா, எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தோடு சில ஒப்பந்தங்கள் போட்டிருப்பதால், தன் லட்சியத்தை அடைவதில் நாசா சுணக்கம் காட்டப்போவதில்லை. எதிர்காலத்தில் பலர் நிலவில் குடியேறி பூமியிலுள்ள நண்பர்களுக்கு காலையில் குட்மார்னிங் சொன்னாலும் ஆச்சரியமில்லை.


தொகுப்பு: கா.சி.வின்சென்ட், ஆலன் வான்கா

பிரபலமான இடுகைகள்