வில்லன் டூ ஹீரோக்கள் -விக்டர் காமெஸி
வில்லன் டூ ஹீரோக்கள்
திருடர் ராஜா கார்டூசே(1693- 1721)
இங்கிலாந்தில் கௌரவமான
குடும்பத்தில் பிறந்த திருடர்தான் கார்டூசே. பதினொரு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன கார்டூசே ஜிப்சிக்கூட்டத்தில்
சேர்ந்தலைந்து தனி கேங்கின் தலைவராகி திருட்டுத்தொழிலில் முன்னேறிக்கொண்டிருந்தார். மிலிட்டரியில் கிடைத்த குறுகியகால பயிற்சி அவரின்
தொழிலுக்கு உதவியது. தன் கூட்டத்தினரில்
ஒருவரை ஏமாற்ற முயன்று போலீசிடம் சிக்கியவரை இவரது கேங்கே கைவிட்டது பேரவலம். போலீசிடம் இருந்த ஆதாரங்களை ஏற்று குற்றத்தை
இறுதிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை. பின் குற்றம்
செய்தவர்களைப் பற்றிய தகவல்கள் கூறத்தொடங்க பலருக்கும் தூக்கு கயிற்றில் தொங்கும்
பாக்கியம் கிடைத்தது. கார்டூசே இறந்தபின்னும்
இவர் பற்றி பாடல்கள், நாடகங்கள், ப்ரெஞ்சு படம் உட்பட உருவாக்கப்பட்டு திருடர்களின்
ராஜா என்ற பட்டமும் கார்டூசேவுக்கு வழங்கப்பட்டது.
அட்டிலா அம்ப்ரஸ்
ஹங்கேரியைச் சேர்ந்த
அட்டிலா, முதலில் ஹாக்கி வீரராக
அறியப்பட்டாலும் செகண்ட் பார்ட்டில் செம
திருட்டுக்கோழி. 1993-1999 காலகட்டத்தில் வங்கிகளில் 29 கொள்ளைகள், அதோடு தபால் நிலையங்கள், ட்ராவல் ஏஜன்சிகள் என எதையும் விட்டுவைக்காத கறார் திருடர். விஸ்கியை அதிதீவிரமாக லவட்டுவது அட்டிலாவின் ஹாபி. கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு அள்ளிவிட்டு
ஹங்கேரி ராபின்ஹூட்டாக மாறினார். அதோடு அட்டிலாவின்
கிளாமர் லுக்கினால் எக்கச்சக்க பெண் காதலிகளும் கிடைத்தது கூடுதல் காம்ப்ளிமெண்டரி
ஸ்பெஷல். ஒருமுறை ஜெயிலில் அடைத்து
பெட்ஷீட்டுகளோடு தப்பிய அவமானத்தை துடைக்க, தற்போது Satoraljaujhely எனும்
சூப்பர் செக்யூரிட்டி சிறையில வாழ்கிற யோகம் அட்டிலாவுக்கு.
ஜான் டில்லிங்கர்
அமெரிக்காவின் இன்டியானா
பகுதியைச் சேர்ந்த ஜான்(1903-1934) டில்லிங்கர் 1930 களில்
அமெரிக்க காவல்துறையை அலற வைத்த கொள்ளைக்காரர். ரேடியோ, டிவி, பத்திரிகை என அத்தனையிலும் கவர் ஸ்டோரியாக
பேசப்படும் பெருமை வாய்ந்த மனிதர் அக்காலகட்டத்தில் சாதாரண குடிமகன்களில் ஜான்
டில்லிங்கர் மட்டுமே. மொத்தம் 24 வங்கிகளில் தன் டீமுடன் சாகச கொள்ளை நிகழ்த்தியவர். பிக்பாக்கெட்டாக இருந்து மெல்ல கேங்ஸ்டராக
மாறினாலும் ஜான் பேஷன் மாடல்போல ஸ்டைலாக இருந்ததால் தியேட்டரில் வான்டட் என நியூஸ் ரீல் போட்டாலே மக்களிடையே
விசில் பறக்கும் அளவு எவரெஸ்ட் புகழடைந்த கேங்ஸ்டர் மனிதர் 1934 ஆம்
ஆண்டு ஜூலை 22 அன்று போலீசாரால்
சுடப்பட்டு மோட்சமடைந்தார்.
தொகுப்பு:கயல்விழி, ரிச்சர்ட் மேசன்
நன்றி:முத்தாரம்