புத்தக அறிமுகம்.:ஆதவன் சிறுகதைகள்!- தொகுப்பு இ.பா






ஆதவன் சிறுகதைகள்
தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி
என்பிடி
ரூ.120

மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள். மூன்றாமவன், சிவப்பா உயரமா மீசை வச்சுக்காமல், இறந்தவன் ஆகிய சிறுகதைகள் படிக்க ஈர்ப்பானவையாக இருந்தன.

மொத்த கதைகளும் ஆதவனின் டிரேட்மார்க் இளமைக் கொண்டாட்டம் வரிக்கு வரி ந்ம்மை உற்சாகப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. கிழவரின் உலகம் சிறுகதையில் வரும் அவரின் சம்பந்தி பற்றிய வர்ணனைகள்  இதற்கு சூப்பர் உதாரணம்.  அண்ணன் தம்பிக்குள் வரும் போட்டி, ஒப்பீடு எப்படி வாழ்க்கையை சிதைக்கிறது என்பதை பகடியாக எழுதியுள்ளார் ஆதவன். இரண்டாவது சிறுகதையாக மறக்க முடியாமல் பதிவாகியுள்ளது இக்கதை. அடுத்து சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் என்ற சிறுகதை, நீலாவின் காதல் வேட்கையை குறும்பும் இளமையுமாக முன் வைக்கிறது. காதலில் பிளான்கள் எப்படி சொதப்புகிறது என்பதற்கு காபியை டேபிளில் வைப்பதே சாட்சி,

ஆதவனின் பிராண்ட் கதைகள் எந்த காலத்திற்கும் பொருத்தமானவை. ஏனெனில் அவை எழுதப்படும் நவீன மொழி. சிறிது இன்டலெக்சுவல்தனமான பெண்ணிய முற்போக்கு கதைகளையும் எழுதியிருக்கிறார் அதில் கட்டாயம் இடம்பிடிப்பது இறந்தவன் சிறுகதை. ஆதவனின் கதைகளில் இயல்பான தன்மை தொலைவது இன்டர்வியூ போன்ற சிறுகதைகள்தான். இதில் வரும் சூழலையும் ஜாலியாகவே கையாண்டாலும் வேலை கிடைக்காதவனின் தவிப்புகளை உணர்த்துவதில் ஏதோ பற்றாக்குறை உள்ளது போல தோன்றுகிறது.
-கோமாளிமேடை டீம்
நன்றி: கே.என்.சிவராமன்(முதன்மை ஆசிரியர், குங்குமம்)