அறிவியல் நூல்கள் அறிமுகம்!




புத்தகம் புதுசு!

THE FRIENDLY ORANGE GLOW
The Untold Story of the PLATO System and the Dawn of Cyberculture
by Brian Dear
Rs.1,747
Page count: 656pp
Publisher: Pantheon

பிளேட்டோ எனும் கம்ப்யூட்டர் கடந்து வந்த வரலாற்றை சொல்லும் நூல் இது. பி.எஃப். ஸ்கின்னரின் கணினி வழியே கற்றல் அடிப்படையை பின்பற்றி இலினாய்ஸ் பல்கலைக்கழகம் உருவாக்கிய  பிளேட்டோ என்ற கம்ப்யூட்டர் பங்கேற்ற பல்வேறு செயல்பாடுகளை கூறுகிற நூலை, தொலைநோக்கு முயற்சிகளின வரலாறு என்று ஆசிரியர் பிரையன் குறிப்பிடுகிறார்.

WAR IN 140 CHARACTERS
How Social Media Is Reshaping Conflict in the Twenty-First Century
by David Patrikarakos
320pp, Rs.1,960
Basic


நவீன உலகில் சோஷியல் தளங்கள் எப்படி பல்வேறு பிரச்னைகளை விவாதிக்கும் இடமாக மாறியுள்ளது என்பதை நேர்மையாக விவாதிக்கிறார் பத்திரிகையாளரான டேவிட். ஸ்கைப் மூலம் செலக்டான ஐஎஸ் தீவிரவாதப் பெண் முதற்கொண்டு, உக்ரைன் செய்திகளை இணையத்தில் பரப்பும் இளைஞர் வரை பலரையும் சந்தித்து சோஷியல்தளங்கள் பற்றி தகவல்களை ஆராய்ந்து எழுதியுள்ளது நூலின் பிளஸ் பாய்ன்ட். இணைய உலகில் கருத்தை வெளியிட்டு முகம் தெரியாதவர்கள் எப்படி மக்கள் சூப்பர்ஸ்டாராக மாறுகிறார்கள், அதற்கான சாத்தியம் குறித்தும் இந்நூலின் பேசப்பட்டுள்ளது ஸ்பெஷல்

2


THE WATER WILL COME
Rising Seas, Sinking Cities, and the Remaking of the Civilized World
by Jeff Goodell
352PP, Rs.1,816
Hachette Book Group

கடல்நீர்மட்டம் உயர்வதால் ஏற்படும் விளைவுகளை துல்லியமாக பேசும் நூல் இது. ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதியில் பனி உருகி கடலில் சேர்ந்து கடல்சூழ் தீவுகள், கடல் அருகிலுள்ள நகரங்கள் எப்படி அழிவுக்குள்ளாகும் கள நிலவரங்களை அறிய 12 நாடுகளுக்கு பயணித்து தகவல் சேகரித்து எழுதியுள்ள நூல் இது.

Replenish: The Virtuous Cycle of Water and Prosperity
Sandra Postel
335 pp Rs.1,881
Island Press.


நாட்டில் கடல்மட்டத்தை கட்டுப்படுத்த பல பில்லியன் டாலர்களை செலவழிப்பதோடு, இதனால் ஏற்படும் வெள்ளம், பஞ்சம் ஆகியவற்றையும் சமாளிக்க அரசு அரும்பாடுபட வேண்டியுள்ளது. நீரின் சுழற்சியில் மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளின் நீர்த்திட்டங்கள் இதில் சூழல்மாறுபாட்டின் பங்கு பற்றியும் சான்ட்ரா போஸ்டல் தீர்க்கமாக ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்

3


HELLFIRE BOYS
The Birth of the U.S. Chemical Warfare Service and the Race for the World’s Deadliest Weapons
by Theo Emery
560pp,Rs.973
Little, Brown

1915 ஆம் ஆண்டு ஜெர்மனி முதலாம் உலகப்போரில் நச்சுவாயுத்தாக்குதலை தொடங்கியது. அதன்பின்னர் 1917 ஆம் ஆண்டில் அமெரிக்கா வேதிப்பொருட்களுக்கான பிரிவை உருவாக்கி நச்சுகுண்டுகள்,அதிலிருந்து தப்பிக்க உடைகள் ஆகியவற்றை தயாரித்தது. நச்சு ஆயுதங்களின் தயாரிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை பற்றி தியோ எமெரி பல்வேறு தகவல்களை இந்நூலில் விளக்குகிறார்.


THE TELESCOPE IN THE ICE
Inventing a New Astronomy at the South Pole
by Mark Bowen
432pp, Rs.1,247
St. Martin's


தென் துருவத்தில் நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் முனைப்பாக இறங்கியுள்ளவர்களைப் பற்றிய செய்திகளை விளக்குகிறது இந்நூல். தென் துருவத்தில் நியூட்ரினோ குறித்து முதல்முறையாக ஆராய்ச்சி செய்ய ஐஸ்க்யூப் ஆய்வகம் களமிறங்கியதை விவரிப்பதில் நூல் தொடங்கி, 2010 ஆம் ஆண்டு நியூட்ரினோ முதன்முதலில் கண்டறியப்பட்டு பின் அதனை கண்டறிவதற்கான டிடெக்டர் உருவாக்குவது வரையில் ஆச்சரிய தகவல்களை எளிமையாக கூறிச்செல்வது இந்நூலின் பிளஸ் பாய்ன்ட்

4



IMMUNE
How Your Body Defends and Protects You
by Catherine Carver
304pp, Rs.264
Bloomsbury Sigma

சளி முதல் எபோலா வரை உடலை நோயிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் ஆர்மி நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திதான். செயற்கை உறுப்புகள், ஆன்டிபயாடிக்குகளை எப்படி ஏற்கிறது, புற்றுநோய் செல்களை ஏன் தடுக்கவில்லை? இன்னொருவரை விரும்ப அவரின் நோய் எதிர்ப்பு சக்தி உதவுகிறதா? என பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் நூல் இது. தொன்மையான எகிப்து மருத்துவம் முதற்கொண்டு இன்றைய ஜெனரேஷன் சிகிச்சைகள் வரை அறிந்துகொள்ள அற்புத நூல்.

THE ASCENT OF GRAVITY
The Quest to Understand the
Force that Explains Everything
by Marcus Chown
288pp,Rs.1,076
Pegasus

விண்வெளியைப் பொறுத்தவரை ஈர்ப்புவிசை முக்கியத்துவமானது என்றாலும் பூமியில் அது  பலவீனமான ஒரு விசை. 1666 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட ஈர்ப்புவிசை இன்று வரை என்னென்ன விஷயங்களில் பயன்பட்டது என்று இயற்பியலின் பல்வேறு விஷயங்களை கூறி விளக்குகிறார் புகழ்பெற்ற எழுத்தாளரான மார்க்கஸ் சௌன்.

தொகுப்பு: கோமாளிமேடை டீம்