அக்கம் பக்கம் அறிவியல்!
காற்று மாசுபாடு!
இந்தியாவில் நான்கில்
ஒரு குழந்தை காற்று மாசுபாடால் 5 வயதுக்குள் இறந்துபோகிறது.
உலகெங்கும் 2015 ஆம்
ஆண்டு காற்று மாசுபாட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4.2 மில்லியன்.
இதில் 50% இறப்பு, சீனா மற்றும்
இந்தியாவில் நிகழ்ந்தவை.
இந்தியாவில் அதிக
காற்றுமாசுபாடு பிரச்னை நகரம், டெல்லி. காற்று மாசுபாட்டால்
இறந்த மக்களின் எண்ணிக்கை 1.2 மில்லியன்.
மாசுபாட்டால் ஏற்படும்
நோய்கள்
- இதயநோய்கள், வாதம், சிறுநீரக
செயல்பாட்டு பிரச்னைகள், நுரையீரல் புற்றுநோய்
செயல்பாட்டு பிரச்னைகள், நுரையீரல் புற்றுநோய்
2
காமெடி திருடர்கள்!
தண்ணீர் துப்பாக்கி
திருடர்கள்!
2013 ஆம்
ஆண்டு ஞாயிறு இரவு, அமெரிக்காவின் ரோஜர்ஸ் பார்க் ரெஸ்டாரெண்டில்
மரியோ கார்சியா, டோமிங்கோ கார்சியா என இருவர் நுழைந்து சாப்பிட
உணவு கேட்டதோடு, துப்பாக்கியையும் காட்டி மிரட்டியிருக்கின்றனர்.
ஓனர் எதற்கும் மசியவில்லை. "நான் ரொம்ப பிஸி.
ஒருமணிநேரம் கழிச்சு மறக்காமல் வாங்க" என்று
சொல்லிய கையோடு போலீசுக்கு போன் அடித்தார். ஒரு மணிநேரம் கடந்தபின்னும்
போலீஸ் வரவிலை. வந்தது மெமரிபிளஸ் திருடர்கள்தான் கையில் பேஸ்பால்
மட்டை.சினிமா போலீசாக என்ட்ரியான அமெரிக்கா போலீஸ் இரு திருடர்களை
பிடித்து செக் செய்தபோதுதான் அவர்கள் வைத்திருந்தது வாட்டர் துப்பாக்கி என தெரிய வந்திருக்கிறது.
காருக்கு பெட்ரோல்
தேவை!
2009 ஆம்
ஆண்டு நிகழ்விது. அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள டகோமாவைச் சேர்ந்த
டீனேஜ் திருடர், செவ்ரோலெட்(1985) மாடலை
சிட்டி ட்ரான்ஸ்பர் நிறுவனத்திலிருந்து நைசாக அபேஸ் செய்தார். கார் திருடப்பட்டதை போலீசுக்கு, கம்பெனி ஊழியர் கர்ம
சிரத்தையாக போன் செய்து பதிவு செய்துவிட்டார். ஹைவே
167 இல் எமர்ஜென்சி எண் 911 க்கு திடீர் அழைப்பு.
அழைத்த இடம் போலீஸ் சென்றபோது டீனேஜ் திருடர் சிட்டி ட்ரான்ஸ்பர் கம்பெனி
ட்ரெஸில் நான் அந்த கம்பெனியின் விசுவாச ஊழியர் என சாதித்தார். ஆனால் கம்பெனி ஊழியர் திருடருக்கு முன்பே கார் அங்கு நிற்பதை போலீசுக்கு சொல்லிவிட்டது
அவருக்கு எப்படி தெரியும்? அது சரி கார் எப்படி நின்றுபோனது?
டீசல் காருக்கு, பெட்ரோல் நிரப்பியிருக்கிறார்
டீனேஜ் திருடர்.
காலை வாரிவிட்ட
கதவு!
ஜேம்ஸ் ஆலன் தன்
ஆயுள் முழுக்க கதவை மறக்கமாட்டார். 2012 ஆம் ஆண்டு சூப்பர் மார்க்கெட்டை
கொள்ளையடிக்க பிளான் செய்தார் ஜேம்ஸ். சம்பவத்தை பிரமாதப்படுத்துறோம்
என ஆவேசமாக கடையில் நுழைந்தவர், ஆர்வமாக கொள்ளையடித்தார்.
பின் வெளியே போக கதவை இழுத்தார். கதவு ம்ஹூம் இம்மியளவும்
நகரவில்லை. தள்ளவா, இழுக்கவா என பலமுறை
முயற்சித்தவருக்கு காரியம் கைகூடவில்லை. கர்த்தரே ஸ்தோத்திரம்
என்று சொல்லியும் நோ யூஸ். பின் ஸ்டோர் மேனேஜரிடம்
"எப்ப சார் கடையை திறப்பீங்க?" என்று
கேட்க, மேனேஜர் பீதியாகி கடையின் ஷட்டரை திறந்தவுடன் ஜேம்ஸ் எஸ்கேப்.
ஆனால் பரிதாபமாக, மூன்று மணிநேரத்தில் அதே ஏரியாவில்
மாட்டிக்கொண்டார். எப்படி? சிசிடிவிக்கு
நன்றி!
3
விலைமதிப்பற்ற
பொக்கிஷங்கள்
Amper Room
ரஷ்யாவின் செயின்ட்
பீட்டர்ஸ்பர்க் அருகிலுள்ள சார்கோசெலோவின் கேத்தரின் பேலஸ் பதினெட்டாம் நூற்றாண்டில்
கட்டப்பட்டது.
இங்கு மாளிகையின் மொசைக்கற்கள், கண்ணாடிகள்,பேனல்கள் அனைத்தும் 450 கி.கி தங்கத்தால்
மெருகிடப்பட்டவை. 1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியால்
இந்த மாளிகை ஆக்கிரமிக்கப்பட்டபோது, அறையின் பேனல்கள் மற்றும்
கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த மாளிகை தற்போது அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
Sarcophagus of
Menkaure
4,500 ஆண்டுகளுக்கு
முன்பு கிஸாவில் கட்டப்பட்ட மூன்று பிரமிடுகளில் சிறியது இது. 1830 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹோவர்ட் வைஸே கிஸா பிரமிடுகளை கண்டுபிடித்து,
வெடிகுண்டுகளை பயன்படுத்தி அதனை உடைத்து திறந்து பொக்கிஷங்களை அள்ளினார்.
அதனை 1838 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக இங்கிலாந்துக்கு
கப்பலில் கொண்டு செல்ல நினைத்தார் ஹோவர்ட், ஆனால் பீட்ரைஸ் என்ற
அக்கப்பல் பாதிவழியிலேயே மூழ்கிப்போனது. அப்போது பொக்கிஷங்கள்
அவையும் கடலடியில் தன்னை தேடுபவர்களுக்காக காத்திருக்கிறது.
The Honjo Masamune
Sword
1264-1343 காலகட்டத்தில் வாழ்ந்த கோரோ நியூடோ மசாமுனே என்ற வாள் தயாரிப்பாளரின் புகழ்பெற்ற
வாள் இது. வாளுக்கு பெயர் உபயம், இவ்வாளை
தனது வீரத்தின் பரிசாக பெற்ற வீரரான ஹோன்ஜோ ஷிஜெனகா. 16 ஆம் நூற்றாண்டில்
டஜன் கணக்கிலான போரில் வென்றவரான டோகுகாவா லெயாசு என்ற மன்னரின் கையில் பின்னாளில்
கிடைத்த வீரவாள், இரண்டாமல் உலகப்போர்வரை இவரின் குடும்பத்திடம்
இருந்தது. அமெரிக்கா, ஜப்பானின் மீது போர்
தொடுத்தபோது, ஹோன்ஜோ வாள் அமெரிக்கர்களின் வசம் சென்றது.
பின் இதனை யாரும் பார்க்கவில்லை.
Tsar Library
ரஷ்யாவின் மாஸ்கோவிலுள்ள
ஜார் மன்னரின் நூலகத்தில் கிரேக்க தொன்மையான நூல்களின் கலெக்ஷன்கள் இருந்தன. பதினாறாம்
நூற்றாண்டில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய லைப்ரரி இது. இவான்
என்ற மன்னரின் காலத்தில் இந்த பொக்கிஷ லைப்ரரி காணாமல் போனது. இழந்த நூல்களை பெற பல ஆய்வளார்கள் முயற்சித்தும் இன்றுவரை பயனில்லை.
4
ஆட்டோமேடிக் ரயில்!
ஆஸ்திரேலியாவில்
சுரங்கப்பணிகளைச் செய்துவரும் பன்னாட்டு நிறுவனமான ரியோடின்டோ தானியங்கி ரயிலை இயக்கி
சாதித்துள்ளது.
இதன்மூலம் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் இரும்புத்தாதுவை நாடு முழுக்க
கொண்டு செல்லும் வாசல் திறந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின்
வடமேற்கு பகுதியிலுள்ள பில்பாரா பகுதியில் 69 ஆட்டோமேடிக் ரயில்களை ரியோடின்டோ
2012 லேயே டெஸ்ட் செய்யத் தொடங்கிவிட்டது. பாலைவனப்பகுதியிலிருந்து
பாரபர்டோவிலுள்ள நகரமான வாம்பட் ஜங்ஷனிலிருந்து நூறு கி.மீ இயக்கியுள்ளது.
ரயிலுக்கான கட்டுப்பாட்டு மையம் பெர்த்திலுள்ளது. "தானியங்கி ரயிலின் பாதுகாப்பு, வணிகத்திற்கான பலன்களை
ஆய்வு செய்யத்தொடங்கியுள்ளோம்" என்கிறார் ரியோடின்டோவின்
அதிகாரியான கிறிஸ் சாலிஸ்பரி. அடுத்தாண்டு முழுக்க தானியங்கி
ரயில்கள் என்பது ரியோடின்டோவின் திட்டம்.
5
விஷமுறிவு மருந்துகள்!
செரிமானமாகாத உணவு
விலங்குகளின் உடலில் செரிமாகாத உணவால் வயிற்றில் உருவாகும் கல், முடி, தாவர நார்கள் ஆகியவற்றைக் கொண்ட செரிமானமாக உணவு முன்னர்,
நச்சுமுறிவு மருந்து. அரபி எழுத்தாளரான அல் பிருமி,
சாத்தானின் துண்டு என
இதனைக் குறிப்பிடுகிறார். ஐரோப்பாவின் பிளேக்நோய் மருந்தாக பயன்பட்டாலும் வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவது. விஷங்களை நீர்த்துபோகச்செய்யும் என்றாலும் உயிருக்கு பாதிப்பு தந்த நிகழ்வுகளும் உண்டு.
மித்ரிடேட்ஸ்
ஆர்மீனியா மன்னரான ஆறாம் மித்ரிடேட்ஸ்(கி.பி134) பெயர் வைக்கப்பட்டுள்ள நச்சுமுறிவு மருந்து.
உணவு படுகொலையைத் தடுக்க, தினசரி சில மி.லி விஷத்தை சாப்பிடுவது இதன் முக்கிய முறை. தேள்,கனிம விஷம்,விஷ காளான்கள் ஆகியவற்றை மித்ரிடேட்ஸ் சாப்பிட்டார்.இறுதிவரை இவரை எதிரிகள் அசைக்கமுடியவில்லை. 54 பொருட்கள் கலந்து இப்பொருள் தயாரிக்கப்படுகிறது.
முத்துக்கள்
சிப்பியில் தூசிகள் காரணமாக உருவாகும் முத்துக்கள் வயிற்றுவலி உள்ளிட்ட சில பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. சீன மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் இன்றும் பயன்படுத்தப்படும் பொருள்.
நன்றி: முத்தாரம்
தொகுப்பு: விக்டர் காமெஸி, லான் லூர்தர்