குங்குமம் மிக்சர்!
மூங்கிலில் மெகா
துர்க்கா
துர்க்கை பூஜையில்
மெகா சைஸ் அலங்கார துர்க்கா சிலைகள்தான் இதில் பெரிய வசீகரம். முதலில்
110 அடிதான் லட்சியம். நிச்சயமானது 70 அடிதான்.
மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூரில் 70 தொழிலாளர்களின்
உழைப்பில் டிசைனர் நூருதீன் அகமது வழிகாட்டுதலில் ஏறத்தாழ 6 ஆயிரம்
மூங்கில் பீஸ்களை இணைத்து துர்க்கையை உருவாக்கியுள்ளனர். பிஜூலி,
மோகோல் உள்ளிட்ட மூங்கில் வகைகளில் இதில் இடம்பெற்றுள்ளன.
"ஒருவாரம் இரவும் பகலுமாக செய்த வேலை இது. மக்களின் ஆதரவு துர்க்கையை நாங்கள் 100 அடியில் அமைக்க
உதவும்" என்கிறார் அகமது உற்சாகமாக. கின்னஸ் சாதனைக்கு 110 அடியில் துர்க்கையை மூங்கிலில்
அமைத்தாலும் அது சரிந்துவிட்டது. நிச்சயம் சாதிப்போம் என முயற்சித்து
வருகின்றனர் அகமது அண்ட் கோ.
லக்காய் மாட்டிக்கிச்சு!
லக்காய் மாட்டினாலும்
தீராத கிக்காய் ஷாப்பிங் செய்வதுதானே பெண்களின் உலக வழக்கம். யுனிவர்சிட்டி
பெண் ஒருவருக்கு ராங் ரூட்டில் லக்காய் கிடைத்த பணம் என்னாச்சு தெரியுமா?
தென் ஆப்பிரிக்காவின்
வால்டர் சிசுலு பல்கலையில் நடந்தது சிம்பிள் தவறுதான். விளைவு?
அரசே தவிக்கும் அவலம்.கடந்த ஜூனில் தனியார் நிறுவனம்
ஒன்று அரசு கல்விக்கடனில் உணவுக்காக தரவேண்டிய தொகை 107 டாலர்களை மாணவி ஒருவருக்கு
மாற்றும்போது திடீர் குளறுபடி செய்ய, தவறுதலாக ஒரு மில்லியன்
டாலர்கள் மாணவியின் வங்கிக்கணக்கில் ஏறிவிட்டது. எங்கே தப்பு
என அரசு தவறை என்கொய்ரியில் கண்டுபிடித்து விட்டதுதான். ஆனால்
என்ன புண்ணியம், பார்ட்டி, ஆப்பிள்போன்,
டிசைனர் ட்ரெஸ் என 61 ஆயிரம் டாலர்களை காலி செய்துவிட்டார்
அந்த மாணவி. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா தேசிய மாணவர் கல்விநிதி
ஆணையம், குவியும் கல்விக்கடன் அப்ளிகேஷன்களால் தள்ளாடி வரும்
நிலையில் இந்த விவகாரம் அரசின் திறனுக்கு ஸ்வீட் சாம்பிள்.
டெர்மினேட்டர்
மனிதர்கள்!
அமெரிக்காவில்தான்
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் துப்பாக்கியால் பதில் சொல்லி, பலரையும்
டெர்மினேட்டராய் மாறி காவு வாங்குவார்கள். இந்தியாவிலும் தற்போது
அதே ட்ரெண்ட் தொடங்கிவருகிறது. டெல்லியில் ஒரு பெண் சொன்ன ஒரே
வார்த்தை அவரை ஐசியூவில் வைக்கும்படி கொண்டுவந்துவிட்டது.
டெல்லியின் கிரேட்டர்
நொய்டாவிலுள்ள சமஸ்பூர் கிராமத்தைச்சேர்ந்த சஞ்சய், ஓம்வீர் என்ற இருவர்தான்
கதாநாயகர்கள்.வெளியே சென்றுவிட்டு ஊர் திரும்பியவுடன் நம்பர்
1 அவசரம். அருகிலிருந்த பெண்மணியின் வீட்டருகே
இருந்த இடத்தை பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் அதைக்கவனித்த அப்பெண்மணி
அவர்கள் இரவு 8.30க்கு திரும்ப அதே இடத்தில் அடுத்த ரவுண்ட் நம்பர்
1 க்கு வரும்போது, 'நான்சென்ஸ்' என சுத்தம் பற்றிய பாடம் எடுத்திருக்கிறார். செம போதையிலிருந்த
இருவரும் 4 மணிநேரம் கழித்து பெண்மணியின் வீட்டுக்கு துப்பாக்கி
சகிதமாக வந்து தாறுமாறாக சுட்டதில் வீட்டுக்காரம்மாவுக்கு வயிற்றில் தோட்டா. எப்ஐஆர் போட்டு டபுள் கிரிமினல்களையும் தேடி வருகிறார்கள் போலீஸ்வாலாக்கள்.
ஒரிஜினல் இந்தியன்!
குஜராத்தைச் சேர்ந்த
தைரியா புஜாராவின் கதையைக் கேட்டால் ஸ்வதேஷ் என்ற இந்திப்படம் உங்கள் மைண்டில் ஓடலாம். ஏன் காந்தியின்
ஆப்பிரிக்கா - இந்தியா லைஃபும் கூட நினைவுக்கு வரலாம்.
பயோமெடிக்கல் எஞ்சினியரிங்
படித்த புஜாராவின் கனவும் அனைவரைப்போல அமெரிக்காவில் க்ரீன் கார்டு வாங்குவதுதான். ஆனால்
நியூயார்க்கில் மனைவி உடன்துணையாக இருக்க 9
டூ 5 வேலைக்கு சென்றவருக்கு, மனதில் நிம்மதியில்லை. உடனே, வேலையை
ரிசைன் செய்தவர், 2013 ஆம் ஆண்டு YCenter என்ற நிறுவனத்தை தன் நண்பர் ஆதித்யாவுடன் தொடங்கி ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு
நாடுகளில் தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆளுமை பயிற்சிகளுக்கான கேம்ப் நடத்தினார்.
தற்போது இந்தியாவின் கிராமப்புறங்களை மேம்படுத்த பிளான் செய்து வருகிறார்.
"பெரிய கனவுகளை நிறைவேற்ற தகவல்தொடர்பு அவசியம். அதை
நாங்கள் உங்களுக்கு தருவோம்" என புன்னகைக்கிறார் புஜாரா.
இன்றைக்கு குளோபல்
சேஸிங் சிங்கம் விராட் கோலிதான். ஆக்ரோஷமானால்
பவுலர்கள் வீசும் பால் மைதானத்திலிருந்து ஆகாயத்திற்கு பறக்கும். இத்தனை பெருமை இருந்தும் விராட் கோலிக்கு உலக லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
அதற்காக வருந்திய கொலவெறி கோலி ஃபேனின் ஆதங்க பேனர்தான் மேலேயுள்ள தலைப்பு.
யார் அந்த ரசிகர்?
லாகூரில் நடைபெற்ற
உலகலெவன்
Vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பலரும் பலவித பேனர்களை
வைத்திருந்தனர். ஆனால் பாகிஸ்தான் போலீஸ்காரர் தன் 'மேரி மீ கோலி' என்று வைத்திருந்த பேனர்தான் செம சென்சேஷனல்
ஆனது. பின்னே, இருக்காதா? பெண்கள் வைத்திருக்கும் பேனரை ஆண் ஒருவர் வைத்திருந்தால், என இணையமே கிச்சு கிச்சு மூட்டியது போல குலுங்கி குலுங்கி சிரிக்க போலீஸ் போட்டோ
ஆஹா ஓஹோ ஹிட். இதே டயலாக்கை அனுஷ்கா சர்மா சொன்னா இந்தியாவே ஹேப்பி
அண்ணாச்சி.
t-family:TAUN_Elango_Valluvan'>
ஹேர்கட் தடா!
பறவைக்காய்ச்சல், மூளைக்காய்ச்சல்
என இதற்கெல்லாம் நாட்டுக்குள் நுழையாதே என தடா சொல்லுவார்கள். முடி பயத்தில் காஷ்மீரில் அந்நியர்களுக்கு
தடை சொல்லியிருக்கிறார்கள். எதற்கு இந்த தெனாலி பயம்?
ஜம்மு காஷ்மீரின்
தோடா மாவட்டத்தில்தான் இந்த பீதி. பின்னே தொடர்ச்சியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக
பெண்களின் கூந்தலை கடை ரிப்பன் வெட்டுவது போல வெட்டிக்கொண்டே சென்றால் திகில் தீயாக
பரவாதா? எனவேதான் வெளியூர் ஆட்கள் உள்ளே நுழைய 2 மாதம் தடை விதித்துவிட்டனர். ஏறத்தாழ பத்து நாட்களில்
14 கூந்தல் வெட்டு நிகழ்வுகள்.
"கூலிகள்,
பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் என பலரும் இரண்டு
மாதங்களுக்கு மாவட்டத்தில் நுழைய தடை விதித்துள்ளோம்" என
கூலாக பேசுகிறார் மாவட்ட வளர்ச்சி மேம்பாட்டு கமிஷனர் பவானி ராக்வால்.
தொகுப்பு: ரோனி ப்ரௌன், விக்டர் காமெஸி