முத்தாரம் ஒருபக்கம்!
கடலுக்குள் கேபிள்!
மைக்ரோசாஃப்ட்
மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் அதிவேக இணைய இணைய இணைப்பு தருவதற்காக பில்பாவோ, ஸ்பெயின்,
வர்ஜீனியா பீச், வர்ஜீனியா ஆகிய பகுதிகளை கேபிள்
மூலம் இணைத்துள்ளனர். மொத்தம் 6,437 கி.மீ. கேபிள் கட்டுமானம், பராமரிப்பு
உள்ளிட்டவற்றுக்கு டெல்ஷியஸ் நிறுவனம் பொறுப்பு.
அட்லாண்டிக் கடலின்
அடியே ஸ்பெயின்
-வர்ஜீனியா பகுதியைகளை இணைத்துள்ள கேபிள்களின் எடை 5,125 டன்கள். ஒரு நொடிக்கு 160 டெராபைட்
தகவல்களை அனுப்ப முடியும். எரிமலைகள், பவளப்பாறைகள்,
நிலநடுக்க ஏரியாக்களை தவிர்த்துவிட்டு கேபிள்களை பதித்து பணிகள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்காவை தாக்கிய ஹார்வி, இர்மா புயல் சமயங்களில்
நியூயார்க் மற்றும் நியூஜெர்சி ஆகிய மாநிலங்களில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட காரணம்,
புயலினால் சிதைந்துபோன கேபிள்கள்தான். மரியா என்று
புதிய கேபிள்கள் இந்த தொல்லையை நீக்ககூடும். ஹாங்காங்
- லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை இணைக்க கூகுளுடன் இணைந்து ஃபேஸ்புக் பணியாற்றி
வருகிறது.
விறகடுப்பு மாசு!
இங்கிலாந்தின் லண்டன் மேயரான சாதிக்கான்,
விறகு அடுப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் அமைச்சரான மைக்கேல் கோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் புல்டோசர்கள் உள்ளிட்ட எந்திரங்களை ஆற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளடங்கும். தென்கிழக்கு இங்கிலாந்தில் மட்டும் விறகடுப்பின் பயன்பாடு
16%(1.5 மில்லியன்கள்).
தேசியளவில் 5% ஆக உள்ளது.
தூய
சுற்றுப்புறச்சட்டத்தின்படி 2025 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ மாசு என
அடையாளமிடப்படும் இடங்களில் கரிம எரிபொருட்களை மூலமாக கொண்ட வாகனங்களை இயக்க முடியாது.
விரைவில் தூய சுற்றுப்புறம் திட்டத்தின் கீழ் 3
பில்லியன் பவுண்டுகள் திட்டமதிப்பில் சூழலைக் காக்க திட்டங்கள் தயாராக உள்ளன. கடந்த 13 மாதங்களில் காற்று மாசுபாடு குறித்து லண்டன் மேயர் அரசுக்கு அளிக்கும் ஏழாவது கடிதம் இது.
"400 பள்ளிகளுக்கு மேல் உள்ள ஏரியாக்களில் காற்று மாசின் அளவு அரசு அங்கீகரித்த லிமிட் தாண்டிவிட்டது." என எச்சரிக்கிறார் கான்.
ஃபிட்ஜெட் ஸ்பின்னர் போன்!
ஃபேன்ஸி ஸ்டோர்களை
கடந்து பார்மஸிகள்,
துணிக்கடைகளிலும் கூட ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களின் சேல்ஸ் தூள் கிளப்பி
வருகிறது. இவ்வளவு ஃபேமஸான பொருளை அப்டேட் பண்ணி காசு பார்க்காமல்
விடுவார்களா? யெஸ். ஃபிட்ஜெட் ஸ்பின்னரிலும்
போன் வந்தாச்சு.
ஹாங்காங்கின் சில்லி
இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் உலகின் முதல் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் போன் K118 யை
இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கு ப்ளூடூத்
கருவியாக பயன்படும் கருவி இது. 8 ஜிபி மெமரிகார்டு,
280 mAh பேட்டரியோடு இந்த போன் சந்தைக்கு புதுவரவு. இதோடு F05 என்ற ஜிபிஎஸ் வசதி கொண்ட போனும் சேல்ஸில் உண்டு. K118 ஃபிட்ஜெட் ஸ்பின்னர் போனை ஆன்லைனில்
அம்சமாக ஆர்டர் பண்ணி வாங்கி உலக ட்ரெண்டிங்கில் கலக்கியெடுக்கலாம். விலை ரூ. 1300
ஓரிகாமி ரோபோ!
ஓரிகாமி ரோபோ மெட்டல், பிளாஸ்டிக்
ஷீட்டுகளில் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவை நடக்க,
குதிக்க ஏன் நீந்தக்கூட முடியும் என்றாலும் பிராக்டிக்கலாக பெரிய உபயோகமில்லை.
தற்போது அடுத்த அப்டேட்டாக அமெரிக்காவின் எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள்(CSAIL)
origami exoskeletons மூலம் திரும்ப வந்துள்ளனர்.
ஓரிகாமி எக்ஸோகெலிட்டன்களில்
காந்த க்யூப் வைத்து அதனை இயக்குவது இதில் புதுசு."ஓரிகாமி ரோபோக்களை
பல்வேறு டாஸ்க்குகளை செய்யுமாறு உருவாக்குவதே எங்களது எதிர்கால லட்சியம்."
என்கிறார் ஆராய்ச்சியாளரான டேனியலா ரஸ். ஆழ்கடல்பணி,
விண்வெளியில் குடியேற்றம் உள்ளிட்ட ஆபத்தான பணிகளுக்கு ஓரிகாமி ரோபோக்களை
பயன்படுத்த முடியும். "சாப்ட்வேர்களை அப்டேட் செய்வது போல
முழு ரோபோக்களையும் அப்டேட் செய்வோம்" என உற்சாகமாகிறார்
டேனியலா.
தொகுப்பு: ரஞ்சித் பணிக்கர், ஜோசப் குருப்பு