முத்தாரம் ஒருபக்கம்!






கூகுள் பிக்ஸல் 2!

பலரும் சின்சியராக வெய்ட்டிங்கில் எதிர்பார்த்திருந்த கூகுள் பிக்ஸல் 2, விரைவில் ரிலீஸ். செகண்ட் ஜெனரேஷன் போனில் முந்தைய போனின் அதே 5 இன்ச் AMOLED  ஹெச்டி ஸ்க்ரீன், காம்பேக்ட் டிசைன், 2700mAh பேட்டரி, க்வால்கோம் ஸ்நாப்டிராகன் 835 ப்ரோசஸர், 4ஜிபி ராம், ஓரியா 8 ஓஎஸ், 12 எம்பி கேமரா, வாட்டர் ரெசிஸ்டன்ட் என அசத்தினாலும் இதில் ஹெட்போன் ஜாக் கிடையாது. கூகுளிடம் வயர்லெஸ் ஹெட்போன் வாங்கினால் விலை பத்தாயிரம்.

அழகிய அலுமினிய கட்டமைப்பில் புகைப்படங்களை துல்லியமாக எடுக்க OIS தொழில்நுட்பம் பிக்ஸல் 2வில் கைகொடுக்கிறது. ஓரியோவின் வருகையால் பெரிய போன்களிலும் எளிதாக பயன்படுத்தும்படி சர்ச் பார் கீழே இடம் மாறியுள்ளது. நவம்பர் 1 அன்று இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் கூகுள் பிக்ஸல் 2 -61,000(64GB) 70,000(128GB) விலையில் கிடைக்கும்.   

2


 போர்விலங்குகள்

யானை

உலகின் மிகப்பெரும் பேருயிரியான யானை இல்லாமல் போர் ஏது? வில்லாளிகளை, ஈட்டி எறிபவர்களை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கவசம் அணிந்துகொண்டு களம் புகுந்தால் எதிரிகளுக்கு கொள்ளை நாசம் நிச்சயம். இந்தியாவில் கி.மு. நான்காம் நூற்றாண்டுகளிலிருந்து போரில் முதன்முதலாக களம் புகுந்தது. பின் கி.மு.4500 காலகட்டத்தில் ஆசிய காட்டு யானைகளை பிடித்து வந்து போர்யானைகளின் மூலம் ட்ரெய்னிங் கொடுத்து மூர்க்கமான போர்முரசு கொட்டும் யானைகளாக்குவது அன்றைய வழக்கம்.
 கி.மு 331 இல் கிரேக்க மன்னர் அலெக்ஸாண்டர் பெர்சியா மன்னருடன் போரிட்டபோது, பெர்சியர்கள் யானைகளை அலெக்ஸாண்டருக்கு எதிராக பயன்படுத்தினார். போரில் தோற்றாலும் யானைகளின் வீரத்தில் மயங்கிய அலெக்ஸாண்டர் அந்த யானைகளை தன் படையில் சேர்த்து கொண்டார். ரோம், கிரேக்கம் என பல போர்களின் யானைகள் பங்கேற்றாலும் காயம்படும்போது எதிரிப்படைகளை விட தன் படைகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியதால் அவை கிபி 43 ஆம் ஆண்டிலிருந்து மெல்ல படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது.

புறாக்கள்!

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தூது செல்ல பயன்படும் பறவை புறா. அப்போது பெர்சிய மன்னரான சைரஸ் தனது ஆளுகைக்கு உட்பட்ட பிறதேசங்களின் நியூஸ்களை புறாக்களின் மூலமே தெரிந்துகொண்டார். இதற்கு காரணம், 2,900 கி.மீ தூரத்தை பறந்து கடந்தாலும் தனது புறப்பட்ட இடத்தை புறாக்கள் மறப்பதில்லை என்பதுதான். புறாக்களை கையோடு கொண்டுபோய் செய்திகளை தனது நாட்டிற்கு  தெரிவிக்கும் ஒன்வே முறைதான் இதன் பலவீனம். முதல் உலகப்போரின்போது செய்தி சொல்ல பயன்படுத்திய பல்வேறு நாடுகள் பயன்படுத்திய புறாக்களின் எண்ணிக்கை 2 லட்சம். பிரான்ஸ் நாட்டின் செர் ஏமி என்ற புறா, ராணுவ முக்கியத்துவம் கொண்ட 12 கடிதங்களை பரிமாறி ஹிஸ்டரியில் தனது இடத்தை பதிவு செய்து பின்னர் ஜெர்மனியரின் தோட்டாக்களுக்கு பலியானது.

கரடிகள்
புறா, யானை ஏதாவது பிரயோஜனமிருக்கிறது ஆனால் கரடியை வைத்து என்ன செய்ய? இரண்டாம் உலகப்போரில் கரடியை ஜெர்மானியர்களுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர் என்பதே ஆச்சர்யம்தான். போலந்து ராணுவத்தில் வாய்டெக் என்ற சிரிய கரடி வளர்க்கப்பட்டது. சோல்ஜரைப்போலவே நம்பர், கிரேடு அனைத்தும் பெற்று 6 அடி 400 கிலோ என மிரட்டிய வாய்டெக்கை சில ராணுவ சமாச்சாரத்திற்கு போலந்து ராணுவம் பயன்படுத்தியது. பின் ஸ்காட்லாந்தின் எடின்பர்க ஜூவில் காலம்தள்ளிய வாய்டெக் 1963 ஆம் ஆண்டு இறக்கும்வரை டிவி ஷோக்களிலும் திறமை காண்பித்து மிரட்டியது.

ஓட்டகங்கள்
இன்றும்கூட பாலைவனங்கள், மலைத்தொடர்களில் பயணிக்க உதவும் சூப்பர் சாம்பியன் ஓட்டகம்தான். நீரற்ற சூழல்களிலும் மாரத்தான் வீரர்போல நடைபோடும் ஒட்டகத்திடம் குதிரைவேகம் எதிர்பார்த்தால் கஷ்டம். கி.மு. 853 ஆம் ஆண்டிலேயே அராபிய மன்னர் கிண்டிபு ஆயிரம் ஒட்டகங்களை தனது படையில் வைத்திருந்தார் என்பது அதன் திறத்தை சொல்லும். கி.பி ஏழாம் நூற்றாண்டில் பெர்பர் மற்றும் மூரிஸ் எனும் ஒட்டகப்படைகள் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, தெற்கு ஸ்பெயின் ஆகிய இடங்களில் பராமரிக்கப்பட்டு வந்தன. பின்னாளில் ஓட்டகங்கள் ஐரோப்பிய ஆர்மியிலும் இடம்பெற்றன.
 நோபல்பரிசு வென்ற மூன்று விஞ்ஞானிகள்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ், மைக்கேல் டபிள்யூ யங் ஆகியோர் மருத்துவப்பிரிவில் நோபல் பரிசுக்காக தேர்வாகி சாதித்துள்ளனர்.

மனிதர்களின் உடலில் உயிரியல் கடிகாரத்தை இயக்கும் மூலக்கூறு இயக்கத்தை கண்டறிந்ததற்காக இம்மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. "தாவரங்கள், விலங்குகள் ஆகியவை உயிரியல் சுழற்சி மூலம் பூமியின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப மாறுகின்றன என்பதைக் கூறும் கண்டுபிடிப்பு" என்கிறது நோபல் கமிட்டி அறிக்கை. 1901 லிருந்து வழங்கப்பட்டு வரும் விருதினை 211 விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இதில் பெண்களின் பங்கு 12.(இயற்பியல் பரிசு வென்ற நோபல் பெண்மணிகள் மேரி க்யூரி, மரியா கோபர்ட் மேயர்) .


 தொகுப்பு: விக்டர் காமெஸி, சின்னி முருகன்


பிரபலமான இடுகைகள்