பிட்ஸ் 2.0





கழிவுநீரில் கொழுப்பு!

இங்கிலாந்தின் லண்டனிலுள்ள கழிவுநீர் குழாய்களில் தொடர்ந்து கொழுப்பு எண்ணெய் படிவது பிரச்னையாக உருவாகியுள்ளது. என்ன காரணம், க்ரீஸ்ட்ராப் எனும் கழிவுநீரை வடிகட்டும் எந்திரத்தை பொருத்தாததே முக்கியகாரணம். ஏறத்தாழ 90% ஹோட்டல்கள் இம்முறையில் செயல்படுவது தெரிய வந்துள்ளது.


இதன் விளைவாக, சாப்பாட்டுத் தட்டுகளிலுள்ள ஆயில், கொழுப்பு, உணவு மிச்சங்கள் குழாய்களில் தொடர்ந்து படிந்து நாளடைவில் கழிவுநீர் போக்குவரத்தை தடைசெய்கின்றன. அண்மையில் தேம்ஸ் நதியில் கழிவுப் பொருட்களில் உருவான 130 டன் கொழுப்பு பந்து மிதந்துகொண்டிருந்தது. "சரியான க்ரீஸ் ட்ராப் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது" என்கிறார் கழிவுநீர் சுத்திகரிப்பு குழுவின் மேனேஜரான ஸ்டீபன் பட்டென்டன். தேம்ஸ் நதியிலிருந்து டயப்பர்கள், குழந்தைகளின் உடைகள், டாய்லெட் நாப்கின்களை அகற்றியுள்ளனர்.

 பொருளாதார நோபல் பரிசு!

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரான ரிச்சர்ட் ஹெச். தாலேருக்கு(1945,நியூஜெர்ஸி) பொருளாதார நோபல் கிடைத்துள்ளது. பொருளாதாரத்தில் உளவியல் தொடர்பான தியரிக்காக நோபல் பரிசோடு, 1.1 மில்லியன் பணப்பரிசும் அளிக்கப்படவிருக்கிறது.

மட்டுப்படும் பகுத்தறிதல், நேர்மை, சுயகட்டுப்பாடு இன்மை ஆகியவற்றைப் பற்றியதே ரிச்சர்ட்டின் ஆராய்ச்சி. பொருளாதார முடிவுகளில் மனிதர்களின் உணர்வுகளின் தாக்கம் பற்றிய தியரியை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசுகள் தங்கள் பொருளாதாரத்தில் புகுத்தியுள்ளன.

1969 ஆம் ஆண்டிலிருந்து பொருளாத அறிவியல் பிரிவில் பொருளாதார நோபல் பரிசை ஸ்வீடனின் தேசிய வங்கியான The Sveriges Riksbank அளித்துவருகிறது. 48 முறை வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசை 78 பொருளாதார வல்லுநர்கள் பெற்றுள்ளனர்.    

இஸ்ரோவின் கார்டோசாட் பணி என்ன?
கார்டோசாட் 2
2007 ஆம் ஆண்டு பிஎஸ்எல்விசி 7 மூலம் விண்ணுக்கு சென்ற கார்டோசாட் சீரியசின் முதல் சாட்டிலைட் இது. 45 டிகிரியில் 9.6 கி.மீ தூரத்தை ஒரே படமாக எடுக்கும் திறன் பெற்றது.
கார்டோசாட் 2
2008 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி சி9 ராக்கெட் மூலம் வானில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் இது. நாட்டின் பாதுகாப்பு பணியை பான்குரோமேட்டிக் கேமரா மூலம் சின்சியராக செய்யும் செயற்கைக்கோள் இது.
கார்டோசாட் 2பி
கார்டோசாட் சீரியசின் 3,4வது செயற்கைக்கோள் ஏவுவதற்கான இடைவெளியான 6 ஆண்டுக்குள் வானில் ஏவப்பட்ட செயற்கைக் கோள் இது. பான்குரோமேட்டிக் கேமராவில் 26 டிகிரியில் படம் எடுக்க முடியும்.
கார்டோசாட் 2சி
இந்தியா பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்த உதவிய 25 மீ. ரிசொல்யூஷன் கேமரா கொண்ட பிஎஸ்எல்வி சி34 மூலம் ஜூன் 206 அன்று ஏவப்பட்ட சாட்டிலைட் இது.
கார்டோசாட் 2டி
பிப்.2017 அன்று பிஎஸ்எல்வி சி37 மூலம் வானில் ஏவப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி சாட்டிலைட் இது. பாதுகாப்பு பணியோடு கார்டோசாட் 2இயும் இதே பணியை பின்தொடர்கிறது.


சுதந்திர நாடு கடலோனியா! - விக்டர் காமெஸி

ஸ்பெயின் நாட்டிலுள்ள கடலோனியா அரசு, மக்களின் விருப்பத்திற்கேற்ப ஸ்பெயினிலிருந்து பிரியும் முடிவெடுத்துள்ளது.  7.5 மில்லியன் மக்கள் வாழும் கடலோனியாவின் தலைநகர் பார்சிலோனா. மெஸ்ஸி தன் ஜெர்சியில் பொறித்துள்ள அதே பாரசிலோனாதான். 90%  மக்களின் ஆதரவுள்ளது என்கின்றனர் பிரவினைவாதிகள்.

கடலோனியா தனக்கென தனி கொடி, பாராளுமன்றம், காவல்துறை கொண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் முதலீடும் செய்துள்ளது. கடலோனியா ஸ்பெயினிலிருந்து விலகினால்,  ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுகிறது என்றே அர்த்தம். இதன்விளைவாக, 30% வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுவதோடு ஸ்பெயினுக்கு கிடைக்கும் 21% வரி வருமானமும் அவுட்.

தனிநபர் வருமானம் - 33,600 டாலர்கள்
ஸ்பெயினுக்கு கொடுத்துள்ள அந்நிய முதலீடு - 43 பில்லியன் டாலர்கள்
வேலைவாய்ப்பின்மை - 13.2%(தேசிய அளவு 17.2%)
ஏற்றுமதி மதிப்பு - 73 பில்லியன் டாலர்கள்(தேசிய அளவு 25%)
கடலோனிய மக்கள்தொகை - 16%(ஸ்பெயின் மக்கள்தொகை 7.5மில்லியன்)
ஈட்டித்தரும் வருமானம் - 250 பில்லியன்(மொத்த ஜிடிபியில் 20%)
                            


ஸ்பெயின் இழக்கப்போவது என்ன?

ஸ்பெயின் நாட்டின் பெரும்பாலான கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைமையகங்கள் கடலோனியாவில்தான் உள்ளன.

இங்கு கார் உற்பத்தி தொழிற்சாலைகளும் அதிகம். 2016 ஆம் ஆண்டில் அதிக கார்களை தயாரித்தது ஸ்பெயினிலுள்ள கடலோனியாதான்.

மருந்துவமனைகள், மருந்து ஆராய்ச்சிநிலையங்கள் எக்கச்சக்கம்.

புகழ்பெற்ற FC BARCA அணி ஸ்பெயின் புட்பால் லீக்கிலிருந்து விலகவேண்டி வருவதோடு, இங்கிலாந்தின் EPL போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.

தொகுப்பு: ராமலிங்க ஈஸ்வரன், அருள்தேவ் வள்ளல்


பிரபலமான இடுகைகள்