எட்டுத்திக்கும் அறிவியல்!





காட்டுத்தீ!

அமெரிக்காவில் எரிந்த காடுகளின் பரப்பு -8.4 மில்லியன் ஏக்கர்கள்(2015),7.8 மி.(2017 செப்.வரை.)

ஐந்தில் நான்கு காட்டுத்தீ நிகழ்வுகளுக்கு மனிதர்களே காரணம்.

மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து நூறு அடி தூரத்தில் வீடு இருப்பது நல்லது. ஆனால் ஒரு கி.மீ தூரத்திற்கு நெருப்பு கங்குகள் பறக்கும் எனவே கவனம் அவசியம்.

காட்டுத்தீ சீசன் 1970 இல் 5 மாதங்கள் எனில் தற்போது 7 மாதங்களுக்கும் அதிகம்.


1971 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால்(Great Peshtigo fire) இறந்தவர்களின் எண்ணிக்கை 2,400.  

2

சிம்கார்ட்டுக்கு சோதனை!

தாய்லாந்தில் மொபைல் பேங்கிங், எலக்ட்ரானிக் வழி பண மோசடிகளைத் தவிர்க்க புதியவழியை அரசு கண்டறிந்துள்ளது. முகத்தையும் மற்றும் விரல்களையும் ஸ்கேன் செய்ய ஓகே சொன்னால்தான் இனி தாய்லாந்தில் உங்களுக்கு சிம்கார்ட்டுகளே கிடைக்கும்.

வங்கதேசம், பாகிஸ்தான்,சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் விரைவில் பயோமெட்ரிக் ஸ்கேன் அமலாகவிருக்கிறது. அண்மையில் 4 லட்சம் தாய்லாந்து சிம்கார்ட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த மூன்ற சீனர்களை தாய்லாந்து போலீஸ் கைது செய்து, சிம்களை,கணினிகளைக் கைப்பற்றியது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்கேன் சோதனைகளுக்கு  சுற்றுலாப்பயணிகளுக்கும் விதிவிலக்கு கிடையாது. "இத்திட்டம் மூலம் மக்களுக்கு பிரைவசியோடு பாதுகாப்பையும் உறுதி செய்கிறோம்" என்கிறார் தாய்லாந்தின் தொலைபேசி ஆணையத்தின்(NBTC) செயலாளரான தகோர்ன் தன்டாஷித்.  


span lang=EN-ZW style='font-size:18.0pt;font-family:"Arial","sans-serif";mso-ansi-language: EN-ZW'>
3
சிகரெட்டில் ஹைட்ரஜன் சேமிப்பு!

சிகரெட் குப்பைகள், சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன என்றாலும் அவை ஹைட்ரஜன் சேமிக்கும் பொருட்களாக பயன்படும் என உத்தரவாதம் தருகின்றனர் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

சிகரெட்டின் பஞ்சுப்பகுதி, கார்பன் மற்றும் ஹைட்ரஜனை சேமிக்கும் திறன் கொண்டது. "சிகரெட்டின் பஞ்சுப்பகுதியை வீண் என்றே நினைப்போம் ஆனால் அவற்றில் குறைவான கார்பன் வெளியீடு கொண்ட ஹைட்ரஜனை சேகரிக்க முடியும் என்பது மாசுபாடுகளை குறைக்கும் என்பது புதிய கண்டுபிடிப்புதானே! " என எனர்ஜியாக பேசுகிறார் பேராசிரியர் மொகாயா.

 உலகம் முழுவதும் ஆண்டுக்கு 6 ட்ரில்லியன் டன்கள் சிகரெட்டுகள் புகைக்கப்பட்டு, 8 லட்சம் சிகரெட் பஞ்சுகள் உருவாகின்றன. சிகரெட் பஞ்சுகளிலிருந்து உருவாகும் கார்பனுக்கு Hydrochar என்று பெயர். இவை போரஸ் கார்பன் வேதிப்பொருட்களை ஆக்சிஜனோடு சேர்ந்து உருவாக்குகின்றன. இது ஹைட்ரஜனை உள்ளிழுக்கும் தன்மை கொண்டது என்பதால் இந்த ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.


 4
சீனாவின் ராட்சஷ கப்பல்!

தற்போது சீனாவில் செயற்கை தீவை உருவாக்கும் வசதிகள் கொண்ட கப்பலை அரசு அசுர வேகத்தில் உருவாக்கி வருவதாக சீனா அரசு தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

டியான் குன் ஹாவோ எனும் இக்கப்பல் மணிக்கு 6 ஆயிரம் க்யூபிக் மீட்டர் அளவு தோண்டும் திறன் கொண்டது. இது மூன்று நீச்சல்குள பரப்பின் அளவு. இக்கப்பலின் மூலம் உருவாக்கப்படும் தீவுகளை ராணுவச்செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவது அரசின் பிளான். வரும் ஜூனில் டெஸ்ட் செய்யவிருக்கும் டியான் குன் ஹாவோ, ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த கப்பலாக இருக்கும். இதன் செல்லப்பெயர் magic island maker. தென்சீனக்கடலில் நடைபெறும் வணிக மதிப்பு 5 ட்ரில்லியன் டாலர்கள். பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளின் கடல்பரப்பையும் தனக்கு சொந்தம் என சீனா அடம்பிடித்து வருவது நீங்கள் அறியவேண்டிய செய்தி.

 5
சோனியின் ஐபோ!

ஜப்பானிய எலக்ட்ரானிக் ஜாம்பவான் சோனி, ரோபோ வளர்ப்பு பிராணியை ரிலீஸ் செய்்துள்ளது. ஐபோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபா நாயுடன் இணைய இணைப்பு மற்றும் ஏஐ வசதியும் உண்டு.

வெள்ளை நிறத்தில் 30 செ.மீ நீளத்தில் தன் உணர்வுகளை வெளிக்காட்டும் திறன் கொண்ட ரோபோ காவலன் ஐபோ, கறுப்பு நிற காதுகளோடு, உற்சாக வாலும் கொ்ண்டுள்ளது. சென்சார், மைக் ஆகியவற்றைக்கொண்டுள்ள ஐபோவை ஸ்மார்ட்போன் வழியாக தூரத்திலிருந்தும் இயக்க முடியும். 1999 ஆம் ஆண்டு ரிலீசானபோது, இருபதே நிமிடத்தில் 3 ஆயிரம் ஐபோ ரோபோவை($2,200) மக்கள் வாங்கிச்சென்றனர். தற்போது விற்பனைக்கு வந்துள்ள ஐபோ ரோபோவின் விலை 1,750 டாலர்கள்.
6
ஷெல்லி சொல்லும் கதை!

ட்விட்டர் போடுவதற்கு மட்டும்தானா சாப்ட்வேர்கள்? எம்ஐடியின் புதிய பாட் அப்ளிகேஷன் மிரள வைக்கும் கதைகளை எழுதி சாதித்திருக்கிறது. ப்ராங்கென்ஸ்டீன் கதை எழுதிய மேரி ஷெல்லியின் நினைவாக ஷெல்லி பெயர் சூட்டப்பட்டுள்ள பாட்டுக்கு முதலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கதைகள் கூறப்பட்டன.

"ஷெல்லி எழுதிய கதைகள் அனைத்தும் ஹாரர் பிரிவில் வித்தியானவை" என்கிறார் எம்ஐடி மீடியாலேபின் ஆராய்ச்சியாளர் பினார் யானர்டாக். ஷெல்லி எழுதிய கதைகளின் முதல்வரி ட்விட்டரில் வெளியிடப்பட்டு அவ்வரிகளைக் கொண்டு எழுத்தாளர்களும் கதைகளை எழுதியுள்ளனர். நாவல் ஆசிரியரான ஸ்டீபன் கிங், ஒரு பாராவை சிறப்பாக எழுத ஓராண்டு எடுத்துக்கொள்கிறார். ஆனால் ஷெல்லிக்கு தேவைப்பட்டது சில நொடிகளே. தற்போது ஷெல்லிக்கு நாவலின் மெகாபைட்ஸ் குறித்த பயிற்சி தொடங்கியுள்ளது. விரைவில் ஷெல்லி எழுதிய இபுத்தகங்களையும் நாம் வாசிக்கும் சான்ஸ் உண்டு.  

தொகுப்பு: விக்டர் காமெஸி, கா.சி.வின்சென்ட்  
நன்றி: குங்குமம் 



பிரபலமான இடுகைகள்