அறிவியல் நமதே!






சூப்பர் எலாஸ்டிக் கண்டுபிடிப்பு!

விண்வெளி போன்ற இடங்களிலும் பயன்படுத்தும் தன்மையிலான நினைவகப்பொருளை யுகான் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சியோக் வூ லீ தலைமையிலான குழு கண்டுபிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதற்கு முந்தை நினைவகப் பொருட்கள் காந்தம் மற்றும் வெப்பத்தினால் தகவல்கள் அழிக்கப்படும் அபாயமும் இருந்தது.


அமெரிக்காவிலுள்ள பால் கான்ஃபீல்டு கால்சியம் அயர்ன் ஆர்சனைடு (CaFe2As2) பற்றி செய்துள்ள ஆராய்ச்சியை லீ எடுத்துக்கொண்டார். கால்சியம் அயர்ன் ஆர்சனைடு கடுமையான அழுத்தத்தையும், வெப்பநிலையையும் தாங்கும் பொருள். இதனுடைய இயல்பு வடிவத்தை விட்டு நீங்கும்போது, அதன் நெகிழ்வுத்தன்மை கூடுவதை கண்டுபிடித்தார் லீ. பிற உலோகங்கள் வடிவச்சிதைவு 0.5% எனில் கார்பன் அயர்ன் ஆர்சனைடில் 13% மட்டுமே. வலிமையானதும் 50 கெல்வின் - -370 வெப்பநிலையிலும் தாக்குப்பிடிக்கும் பொருள் இது. "நாங்கள் 400 பொருட்களை இதுவரை சோதித்துள்ளோம். இது சூப்பர் எலாஸ்டிக் பொருட்களை பற்றிய ஆராய்ச்சி உலகை திறந்துள்ளது" என உற்சாகமாக பேசுகிறார் லீ

2
தற்கொலையை தடுக்கும் அல்காரிதம்!

மன அழுத்தத்தில் தற்கொலை செய்பவர்களின் மூளையை ஸ்கேன் செய்து, அவர்களை காப்பாற்றும் அல்காரிதத்தை கார்னகிமெலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சோதனை முறையில் உள்ள இதன் எண்ணங்களை அறியும் திறன் 94% துல்லியமாக உள்ளது. "தற்போதைய டெஸ்ட்டுகளில் அல்காரிதம் சிறப்பாக செயல்படுகிறது. மூளைக்கான ஸ்கேன் செலவு சிறிது அதிகம் என்றாலும் இது முக்கிய கண்டுபிடிப்பு" என பெருமையாக பேசுகிறார் உளவியலாளரும் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்தவருமான மார்செல் ஜஸ்ட். 34 பேர் கலந்துகொண்ட ஆராய்ச்சியில், FMRI ஸ்கேன் செய்து வார்த்தைகளை வைத்து பாசிட்டிவ், நெகட்டிவ் என  வார்த்தைகளை கூறும்போது,நியூரானின் செல்களில் ஏற்படும் மாற்றங்களை கணித்துள்ளனர். தன்னார்வலர்களை வைத்து நடத்திய சோதனையில் விரைவில் மனநல பாதிப்பு கொண்டவர்களை வைத்து நடத்தவிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
3

பிரமிடு மர்மம்!

எகிப்திலுள்ள கிசா பிரமிட்டிலுள்ள வெற்றுக்குழி இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கண்டறியமுடியாத மர்மமாகவே உள்ளது. பிரமிடு கட்டப்பட்டு 4500 ஆண்டுகளாகிறது. அதன் உள்ளே உள்ளவற்றை எக்ஸ்ரேவை ஒத்தமுறை மூலம் ஆராய்ந்தனர். கிரேட் பிரமிடு கி.மு 2509-2483 காலத்தில் பாரோ குஃபு மன்னருக்காக கட்டப்பட்டது. பிரமிடை துளையிடாமல் அதிலுள்ளவற்றை அறியும் முயற்சியே இந்த ஸ்கேன் மிஷன்.

 காஸ்மிக் கதிர் துகள்களான முவான்ஸ் மூலம் பிரமிடு கற்களை எக்ஸ்‌ரே போல ஸ்கேன் செய்து அதன் அமைப்பை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். எரிமலைகள் மற்றும் ஃபுகுஷிமா ரியாக்டர்கள் ஆகியவற்றில் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு அறைகள் இம்முறையில் அறியப்பட்டுள்ளன. "பிரமிடுகளை சிறந்த முறையில் புரிந்துகொள்ள இந்த ஆய்வுகள் உதவும்" என்கிறார் ஆய்வாளரான டயோபி.
4
காமெடி திருடர்- ரோனி

களவும் கற்றுமற என்ற பாடத்தை பாதி மட்டுமே படித்துவிட்டு பிராக்டிக்கலில் புகும் ஆர்வக்கோளாறுகளுக்கு என்னாகும்? பிரச்னையில் மாட்டிக்கொண்டு 'பச்சாவ் பச்சாவ்' என தேசிய மொழியில் அலறுவார்கள். இணையத்தில் வெளியாகியுள்ள திருடரின் அட்டெம்ப்டும் கூட அப்படித்தான் உலகிற்கே கிச்சுகிச்சு மூட்டியுள்ளது.  

இங்கிலாந்தின் பிர்மிங்காம் பகுதியிலுள்ள DFC எனும் சிக்கன் கடையை ஆட்டையப்போட முகூர்த்தம் பார்த்து வெண்டிலேட்டரின் வழியே நுழைந்தார். என்ன புண்ணியம், பாதி ட்ராவலிலேயே பாடி மாட்டிக்கொண்டது. திருடனுக்கு ஆசிட் கொட்டியது போல பீதியானவர், 7 மணிநேரம் ஆன் தி வெண்டிலேட்டரிலேயே கால்களை உதறி எஸ்கேப்பாக முயற்சித்து டயர்டாகி, ஹெல்ப் கேட்க மிட்லேண்ட் ஏரியா போலீஸ் வந்து திருடரை மீட்டு காப்பு மாட்டி ஜெயிலில் தள்ளியுள்ளது. பயிற்சி முக்கியம் ப்ரோ!  

 தொகுப்பு: ரோனி, கா.சி.வின்சென்ட்


பிரபலமான இடுகைகள்