அறிவியல் பக்கங்கள்!






ஆஸ்திரியாவின் புதிய தலைவர்!

செபாஸ்டியன் கர்ஸ் ஆஸ்திரியாவை ஆளும் தகுதிகொண்ட இளம் தலைவராகி உள்ளார். ஆஸ்திரிய தேர்தலில் 30% வாக்குகளைப் பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சித்தலைவரான(OVP) செபாஸ்டியன், 27 வயதில் வெளியுறவு அமைச்சராக(ஐரோப்பாவிலேயே இளம்வயது) நியமிக்கப்பட்டார்.


அமெரிக்கா,சீனா,ரஷ்யா,ஜெர்மனி,ஃபிரான்ஸ்,இங்கிலாந்து,வியன்னா உள்ளிட்ட நாடுகளோடு அணுஉலை டீலிங்குகளை கச்சிதமாக பேசி முடித்த சாமர்த்தியசாலி. மசூதிகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி, இஸ்லாமியர்கள் பொதுஇடத்தில் பர்கா அணிவது ஆகியவற்றுக்கு தடா போட்டு ஜெர்மனிய மொழியில் குரான் ஓதச்சொன்ன வலதுசாரி மனிதர் செபாஸ்டியன். ஆஸ்திரியாவில் ஐந்து ஆண்டுகள் வசிக்காத அகதிகளுக்கு அரசின் சலுகைகள் கிடையாது என்று சொன்ன பெரிய மனசுக்காரர் 2016 ஆம் ஆண்டு அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழையும் பால்கன் வழியை மூடிய இரும்பு நெஞ்சுக்காரரான செபாஸ்டியனை அதிகார பசி கொண்ட நியோலிபரல் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

2
தொட்டால் உணரும் பாக்டீரியா!

நரம்புகளின் அமைப்பே இல்லாத பாக்டீரியாவுக்கு தொடும் உணர்வு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்களுக்கு தொடும் உணர்வு என்பது வாழ்வதற்கான முக்கிய கருவி. பாக்டீரியாக்களும் தன் உடல் மூலம் தான் உள்ள இடத்தைப் புரிந்துகொள்கிறது."பாக்டீரியாவின் உடல்ரீதியான எதிர்வினைகள் குறித்து மிக குறைவாகவே அறிந்திருந்தோம்.தற்போது அதன் இந்த ஆராய்ச்சியின் மூலம் அதன் குணங்களை அறியத்தொடங்கியுள்ளோம்" என்கிறார் பேஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளரான உர்ஸ் ஜெனல். ஆராய்ச்சிக்கு Caulobacter crescentus என்று பாக்டீரியத்தை எடுத்துகொ்ண்டு, அதன் தோல் வழியாக நடைபெறும் புரோட்டான் பரிமாற்றம் ஆற்றல் பெறுவதை கண்டறிந்திருக்கிறார்கள். நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்கொள்ள உதவும் இந்த ஆராய்ச்சி, சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

3

அமெரிக்காவின் துப்பாக்கி ஆராய்ச்சி!

கடந்த அக்.1 இல் லாஸ்வேகாஸில் ஸ்டீபன் படோக் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 59 பேர் பலியாயினர். அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய துயரநிகழ்வு இது.

அமெரிக்காவில் மஞ்சள்காமாலை,ஹெச்ஐவி,மன அழுத்தம் ஆகிய நோய்களைக் கடந்து அதிக மக்கள் இறப்பது துப்பாக்கிச்சூட்டினால்தான். கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் துப்பாக்கிச்சூடுகளால் 35,594 பேர் இறந்துள்ளனர்(Center for Disease control and prevention அறிக்கைப்படி). 2015 இல் 85 ஆயிரம் பேர் தாக்கப்பட்டுள்ளனர் இதில் பத்தாயிரம் பேர் சிறுவர்கள். பல்வேறு குற்றங்கள் போலீசிடம் ரிப்போர்ட் செய்யப்படாததால் அவற்றைக் குறித்த பதிவுகளும் காவல்துறையிடம் இல்லை.  The National Crime Victimization Survey படி 90 ஆயிரம் வீடுகளிலுள்ளவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு நம்பிக்கையளித்தாலும் 12 வயதுக்கும் குறைவானவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படாதது மைனஸ் பாய்ண்ட்.

அமெரிக்க அரசு, 1966 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டப்படி, துப்பாக்கியைக் கட்டுப்படுத்தும் முறையில் காயம் ஏற்படுபவர்களுக்கு இழப்பீடு கிடையாது என்று கூறி 2.6 மில்லியன் டாலர்களை பட்ஜெட்டில் குறைத்துவிட்டது. 1996-2013 ஆண்டு காலத்தில் துப்பாக்கி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தொகை மெல்ல குறைக்கப்பட்டு ஏறத்தாழ இன்று 96% தொகை கட் செய்யப்பட்டுவிட்டது. CDC மட்டுமல்லாமல், NIH அமைப்பும் துப்பாக்கி ஆராய்ச்சிக்கு பணம் வழங்கிக்கொண்டிருந்தது. ஒபாமா ஆட்சிக்காலத்தில் இவ்வமைப்பு துப்பாக்கி கட்டுப்படுத்தல் தொடர்பான நிதிச்செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டுவிட்டது. தற்போது துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே உதவிகளை NIH வழங்கிவருகிறது

4

மூளையைத் தூண்டும் அமெரிக்க கருவி!

அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை DARPA மூளையின் கற்றல்திறனை பூஸ்ட் உற்சாகத்தில் உயர்த்தும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்கள். கற்றல் திறன் மேம்படும் அளவு 40%.

டார்பாவின் RAM சோதனையை கலிஃபோர்னியாவின் ஹெச்ஆர்எல், மெக்ஹில் பல்கலைக்கழகம், சோடெரிக்ஸ் ஆகிய அமைப்புகள் பங்கேற்று செய்துள்ளன. மக்களை ஸ்மார்ட் மனிதர்களாக்க அல்ல; நினைவுத்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த ஆராய்ச்சி. tDCS முறையில் குரங்குகளுக்கு மூளை தூண்டப்பட்டபோது அவை பல்வேறு டாஸ்க்குகளை சிறப்பாக செய்திருக்கின்றன. ஒரு விஷயத்தை சரியாக செய்ய 21 முறை தேவை என்றால் தற்போது 12 முறை போதுமானதாக உள்ளது என்பதே tDCS முறையின் வெற்றிக்கு சாட்சி. இதைப்போன்ற கருவியை போஸ்டன் பல்கலைக்கழகமும் கண்டுபிடித்திருந்தாலும் ஒப்பீட்டில் டார்பாவின் tDCS கருவியே விலை மலிவு.

அமெரிக்க அரசு, 1966 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டப்படி, துப்பாக்கியைக் கட்டுப்படுத்தும் முறையில் காயம் ஏற்படுபவர்களுக்கு இழப்பீடு கிடையாது என்று கூறி 2.6 மில்லியன் டாலர்களை பட்ஜெட்டில் குறைத்துவிட்டது. 1996-2013 ஆண்டு காலத்தில் துப்பாக்கி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தொகை மெல்ல குறைக்கப்பட்டு ஏறத்தாழ இன்று 96% தொகை கட் செய்யப்பட்டுவிட்டது. CDC மட்டுமல்லாமல், NIH அமைப்பும் துப்பாக்கி ஆராய்ச்சிக்கு பணம் வழங்கிக்கொண்டிருந்தது. ஒபாமா ஆட்சிக்காலத்தில் இவ்வமைப்பு துப்பாக்கி கட்டுப்படுத்தல் தொடர்பான நிதிச்செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டுவிட்டது. தற்போது துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே உதவிகளை NIH வழங்கிவருகிறது.

5

ஹாலோவீன் கொண்டாட்டம்!

 அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த செல்டிக் மத மக்கள் அகதியாக தங்கள் மரபையும் கொண்டுவந்து சேர்க்க, 1840 ஆண்டுக்குபின் ஹாலோவீன் கொண்டாட்டம் அமெரிக்காவில் களைகட்டத்தொடங்கியது.

மாறுவேடத்துடன் டான்ஸ், பழங்கள்,முந்திரி,பாதாம் பருப்புகள் என ஜோராக நடைபெறத் தொடங்கின. 19 ஆம் நூற்றாண்டில் ஹாலோவீன் விழாவுக்கென ஸ்பெஷல் இனிப்புகள் கடைகளில் அறிமுகமாக, பின் மெதுவாக மதுபான பார்ட்டி என மாறின. சர்ச்சுகளும், உள்ளூர் நிர்வாகமும் ஹாலோவீன் விழாவினை குடும்ப விழாவாக கடைபிடிக்கத் தொடங்க, ஹாலோவீன் விழா இன்று வடஅமெரிக்கர்களின் பர்ஸை கரைக்கும் பல மில்லியன் டாலர் மார்க்கெட்டாகிவிட்டது. குழந்தைகளுக்கு விடுமுறை, கிறிஸ்தவர்களுக்கு புனித நாள், அறுவடை தினம் என சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒவ்வொரு காரணம் என்றாலும் வட அமெரிக்கர்களின் கலாசாரத்தில் ஹாலோவீனுக்கு மறுக்கமுடியாத இடம் என்றுமுண்டு.  

அமெரிக்க அரசு, 1966 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டப்படி, துப்பாக்கியைக் கட்டுப்படுத்தும் முறையில் காயம் ஏற்படுபவர்களுக்கு இழப்பீடு கிடையாது என்று கூறி 2.6 மில்லியன் டாலர்களை பட்ஜெட்டில் குறைத்துவிட்டது. 1996-2013 ஆண்டு காலத்தில் துப்பாக்கி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தொகை மெல்ல குறைக்கப்பட்டு ஏறத்தாழ இன்று 96% தொகை கட் செய்யப்பட்டுவிட்டது. CDC மட்டுமல்லாமல், NIH அமைப்பும் துப்பாக்கி ஆராய்ச்சிக்கு பணம் வழங்கிக்கொண்டிருந்தது. ஒபாமா ஆட்சிக்காலத்தில் இவ்வமைப்பு துப்பாக்கி கட்டுப்படுத்தல் தொடர்பான நிதிச்செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டுவிட்டது. தற்போது துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே உதவிகளை NIH வழங்கிவருகிறது.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்