ஜாலி பிட்ஸ்!
பேபி ட்ரைவர்!
ஹாஸ்பிடலை அல்ட்ரா
மாடர்னாக மாற்றினாலும் அதன் சுத்தம், மருந்து வாசம், அதீத அமைதி உள்ளே நுழைந்ததும் மம்மிக்களின் இடுப்பிலுள்ள பேபிக்கள் அலற ஆரம்பித்து
விடுகின்றன. அமெரிக்காவில் பேபிக்களின் நெர்வஸ் குறைக்க புது
ரூட் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின்
சான்டியாகோவிலுள்ள ரேடி குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கார் கொடுத்துள்ளனர். விளையாட்டு
கார் அல்ல பாஸ். ஆபரேஷன் அவசியம் உள்ள குழந்தைகள் காரில் ஜாலியாக
ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லலாம். மெர்சிடஸ், லம்போர்க்கின், பிஎம்டபிள்யூ என எட்டு சாய்ஸ்களும் இதிலுண்டு.
கார்களுக்கு டொனேஷனை
சான்டியாகோ காவல்துறை கொடுத்துள்ளதோடு, ஆபரேஷன் நேரங்களில் க்யூட் காரில்
உலாவரும் பேபி ட்ரைவர்களுக்கு டெடி பியர் உட்பட பல கிப்ட்களையும் கொடுத்து நெர்வஸ்
போக்குவது ஃபன் ஐடியா.
ஏர்போர்ட்டில்
ஜாலி டான்ஸ்!
ஏர்போர்ட்டில்
விமானத்திற்காக வெயிட்டிங். ஃபிளைட் லேட். விமானம் கிடைக்காததால் அனைத்து வேலைகளும்
கடலில் பிளாஸ்டிக் போல தேங்கும் டென்ஷன். அதே சிச்சுவேஷனை ஜாலி
டான்ஸால் ஒரு பெண் சூப்பராக சமாளித்திருக்கிறார்.
அமெரிக்காவின்
சார்லட் டக்ளஸ் ஏர்போர்ட்டுக்கு மஷித் மஸூஜி என்ற பெண் வந்து சேர்ந்தபோது அவரின் ஃப்ளைட்
விண்ணில் கிளம்பியிருந்தது.
வேறுவழியின்றி நைட் அங்கேயே நகம் கடித்தபடி காத்திருந்தவருக்கு கிடைத்தது
சூப்பர் ஐடியா. லயோனல் ரிட்சியின் 'ஆல்
நைட் லாங்' என்ற பாடலை
ஜாலியாக ஆடத்தொடங்க, அங்கிருந்த ஊழியர்களும் அதில் இணைய டான்ஸ்
உற்சவம் அள்ளு கிளப்பியது. இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டவர்,
ஏர்போர்ட் ஊழியர்களுக்கு டன் கணக்கில் நன்றி சொல்லி நெக்குருகியிருக்கிறார்.
பீகார் பரிதாபங்கள்!
பீகாரில் எக்சாம்
முறைகேடு மட்டுமல்ல சிறை உடைத்து கைதிகளே ஜாலியாக வெளியேறும் நிகழ்வுகளும் அடிக்கடி
நடந்து அரசு நிர்வாகத்தை தலைகுனிய வைப்பது வாடிக்கை.
பீகாரின் முங்கர்
மாவட்டத்திலுள்ள சிறையிலிருந்து 34 கைதிகள் கம்பிகளை உடைத்து கேட்டை பிளந்து
வெளியேறி அரசை திகைக்க வைத்துள்ளனர். இதில் பனிரெண்டு பேர் திரும்ப
சிறைக்கே ரிட்டர்ன் ஆகிவிட்டனர். "நள்ளிரவில் கம்பிகளை உடைத்து
சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் தொடர்கொலைகளில்
தொடர்புடையவர்கள் என்கிறார்
முங்கர் மாவட்ட போலீஸ் தலைவரான ஆசிஷ் பார்தி. தற்போது தேடுதல்
வேட்டை நடைபெற்றுவரும் நிலையில் 2015 ஆம் ஆண்டு பெட்ஷீட்டுகளின்
மூலம் சிறையிலிருந்து தப்பி கைதிகள் சாதனை புரிந்துள்ளனர். மேலும்
பதினெட்டு வயதிற்கு கீழுள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 31 ஆயிரம்
என்கிறது பீகார் காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
காதல் சொல்ல வந்தேன்!
காதல் சொல்ல டைம், டேட் எல்லாம்
தேவையா? கேர்ள்பிரண்டின் மனசு மாறுவதற்குள் டக்கென காதலுக்கான
போர்டிங் பாஸ் வாங்கி லைஃபில் நுழைவதுதான் நவீன ஜென் ஸ்டைல்.
அமெரிக்காவின்
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த
KPIX 5 டிவி ரிப்போர்ட்டரான எமிலி டர்னர், மரியன்
கவுண்டி பகுதியில் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ள இடங்களைப் பற்றி அக்கறையாக பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு அருகில் வந்து நின்ற பாய் ப்ரெண்ட் டேனியல் போவெனை ஆச்சரியமாக பார்த்தார்
எமிலி. அடுத்த சர்ப்ரைஸாக உடனே "எமிலி
உன்னை மேரேஜ் செய்ய ஆசை" என பரபரவென காதல் சொல்லி ரிங்கையும்
விரலில் மாட்டிவிட ஆனந்தக்கண்ணீர் வழிய மேடம் எமிலி பரவசமானது கேமராவிலும் பதிவானது.
அப்புறம்தான் டிவியைச் சேர்ந்த டீமே இந்த டிராமாவுக்கு உறுதுணை என எமிலிக்கு
தெரிந்திருக்கிறது. லவ் ட்ராமா!
உலகின் முதல் மணல்
ஹாஸ்டல்!
ஆஸ்திரேலியாவில்
உலகின் முதல் மணல் ஹாஸ்டலை மேட் மேக்ஸ் பட புகழ் டிஸைனர் ஜோன் டூடிங் உருவாக்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின்
குர்ரவா பகுதியில் கோல்ட் கோஸ்டில் உருவாகியுள்ள மணல் ஹாஸ்டலில், பார்,
வாலிபால் விளையாட இடம், டிஜே இசை ஆகிய வசதிகளோடு
எட்டு அறைகளும் உண்டு. மொத்தம் 24 டன் மணலில்
உருவாக்கப்பட்ட இந்த ஹாஸ்டலில் போட்டிகளில் வெல்லும் 10 லக்கி
வின்னர்களுக்கு மட்டுமே அனுமதி. பிரேக்ஃபாஸ்ட், சர்ஃபிங் என அனைத்தும் இலவசமாம்.
சமையல் மந்திரம்!
இமயமலையில் ஏறி
சாதித்தாலும் வீட்டுக்கு வந்தால், 'கொத்துமல்லி கட்டு மிஸ்ஸிங்
உங்களை வெச்சிக்கிட்டு என்னதான் பண்றதோ?' என அர்ச்சனைகள் வாங்காத
ஆண்கள் உலகிலேயே கிடையாது. கணவர்களை கட்டி மேய்த்து வேலை வாங்குவதில்
சிறந்த ஹெச்ஆர் பெண்கள்தான் என்பதைக்காட்டும் சிறந்த மேட்டர் இது.
ட்விட்டரில் இரா
லான்தே என்ற பெண்மணி காய்கறி லிஸ்ட் ஒன்றை வெளியிட்டு "நான்
எனது கணவரிடம் கொடுத்தனுப்பிய காய்கறி லிஸ்ட் இது. பாய்ஸ் நீங்களும்
இதை அப்படியே ஃபாலோ பண்ணுங்க" என்று சொல்லியிருந்தார்.
லிஸ்ட்டை பார்த்தால், அவ்வளவு கிறிஸ்டல் கிளியராக
படம் வரைந்து பாகம் குறித்தது போல எழுதப்பட்டிருக்கிறது. உருளைக்கிழங்கு,பாலகீரை, கொத்துமல்லி, வெங்காயம்
என்ன சைஸ், எப்படி இருக்கவேண்டும், எவ்வளவு
வாங்குவது என எழுதி படமும் வரையப்பட்டிருந்தது பலரையும் வாயை பிளக்க வைத்துவிட்டது.
லிஸ்டைப் படித்து பலரும் கமுக்கமாக சிரிக்க வைத்தே சோஷியல் தளங்களில்
ஸ்லீப்பர் ஹிட்டாகிவிட்டது இந்த ட்விட்டர் பதிவு.
ஆசிட்பெண்களின்
கதாநாயகி!-
ரோனி
இந்தியாவின் ரியா
சர்மாவுக்கு,
ஐ.நா. சபையின் கோல்கீப்பர்
குளோபல் கோல் விருது, யுனிசெஃப் தூதரான நடிகை பிரியங்கா சோப்ராவின்
கரங்களால் வழங்கப்பட்டிருக்கிறது. எதற்கு? ஆசிட்டால் அடையாளமிழந்த பெண்களுக்காக உழைத்த காரணத்திற்காக.
தன் 21 வயதில்
'Make Love Not Scars' கஎன்ற அமைப்பு தொடங்கி அமிலக்காயங்கள் கொண்ட பெண்களுக்காக நன்கொடை பெற்று ஆபரேஷன்கள், அவர்களுக்கான
வேலைவாய்ப்பு என பாடுபடத்தொடங்கிவிட்டார் ரியா. அதற்கான ஹானஸ்ட்
கௌரவமாக அமெரிக்காவில் நியூயார்க்கில் கோதம் ஹாலில் ஐ.நா துணை
செயலாளர் அமினா முகமது, மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் இவ்விழாவில்
யுனிசெஃப்புடன் கைகோர்த்து பங்கேற்றனர். "உலகளவிலான லட்சியங்களுக்கு
அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்" இறுதியாக மெலிண்டா கேட்ஸ்
பேசியது நெகிழ்ச்சி.
ஆன்லைனில் பசு !
இனி ராஜஸ்தானில்
பசுக்களை வாங்க .
கம்ப்யூட்டரில் ஜஸ்ட் க்ளிக் செய்தால் போதும்.
டோர் டெலிவரியாக மாட்டை வாங்கி கட்டி விடலாம். எப்படி?
ராஜஸ்தானின் கால்நடைவளத்துறை
ஓஎல்எக்ஸ் போன்ற டிஸைனில் இதற்கான விற்பனை இணையதளத்தை தற்போது உருவாக்கி வருகிறது. இதில்
பசுக்களின் போட்டோ, விலை, பசு உரிமையாளர்
அட்ரஸ் என சகலமும் இருக்குமாம். கிர், தர்பாகர்
மாடுகளுக்கு முன்னுரிமை. 6 லட்சத்து 60 ஆயிரம் மாடுகளைக் கொண்டுள்ள ராஜஸ்தானில்
5 லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்களுக்கு அரசு, தனி ஐடி கொடுத்துள்ளது. "தரகர்களை ஒழித்து பசுக்களை
பாதுகாப்பதோடு, விவசாயிகளின் வருமானத்திற்கும் இத்திட்டம் உதவும்
" என்கிறார் கால்நடைத்துறை அமைச்சர் ஒடராம் தேவர்ஷி.
'சூப்' பறவை!
கோலாவுக்குள் புழு, சாக்லெட்டில்
பூச்சி, சோற்றில் பல்லி பார்த்திருப்போம். நிலைமை அப்டேட்டாகி, கேன் உணவுக்குள் புதிதாக என்னென்ன
வந்திருக்கிறது தெரியுமா?
ரஷ்யாவின் பெல்கரோட்
பகுதியைச் சேர்ந்த பெண்மணி இரவு டின்னருக்கு ஆசை ஆசையாய் சோள சூப் கேன் ஒன்றை கடையில்
வாங்கினார்.
'நானே குடிப்பேனாக்கும்' கேன் மூடியைப் பிரித்தால்
உள்ளே பறவையின் தலை மிதந்தது. பீதியில் ஷாக்காகி அலறி நொந்துபோய்விட்டார்.
உடனே பழிக்குபழியாக அந்த சோளசூப் கேனை சோஷியல் மீடியாவில் போட்டோ எடுத்து
போட்டு, "என்னுடைய டின்னர் இதனால் கெட்டுவிட்டதுதான்.
ஆனால் இதே சீரிசில் எனக்கு பறவை தலை என்றால் மற்றவர்களுக்கு என்ன வந்திருக்குமோ,
அப்படி ஒருவர் சூப்பை சாப்பிட்டால் என்னாவது?" என வருத்தப்பட்டிருக்கிறார் ரஷ்யன் லேடி.
தொகுப்பு: ரோனி ப்ரௌன்