முத்தாரம் நேர்காணல்: மனிஷ் சிசோடியா



முத்தாரம் நேர்காணல்
"நாட்டை வணிக சக்திகளிடம் ஒப்படைத்ததுதான் நமது தவறு"
நேர்காணல்: மனிஷ் சிசோடியா, துணைமுதல்வர் டெல்லி.
தமிழில்: .அன்பரசு



அண்மையில் ஹரியானாவின் குர்கானில் தனியார் பள்ளியில் படித்துவந்த ஏழுவயது சிறுவன் பள்ளியில் மர்ம முறையில் இறந்து கிடந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுப்பள்ளிகளின் மேம்பாடு, பள்ளிகளுக்கான பட்ஜெட், ஆசிரியர்கள் குறித்து டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மனிஷ் சிசோடியாவிடம் பேசினோம்.

அரசு பள்ளிகளைவிட வசதிகள் குறைவு என்றாலும் புதிதாக தொடங்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைக்கவே பெற்றோர்கள் முண்டியடிக்கின்றனர். இந்த ட்ரெண்டை எப்படி பார்க்கிறீர்கள்?

எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியாரின பட்ஜெட் பள்ளிகளில் படித்து வருகின்றனர். என்னுடைய அட்வைஸ், பெற்றோர்கள் அங்கீகாரமற்ற தனியார் பள்ளிகளை தவிர்ப்பதே நல்லது. இதற்கு தீர்வாக அரசு பள்ளிகளை முன்வைக்கலாம். 20 புதிய அரசு பள்ளிகளைத் தொடங்கி, 8 ஆயிரம் கூடுதல் அறைகளை உருவாக்கும் தேவையுள்ளது. அடுத்த ஆண்டு பத்தாயிரமாக அறைகளின் எண்ணிக்கை உருவாக்கும் பிளான் உள்ளது.


டெல்லியிலுள்ள உள்ள அரசுப்பள்ளிகளின் திறன் என்ன?
டெல்லியின் ஆண்டுதோறும் பள்ளியில் சேரும் 2.25 லட்சம் மாணவர்களில் தனியார் பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்களும் மிச்சமுள்ள 1.25 லட்சம் மாணவர்கள் அரசுபள்ளிகளிலும் சேர்கிறார்கள். 6-12 ஆம் வகுப்புகள் மட்டுமே டெல்லி அரசு கட்டுப்பாட்டில் உள்ளது தவறான ஐடியா. 1-12 ஆம் வகுப்புகளும் அரசின் கட்டுப்பாட்டில் வரவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்துவதே எங்களது லட்சியம். டெல்லி எல்லையிலுள்ள லோனி, பகதுர்கார் பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். முனிசிபல் பள்ளியிலிருந்து டெல்லியிலுள்ள அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலருக்கு அவர்கள் எழுதும் எழுத்துக்களை அவர்களால் வாசிக்க முடியவில்லை, அவர்களால் எழுத்துக்களை பார்த்து எழுத மட்டுமே முடிகிறது என்பது சிறப்பான திறனல்ல.

தனியார்பள்ளிகள், அரசு பள்ளிகள் எவை சிறந்தவை என்ற விவாதத்திற்கு உங்களது பதில் என்ன?

அரசு-தனியார் பங்களிப்பு மாடல் சிறப்பானதல்ல. ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவிற்கு மாநாடு ஒன்றில் பங்கேற்றபோது, அங்கிருந்தவர்கள் இந்தியாவின் கல்வி மாடல்களை பார்த்து ஷாக் ஆனார்கள். ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து அவர்களை நாம் பயன்படுத்த முடியும். வணிக சக்திகளிடம் நாட்டையே ஒப்படைத்துவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. நாங்கள் ஆசிரியர்கள் பணியில் சின்சியராக இருப்பதை உறுதி செய்யவும், மாணவர்களை தாக்குவது, வகுப்புகளை எடுக்காதது ஆகியவற்றுக்கு கடும் தண்டனை உண்டு என்பதை குறிப்பிட்டு பள்ளிகளுக்கு சர்க்குலர் அனுப்பி வைத்துள்ளோம்.

டெல்லியில் என்ன விதமான பயிற்சி திட்டங்களை கடைபிடிக்கிறீர்கள்?

Jeevan Vidya Shivir என்ற திட்டப்படி ஆசிரியர்களுக்கு ஏழு நாட்கள் பயிற்சி வழங்குகிறோம். தற்போது 50 ஆயிரம் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.இதில் 700 ஆசிரியர்களை தேர்வு செய்து பல்வேறு பள்ளிகளுக்கும் அனுப்பி பிற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவிருக்கிறோம். விரைவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றையும் தொடங்கும் திட்டமுள்ளது.
நன்றி: BHAVNA VIJ-AURORA,Outlook