விக் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியா! - ஏற்றுமதி செய்யப்பட்டு சீனாவில் தயாராகிறது விக்

 

 

 

 

 Mannequins, Wig, Hair, Blond

 

 


கோவில்களிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தலைமுடி!


ஆந்திர மாநிலத்தில் கோவில் பக்தர்களால் வேண்டுதலுக்காக இறக்கப்படும் தலைமுடி, ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது. இம்முடியை வாங்கும் நிறுவனங்கள் அதனை தூய்மைப்படுத்தி விக் தயாரிக்க ஏற்றது போல மாற்றி சீனா, ஹாங்காங் நாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகின்றனர்.


ஆந்திரத்தில் பிரபலமான வெங்கடேஸ்வரா கோவிலை, திருமலா திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இங்கு வரும் பக்தர்கள் தங்களது ஆசைகள், விருப்பங்களை பூர்த்தி செய்தால் முடியை இறக்குவதாக வேண்டிக்கொள்கின்றனர். தினசரி 90 ஆயிரம் பேருக்கு மேல் கோவிலுக்கு வரும் பக்தர்களில், 30-50 சதவீதம் பேர் தங்கள் தலைமுடியை இறைவனுக்கு காணிக்கையாக்குகின்றனர். இதில் பெண்களின் பங்களிப்பு அதிகம்.


இங்கு ஆண்டுக்கு 1 கோடியே 20 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்துக்கொள்கின்றனர். முடியை இறக்குவதற்கு பதிலாக பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இங்கு காணிக்கையாகப் பெறப்படும் முடியை சிலமாதங்களுக்கு ஒருமுறை ஆன்லைனில் விற்றுவருகின்றனர். இந்த வருமானம் கல்வி, சுகாதாரம், இலவச உணவு உள்ளிட்ட வசதிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது. 2023ஆம்ஆண்டு தலைமுடிக்கான சந்தை மதிப்பு உலகளவில் 1000 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் தலைமுடி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 32.5 சதவீதம் (2019) ஆகும்.


உலகளவில் தலைமுடியை விக்காக மாற்றி அமெரிக்கா, ஐரோப்பியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சீனா விற்று வருகிறது. இந்தவகையில் சீனா, 70 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. கோவில்களில் பெறப்படும் ரெமி வகை முடி விலைமதிப்பானது. முடிதிருத்தகங்களில் பெறப்படும் முடி, விலை சற்று குறைவானது.


’’திருப்பதி கோவிலில் 25 அங்குல நீளம் கொண்ட ஒரு கிலோ ரூ.33 ஆயிரத்திற்கு வாங்குகிறோம். நாங்கள் ரெமி வகை முடியை கோவிலிலிருந்தும், பிறவகை முடியை டீலர்களிடமிருந்தும் பெறுகிறோம்’’ என்கிறார் சென்னையில் முடி ஏற்றுமதி செய்யும் குப்தா எண்டர்பிரைஸ் நிறுவன தலைவரான கிஷோர் குப்தா. இதேபோல இத்துறையில் புகழ்பெற்ற ராஜ் ஹேர் இன்டர்நேஷனல் நிறுவனம், 56 நாடுகளுக்கு தலைமுடியை சுத்தம் செய்து விற்று வருகிறது. 250 கிராம் முடியைக் கொண்டு ஒற்றை விக் செய்துவிடலாம். முடிகளை சுத்தம் செய்து, அதனை விக்காக மாற்றும் செயல்முறை கடினமானது. ஒருநாளுக்கு இம்முறையில் 400 கிராம் முடியை மட்டுமே சுத்தம் செய்ய முடியும் என்று இத்துறையினர் கூறுகின்றனர்.


தகவல்

SCMP








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்