அனாதைப் பிணங்களை சேகரித்து நல்லடக்கம் செய்த பெண்மணி!

 

 

 

 

 

 

 

 

 


 


பிணங்களை எரியூட்டிய பெண்மணி!


பொதுமுடக்கத்தின்போது நெருங்கிய உறவினர்கள் கூட நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் காலமானவர்களை பார்க்க வரவில்லை. துக்கம் கொண்டாட முடியாதபடி பீதி மனத்தில் நிறைந்திருந்தது. அதற்காக இறந்துபோனவர்களை அப்படியே கைவிட்டுவிட முடியுமா?


இறந்துபோனவர்களின் உடல்களை தகனமூட்டும் வேலைகளை சில நல்லிதயங்கள் செய்தனர். அவர்களில் ஒருவர் வர்ஷா வர்மா. இத்தனைக்கும் இவருக்கும் குடும்பம் உண்டு. மகள்கள் உண்டு. நாம் அனைவரும் பொதுமுடக்க காலத்தில் பாதுகாப்பாக இருந்த சூழ்நிலையில் வர்ஷா பிணங்களை நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்துகொண்டிருந்தார்.


லக்னோவைச் சேர்ந்தவரான வர்ஷா, திவ்ய பிராயா எனும் அமைப்பின் உதவியுடன் யாரும் உரிமை கோராத பிணங்களைப் பெற்று நல்லடக்கம் செய்துள்ளார். இதற்கு தீபக் மகாஜன் எனும் பெண்மணி உதவியுள்ளார். வர்ஷா கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி வந்துள்ளார். பெருந்தொற்று காலத்தில் பிணங்களை எரிப்பது கடினமாக இருந்துள்ளது.


அறுபது வயதான ஒருவர் விபத்துக்குள்ளாகி கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால் சிகிச்சையின் போது ரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியவில்லை. இறந்துபோன அவரது உடலை யாருமே உரிமை கோரி பெறவில்லை. அவரது உடலை வர்ஷா மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பெற்றார். அப்போதே அழுகத்தொடங்கிவிட்ட உடலை நல்லடக்கம் செய்துள்ளார். இப்படி பொதுமுடக்க காலத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பிணங்களை நல்லடக்கம் செய்துள்ளார். இந்த உடல்கள் தெருக்களில் யாரும் அடக்கம் செய்யாமல் கைவிட்டவைதான். இதேகாலத்தில் உணவு தேவைப்படுபவர்களுக்கும், வயதான பெண்களுக்கு குளித்துவிடுவதையும் வர்ஷா செய்து வந்துள்ளார்.


இதனை வர்ஷாவும் தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் செய்து வந்துள்ளார். தன்னார்வமாக இப்படி செய்பவர்களால் பொதுமுடக்க காலத்தில் பலருக்கும் உதவி கிடைத்தன.


https://www.indiatimes.com/trending/human-interest/varsha-varma-cremated-unclaimed-dead-bodies-532423.html



கருத்துகள்