மருத்துவத்திற்கு பயன்படும் நைட்ரோகிளிசரின்!
மிஸ்டர் ரோனி
நைட்ரோ கிளிசரின் ஆபத்தான பொருளா?
நைட்ரோகிளிசரின் பெரும்பாலும் வெடிகுண்டுகள் தயாரிப்பில் பயன்படுகிறது. பெரும்பாலும் டிஎன்டி டிரைநைட்ரோடிலுன் எனும் வெடிபொருளைப் போலவே ஆபத்தானது. ஆனால் இதன் பாதிப்பு என்பது இதில் சேரும் பகுதிப்பொருட்களால் உருவாகிறது. இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியைக் குறைக்க நைட்ரோகிளிசரினை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் நைட்ரஜன் அணுக்கள் நேரடியாக ஆக்சிஜன் அணுக்களை சந்தித்து வினைபுரியும்போது அங்கே புழுதி மட்டும்தான் மிச்சமிருக்கும். அத்தனையும் தரைமட்டாகிவிடும் அளவு அத்தனை பொருட்களையும் தகர்த்துவிடும் சக்தி கொண்ட பொருள் இது.
இன்று நோபல் பரிசுக்காக நினைவுகூரப்படும் ஆல்பிரட் நோபல் நைட்ரோகிளிசரினைக் கண்டுபிடித்து பெரும் பணம் ஈட்டினார்.
2
அரிய விஷத்தால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ஏதேனும் கூறுங்கள்.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்ஸாண்டர் லிட்னென்கோ மீது விஷத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை ஆராய்ந்த மருத்துவர்கள் அவர் மீது பொலோனியம் என்ற விஷத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? இது மிக அரிதான வேதிப்பொருள். பாறைகளில் யுரேனியத்துடன் சேர்ந்து கிடைப்பது. ரஷ்யா இதனைப் பயன்படுத்தி தன் முன்னாள் உளவாளியைக் கொல்ல முயன்றது என ஐரோப்பிய நாடுகள் புகார் கூறின.
நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்