குடும்பம் சிதைந்தால் என்னாகும்? - மேரேஜ் ஸ்டோரி



Image result for marriage story




மேரேஜ் ஸ்டோரி

இயக்குநர் - நோவா பாம்பாக்

ஒளிப்பதிவு - ராபி ரியான்

இசை - ராண்டி நியூமன்


திருமணம் நடைபெறுகிறது. அது சாதாரண விஷயம். ஆனால் அதற்குப்பிறகு இருவரின் தன்முனைப்பும் காயம்படும்போது என்னாகிறது என்பதை இப்படம் பேசுகிறது. ஆதம் ட்ரைவர் (சார்லி பார்பர்),  நியூயார்க்கைச் சேர்ந்த நாடக இயக்குநர். இவருடைய மனைவி நிக்கோல். அவருடைய நாடகத்தில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஹென்றி என்ற மகன் இருக்கிறான். நிக்கோல், சார்லி இருவருக்கும் வாழ்க்கையில் ஏதோ போதாமை இருப்பது போல படுகிறது. இதில் நிக்கோல் தனக்கான அன்பு சார்லியிடம் இருந்து கிடைக்கவில்லை என்று நினைக்கிறாள். இதனால் சார்லியிடமிருந்து விவாகரத்து கோருகிறாள். அதோடு தனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்க லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறாள். அங்கு வசிக்கும் தாயுடன் சேர்ந்து தங்குகிறாள்.


Image result for marriage story



வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்கிறது. இருவரும் ஒருவரையொருவர் திட்டியபடி விவாகரத்து செய்கின்றனர். ஆனால் இருவருக்குள்ளும் அன்பு இருக்கிறது. ஆனால் என்ன? அரசு அவர்கள் பிரிந்து வாழ்வதற்கான அனுமதியை அளித்துவிட்டது. பிறகு என்ன ஆனது அவர்களுடைய வாழ்க்கை என்பதுதான் கதை.


ஆஹா!

ஆதம் ட்ரைவர், ஸ்கார்லெட், ஆகிய இருவரும்தான் சார்லி, நிக்கோல் இருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இருவரும் நேருக்கு நேராக சார்லியின் வீட்டில் பேசும் காட்சி மனதை உருக வைக்கிறது. இருவரும் விவகாரத்து பெற்றபின் பேசும் காட்சி அது. தன் மனதில் உள்ள விஷயங்களை கொட்டிய பிறகு சார்லி மண்டியிட்டு அழுவது ப்பா சொல்ல வைக்கிறது.

Image result for marriage story


சார்லி தனக்குரிய நாளில் ஹென்றியை கூட்டிச்செல்ல வரும்போது அவன் ஷூவை சரி செய்து நிக்கோல் கட்டிவிடும் காட்சி. சொல்லாத விஷயங்களையெல்லாம்  சொல்லி விடுகிறது. வழக்கறிஞர்கள் இருவருமே தங்களுக்கான பகுதிகளை பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.


ஐயையோ

நீளமான வசனங்கள் அயர வைக்கின்றன. நடிப்பு நம்மை சப்டைட்டில் பார்ப்பதை மறக்க முயன்றாலும், சில இடங்களில் எவ்வளவு நேரம்ப்பா பேசுவீங்க என்று கூற வைக்கிறது.

Image result for marriage story


அமெரிக்க கலாசாரம் சார்ந்த வாழ்க்கை, அதில்  நேரும் சிக்கல்கள், பணி, குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாத அவதி என பல்வேறு விஷயங்களை பேசுகிற படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று கூற முடியாது. ஆனால் பார்த்தால் உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும்.


கோமாளிமேடை டீம்