தாமதமாகும் இழப்பீட்டுப் பணம்! - கடத்தலில் மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்காத நீதி!
கருப்பு இந்தியா
கொல்கத்தாவில் கடத்தல் தொழிலிருந்து மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு பணம் வழங்கப்படாமல் இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரையிலான அரசின் இழப்பீட்டு திட்டத்தின் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீத நிவாரணத்தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஸ்எல்எஸ்ஏ எனும் இத்திட்டத்தில் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது கொல்கத்தா அரசு. இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை என்ற பெயரில் பலமணி நேரங்கள் காக்க வைக்கின்றனர். ஆனால் அதற்கான இழப்பீட்டை முழுமையாக வழங்குவதில்லை. பலரும் இதன் காரணத்தால் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு நிவாரணம் பெறும் நிலைமை உள்ளது.
தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவல்படி, நடப்பு ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் மனிதர்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் இங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3500 கடத்தல் சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. சன்ஜோக் எனும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழு இதற்கான தகவல்களை நாடு முழுவதும் தேடி சேகரித்துள்ளது.
சன்ஜோக் குழுவைச் சேர்ந்த விபன்குமார், நாங்கள் நாடு முழுக்க கடத்தல் தொழிலால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு அரசு தரும் இழப்பீட்டுத்தொகை கிடைத்தது பற்றிய கள அறிக்கைகளை மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களிடம் கேட்டோம். அவர்கள் கொடுத்த தகவல்படி 38,503 பேர் இதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். 2011ஆம் ஆண்டு இவர்களில் 107 பேருக்கும் அடுத்த ஆண்டில் 77 பேருக்கும் நிவாரணம் கிடைத்திருக்கிறது.
கொல்கத்தாவில் தான் கடத்தப்பட்டோம் என ஒருவர் நிரூபித்தால் மட்டுமே அவருக்கு அரசு தரும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். அதுவும் மாவட்ட நீதிமன்றம் பலமுறை விசாரணையை நடத்திய பிறகே உறுதியாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு மாதங்கள் விசாரணை நடைபெற்ற பிறகு இழப்பீட்டுத்தொகையை பெற்றிருக்கிறார்கள். இந்த மன உளைச்சல் தரும் சட்ட முறையை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
கடத்தப்பட்டவர்கள் போலீசாரால் மீட்கப்பட்டால், அவர் தான் கடத்தப்பட்டவர் என்பதை காவல்துறையில் பதிவு செய்ய வேண்டும். இதை வைத்தே அவர்கள் நீதிமன்றம் மூலம் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதில் குழப்பங்கள் நேர்வதால் இழப்பீட்டு ஆணையம் வழக்கறிஞர்களை நியமித்து உதவிகளை செய்யலாம். ஆனால் இதில் செயல்பட வழக்கறிஞர்கள் விரும்புவதில்லை. பிற வழக்கு, விசாரணை என்றால் கட்டணம் அதிகமாக கிடைக்கும் என்பதே காரணம்.
இதில் முறையாக தான் பாதிக்கப்பட்டேன் என்று ஆவணப்படுத்துதல் குறைவாக இருக்கிறது. பந்தன் முக்தி பாதிக்கப்பட்டோர் அமைப்பைச் சேர்ந்த சுபஸ்ரீ ராப்தான், இதுபற்றி பேசினார். வழக்கறிஞர்கள் கிடைப்பதில்லை, வழக்கு விசாரணையும் பல மாதங்களுக்கு நீள்கிறது போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கு சரியானபடி நிவாரணம் கிடைப்பதில்லை. இதில் அவர்கள் முறையானபடி ஆவணங்களை தயாரித்து வைத்திருக்காததும் உள்ளடங்கும் என்கிறார்.
நன்றி - பிஸினஸ் ஸ்டேண்டர்டு - ஸ்வர்ணாமி மாண்டல்