சிம்பன்சிகள் அரசியல்வாதிகளாக முடியுமா? - மிஸ்டர் ரோனி


paris hilton chimpanzee GIF

மிஸ்டர் ரோனி 

தாவரங்கள் இசையைக் கேட்கின்றனவா?

1973ஆம் ஆண்டு வெளியான சீக்ரெட் லைஃப்  ஆப் பிளான்ட்ஸ் நூலில் தாவரங்கள் இசையைக் கேட்கின்றன என்ற தகவல் கூறப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அப்படி கேட்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். தற்போது, தாவரங்கள் ஹிப்ஹாப், ராப் இசையைக் கேட்பதில்லை. ஆனால் பூச்சிகளின் ஓசையை கிரெஸ், ஸ்வீட் பீஸ் ஆகிய தாவரங்கள் கேட்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதிர்வுகளை அறியும் தன்மை தாவரங்களில் இருக்கின்றன. எனவே இசை மூலமாக அதிர்வுகளை தாவரங்கள் சரியாக உள்வாங்கிக்கொள்கின்றன என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

ஈக்கள் பாடுகின்றனவா?

பழ ஈக்கள் தம் இணையை ஈர்க்க பாடுகின்றன. இவை மூன்று வித பாடல்களை குரல் மாற்றங்களுடன் பாடுகின்றன. முக்கியமாக பாடுவது, பெண் இணையை ஈர்க்கத்தான். கொசுக்கள் பறக்கும்போது வரும் ஒலி, அதன் இறக்கையை வேகமாக வீசுவதால் ஏற்படுகிறது.

மீன்கள் தம் கழிவை எப்படி வெளியேற்றுகின்றன?

சிறுநீரில் நைட்ரஜன் பொருட்கள் நிரம்பியிருக்கும். இது நீரில் கரையக்கூடியது. ஏரி, ஆறு போன்ற இடங்களிலுள்ள மீன்களின் கழிவு சற்று திடமாக இருக்கும். ஆனால் கடலில் உள்ள மீன்கள் உப்புநீர் சூழலில் இருப்பதால், அவற்றின் கழிவு மேலும் திடமாக இருக்கும். உடலிலுள்ள தேவையில்லாத கழிவுகளை மீன்கள் தம் செவுள்கள் வழியாக வெளியேற்றிவிடுகின்றன. இக்கழிவில் நைட்ரஜனும், அம்மோனியாவும் இருக்கும். கடலில் உப்புநீரின் மூலம் இச்செயல்பாடு நடைபெறுவதால், மீனின் சிறுநீர் கடினத்தன்மை கொண்டதாக இருக்கும்.

சிறந்த அரசியல்வாதிகளாக சிம்பன்சிகள் உருவாக வாய்ப்புள்ளதா?

அழகு, சுயநலமின்மை, ஒருங்கிணைப்பு, ஒற்றுமை ஆகிய விஷயங்களில் மனிதர்களை விட சிம்பன்சிகள் திறன்பெற்றவையாக உள்ளன. ஆனால் அதற்காக பொய்யும் புரட்டும் பேசி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியாக மாறிவிட முடியுமா?

சிம்பன்சிகளுக்கு அதற்கான வாய்ப்பு உள்ளதுதான். பரிணாம வளர்ச்சியில் நாம் ஒரு கிளை என்றால், சிம்பன்சிகள் ஒரு கிளை. எனவே அவையும் பல்வேறு திறன்களை நம்முடன் வாழ்ந்தே ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இல்லையெனில் உலகில் தாக்குப்பிடித்து வாழ முடியாது. சிம்பன்சிகள் மேற்சொன்ன பல்வேறு திறன்களை கொண்டிருந்தாலும் அவை சிறு குழு அளவில் செல்லுபடியாகும். பெரியளவு கூட்டத்திற்கு அவை தலைமை ஏற்று செயல்படுவது சந்தேகத்திற்குரியதே. ஆனால் சிம்பன்சிகள் ஆல்பா தன்மையோடுதான் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகின்றன.

நன்றி - பிபிசி 






பிரபலமான இடுகைகள்