வீரர்களுக்கு உதவும் NH3!
giphy |
மிஸ்டர் ரோனி
ஸ்மெல்லிங் சால்ட்ஸ் என்பதன் பயன் என்ன?
இந்த ஸ்மெல்லிங் சால்ட் என்பது விளையாட்டில் கீழே விழுந்து நினைவு தப்பும் வீரர்களுக்கு சுயநினைவு வருவதற்காக அளிக்கப்படுகிறது. அம்மோனியா, ஆல்கஹால், நீர்சேர்மானம் கொண்டது பொருள் இது. இதனை நுகரும்போது, மூக்கு, நுரையீரல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படும். ஆனால் உடலுக்கு பெரியளவு ஆபத்து கிடையாது. சிலர் இதனை தங்களின் ஊக்கசக்தியாக கருதி நுகர்கிறார்கள். அமெரிக்க கால்பந்து வீர ர்கள் இம்முறையில் ஸ்மெல்லிங் சால்ட்டை பயன்படுத்துகின்றனர்.
2006ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் இதுபற்றி ஆராய்ச்சி செய்தது. இதில் ஸ்மெல்லிங் சால்ட் எரிச்சல் ஏற்படுத்துவதன் மூலம் சுயநினைவை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதைத்தாண்டிய வேறு பயன் இல்லை என்று கூறியது.
நன்றி - பிபிசி