மனதில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான் கஷ்டம்! - ஈஷா சிங்





Esha wins gold in 10m air pistol event in Asian Shooting ...


ஈஷா சிங், துப்பாக்கி சுடும் வீராங்கனை

ஆங்கிலத்தில் - சித்தார்த் சக்சேனா

ஈஷா சிங், பதிமூன்று வயதிலேயே தேசிய அளவிலான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரவில் பதக்கம் வென்றிருக்கிறார். அவரது வெற்றி, போட்டி தயாரிப்பு, அவர் தவறவிட்ட விஷயங்கள் என பேசினோம்.

துப்பாக்கி சுடும் வீரராக இல்லாமல் ஈஷா சிங்காக தினசரி நாள் எப்படி தொடங்கும்?

நான் சிறுவயதிலிருந்து துப்பாக்கிக்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். இதனால் பள்ளிகளில் விளையாட்டு விழா, ஆண்டுவிழா, சுற்றுலா போன்ற விஷயங்களில் பங்கேற்க முடியாது. துப்பாக்கி சுடுதலில் வென்றது சந்தோஷம்தான். ஆனால் என் பள்ளி தோழிகள் பள்ளிவிழாவில் தாம் பங்கு பெற்ற புகைப்படங்களை எனக்கு அனுப்பும்போது கஷ்டமாக இருக்கும். ஏனெனில் நான் அந்த நேரத்தில் போட்டிகளில் பங்கேற்று இருப்பேன். அல்லது பயிற்சிகளில் இருப்பேன்.

போட்டிகளுக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு செல்லும்போது அனைவரின் கண்களும் என்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கும். இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை தருகிறது. ஆனால் என்ன, நான் என் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிட்டேன். அதை நோக்கிச் செல்கிறேன்.

போட்டிக்காக பயிற்சி செய்கிறீர்கள். உங்களை எப்படி மனதளவில் தயாரித்துக்கொள்வீர்கள்.

விளையாட்டை தொடங்குவதற்கு முன்னதாக எனக்குள்ளாக சிறப்பாக இந்த ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று சொல்லிக்கொள்வேன். அதை அனுபவித்து செய்வேன். என்னைப் பார்ப்பவர்களையோ, நான் பெறும் புள்ளிகளையோ நான் கண்டுகொள்வதில்லை. அப்போது நான் விளையாடும் விளையாட்டை சிறப்பாக அனுபவித்து விளையாடவே நினைப்பேன்.

போட்டிக்கு முன்னதாக பத்து நிமிடம் தியானம் செய்வேன். உங்கள் மனதில் எழும் கருத்துகளை எண்ணங்களை கட்டுப்படுத்த இப்பயிற்சி உதவுகிறது.

என்ன மாதிரியான சிந்தனைகள்?

என்னால் இலக்கை சரியாக சுட முடியுமா? இப்போட்டியில் தோற்றுவிட்டால் என்னாகும்? என்பது போன்ற சிந்தனைகள் மனதில் எழும். அவற்றைக் கட்டுப்படுத்த தியானப் பயிற்சி செய்கிறேன். நான் விளையாடும் போட்டிகளில் செய்யும் தவறுகளை மறக்காமல் குறித்து வைத்துக்கொண்டு, அதனை சரி செய்ய முயற்சிப்பேன்.

2018ஆம் ஆண்டு உங்களோடு மானுபாகர், ஹீனா சித்து ஆகியோர் போட்டிகளில் பங்கேற்றீர்கள். இவர்களை உங்களது போட்டியாளர்களாக பார்க்கிறீர்களா?

நீங்கள் கூறும் வீராங்கனைகளான மானு, ஹீனா எனக்கு நண்பர்கள்தான். மானு என்னுடைய அறை தோழியாக இருந்தவர். அவருக்கு வயது 18, ஹீனாவுக்கு வயது 31 ஆகிறது. நாங்கள் ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டிருப்பவர்கள். ஹீனா எங்களுக்கு இன்ஸ்பிரேஷனான நபர்.

நன்றி - டைம்ஸ், பிப்ரவரி 3, 2020


பிரபலமான இடுகைகள்