2050இல் நடைபெறும் டெக் மாற்றங்கள் தெரிஞ்சுக்கோங்க.





Man, Machine, Robot, Electricity, Bionics, Muscle, Fit
pixabay




மிஸ்டர் ரோனி


1. பட்டாம்பூச்சிகளை தொட்டால் அதன் இறகுகளில் பவுடர் போல ஒட்டுகிறதே....அது என்ன?


அதுதான் அதன் உடலிலுள்ள முடி போன்ற பொருள். அது அதன் உடல் வெப்பநிலையை குறிப்பிட்ட நிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஒரேயொரு பயன்பாட்டுக்காக எந்த பொருளும் பயன்பட முடியாது அல்லவா? இந்த இறக்கையிலுள்ள இப்பொருள் எதிரிகளைக் குழப்பவும், பறக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப பறக்கவும் உதவுகிறது. இவை சிதைந்து போனால் பட்டாம்பூச்சி பறக்கமுடியாது. எனவே விளையாட்டு என்று பூச்சிகளைப் பிடித்து கொன்று விடாதீர்கள்.

2. 2050இல் சூழலுக்கு இசைவாக என்ன மாற்றங்கள் நடக்கும்?

டேட்டாவை அடுக்குகிறோம். படித்து மகிழுங்கள்.

139 நாடுகள் சூழலுக்கு இசைவாக கரிம பொருட்களை கைவிட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.

2.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

2040ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு பெட்ரோல், டீசல் எரிபொருட்களில்  இயங்கும் வாகனங்களை தடை செய்ய உள்ளது.

42.5 சதவீதம் அளவுக்கு மின்சாரத் தேவை குறையும். எப்படி ப்ரோ என்று கேட்காதீர்கள். அப்படித்தான்.


நிலவிலுள்ள ஹீலியத்தின் அளவு 1.1 மில்லியன் டன்கள். இதை எதுக்கு இப்ப சொல்றீங்கன்னு கேட்கறீங்களா? அடுத்து நாம் அங்கே சுரங்கம் தோண்டி நிலவையும் பங்கம் பண்றோம் ப்ரோ....

சூரிய சக்தியின் பயன்பாடு 2050இல் 48 சதவீதமாக உயரும்.

3. 2050இல் மருத்துவத்துறையில் நடைபெறும் மைல்கல் என்ன?

கையில் அணியும் ஸ்மார்ட் வாட்ச் இப்போதே பிரபலம் ஆகிவிட்டது. ஹார்ட்பீட்டை சொல்லும் ஃபாஸ்ட்ராக் வாட்சுக்கும் விளம்பரம் போட்டுவிட்டார்கள். அப்போது 2050 இல் உடலில் பொருத்திக்கொள்ளும் சிறியளவு மானிட்டர் கருவிகள் வந்துவிடும். இதனால் எளிதாக மைசூர் பாகு சாப்பிட்டு உடலில் ஏறும் கொழுப்பு, அதிகரிக்கும் எடை ஆகியவற்றைக் கூட கணித்துவிடலாம். இதனால் மைசூர் பாகு, லட்டு விற்பனை குறையாது. வாட்ச், டெக் ஐட்டங்களின் விற்பனை கூடும்.


செயற்கை ரத்த செல்கள்

பிளாஸ்டிக், கார்பனால் செய்யப்பட்ட ரத்த செல்களை பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள். காரணம், அப்போது வரும் ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்தவே இந்த முயற்சி. ரெஸ்பிரோசைட்ஸ் எனும் செல்கள் சாதாரண ரத்த செல்களை விட அதிகளவில் ஆக்சிஜனை உடலுக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டவை. இப்படியே ஆராய்ச்சி செய்து சூப்பர்மேனையும் நாளை உருவாக்கி விட வாய்ப்புள்ளது.

ஏஐ டாக்டர் 

டாக்டரை பார்ப்பது கடினமான செயல். முதலில் உங்களை ஆராய்வது ஏஐ டாக்டர்தான். அவர் உங்களின் நோய்களை ஆராய்ந்து பதிவு செய்து தேவைப்பட்டால் உங்களை டாக்டரிடம் அனுப்புவார்.

3D உறுப்புகள்! 


இப்போதே பன்றி, எலி என விலங்குகளின் உறுப்புகளை செயற்கையாக செய்யத் தொடங்கிவிட்டார்கள். 2050இல் உடல் உறுப்புகளை தயாரித்து வைத்து. உங்களுக்கு என்ன உறுப்பு தேவை என அமேசானில் ஆர்டர் கொடுங்க என விளம்பரம் போடுவார்கள். மேற்குலகு ஆராய்ச்சியாளர்கள் அப்படி உழைக்கிறார்கள்.

டெக் கால், கைகள்

அயர்ன்மேன் டோனி போல கால், கைகளை நீங்கள் நினைத்தபோது பொருத்திக்கொண்டு, கழற்றி வைக்கலாம். செயற்கை கை, கால்கள் இப்போது டெக்னிக்காக அப்டேட்டாகி வயர்லெஸ் முறையில் இயங்கும். இதனால் கால்கள் பொருத்தப்பட்டுள்ளதா இல்லையா என்று அவதிப்படவேண்டியதில்லை. மூளைக்கு சரியாக சிக்னல்கள் சென்றுவிடும். நீங்களும் தடுமாறாமல் நடக்கலாம்.

நன்றி - தி புக் ஆஃப் அமேசிங் ஆன்சர்ஸ்