சிறந்த புரத உணவுப் பவுடர்கள்!
ஜிம்முக்கு போனபிறகும், சிக்கன், மட்டன் என உணவுகளாக தின்றால் உடம்பு தேறாது. அதற்கு பதிலாக நல்ல நிறுவனங்களாக பார்த்து புரத பவுடர்களை வாங்கி உடற்பயிற்சியை முடித்தபிறகு குடிக்கவேண்டும். இதன்மூலம் தசைக்கிழிவுகள் விரைவில் குணமாகும். உடல் சோர்வு இருக்காது. தசை வளர்ச்சி வேகமாக இருக்கும்.
இதற்காக சில புரத உணவு பவுடர்களை உங்களுக்காக கூறுகிறோம்.
கேஓஎஸ் தாவர புரத உணவு பவுடர்
இதில் இறைச்சி தொடர்பான எந்த அம்சங்களும் கிடையாது. தாவர பருப்பு, கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் புரதங்களை சேர்த்து பவுடராக்கி உள்ளனர். பால், குளூட்டேன் உள்ளிட்ட அலர்ஜி விஷயங்கள் இதில் கிடையாது. ஆனால் பருப்பு வகைகளை அடிப்படையாக கொண்ட புரத பவுடர் என்பதால் கவனமாக சாப்பிடுங்கள். அலர்ஜி அறிகுறி தெரிந்தால், உடனே சாப்பிடுவதை நிறுத்துவது உடல்நலனைக் காக்கும்.
சாக்லெட், வெனிலா சுவைகளில் கிடைக்கும் இந்த நிறுவன பவுடர் புகழ்பெற்ற ஒன்று. காரணம், இந்த பவுடரின் இனிய சுவை. எளிதாக செரிமானம் ஆகும் தன்மையும் இதன் பிளஸ் பாய்ன்ட்.
ஐஎஸ்ஓப்யூர் ஜீரோ கார்ப் புரத உணவு பவுடர்
எனக்கு மாஸ் வேண்டாம். வேப்பமரத்து வேர் உடலில் பாய்ந்தது மாதிரி உடல் மாறணும். கார்ப்போ ஹைட்ரேட் வேண்டவே வேண்டாம் என அலறும் ஜிம்வாசிகளுக்கான பவுடர். மாவுச்சத்தே உடலில் சேராது என உறுதி செய்திருக்கிறார்கள். வெனிலா, வாழைப்பழம், மாம்பழம் என பல்வேறு சுவைகளில் அதிரடிக்கிற பவுடர் இது. குரோமியம், காப்பர் விட்டமின் பி12 உள்ளிட்ட நுண் ஊட்டச்சத்துகள் உள்ளன.
கிராஸ் ஃபெட் வே புரோட்டீன்
இந்த பிரிவை கேள்விப்பட்டிருப்பீர்கள். மாஸ்டர் இதழில் வே புரோட்டீன் பற்றி நிறைய பேசிவிட்டார்கள். உடற்பயிற்சி உணவுகளில் இது மிக முக்கியமானது என்று இதழ் ஆசிரியர் மலையமான் சொல்லாத நாட்கள் கிடையாது. தசை வளர்ச்சி, தசை வலியிலிருந்து விடுதலை ஆகியவற்றை இந்த பவுடர் தருகிறது. இதனை சாப்பிடும்போது இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். ஏராளமான சுவைகளில் இந்த பவுடர் கிடைக்கிறது. வாங்கிக் குடியுங்கள்.
ஓடபிள்யூஒய்என் புரதப்பவுடர்.
இது முழுக்க வீகன் மனிதர்களுக்கானது. எனவே விலை சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனால் அலர்ஜி பிரச்னையின்றி வாங்கிக் குடிக்கலாம். செரிமானம் தொடர்பாக மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே வயிறு தொடர்பான பிரச்னைகள் வராது.
கார்டன் ஆஃப் லைஃப் ரா புரதப்பவுடர்
இது பெண்களுக்கான புரதப்பவுடர். இதிலுள்ள பொருட்கள் வயிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டுள்ளன. எளிதில் செரிமானமாகி சத்துகள் உடலால் உறிஞ்சும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதுதவிர உடல் எடையைக் குறைக்க ஆன்டனி வேர்க்கடலை புரதப்பவுடர் ஆகியவையும் உள்ளன.
நன்றி - ஹெல்த்லைன்