மாஸ்க் அணிந்தால் நோய்களைத் தடுக்க முடியுமா?

retro 90s GIF
giphy





மிஸ்டர் ரோனி

மாஸ்க் அணிந்தால் வைரஸைத் தடுக்க முடியுமா?

மாஸ்க் அணிந்து கொரோனா வைரஸை சோதிப்பதைப் பார்த்து இப்படியொரு கேள்வி. குறிப்பிட்ட அளவு காற்றில் பரவும் வைரஸ் மூலக்கூறுகளை தடுக்கலாம். ஆனால் சிறிய அளவு வைரஸ்களை மாஸ்க் மூலம் தடுக்க முடியாது. மருத்துவத்துறையில் பயன்படும் திக்கான மாஸ்க் கூட நிறைய வைரஸ்களை தடுக்க நினைப்பார்கள். ஆனால் இவையும் கூட பெரியளவு நம்பிக்கை தரும்படி செயல்படவில்லை.

என்95 எனும் மாஸ்க்,  0.3 மைக்ரான் அளவு காற்று மூலக்கூறுகளை தடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாஸ்க் போடுவதோடு தேவையில்லாமல் யாருக்கும் கைகொடுக்காமல் இருப்பது, கைகளை அடிக்கடி கழுவது ஆகிய நடவடிக்கைகளை செய்வது முக்கியம்.

நன்றி - பிபிசி