போதையேறி தடம் மாறும் நண்பர்களின் கதை! - மது வடலாரா
மது வடலாரா - தெலுங்கு
இயக்கம் - ரிதேஷ் ராணா
இசை - காலபைரவா
பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்தபடி மேன்சனில் தங்கியிருக்கும் இருவர், அதிகப் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். இதற்காக இவர்கள் செய்யும் செயல் அவர்களை பெரும் சிக்கலில் தள்ளுகிறது. அதிலிருந்து மீண்டார்களா என்பதுதான் கதை.
ஆஹா
படம் நேர்கோட்டில் நகர்வதில்லை. நான் லீனியரில் மாறி மாறி நகரும் படம் காமெடியோடு செல்வதால் பார்க்க முடிகிறது. ஸ்ரீசிம்கா, சத்யா ஆகியோரின் காமெடிதான் படம் பார்க்க உதவுகிறது. சிறிய கதாபாத்திரங்களில் வரும் அதுல்யா, நரேஷ் ஆகிய கதாபாத்திரங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.
ஐயையோ
படம் ஒருகட்டத்தில் அபார்ட்மென்ட்டிலுள்ள வீட்டில் தேங்கிவிடுகிறது. இதனால் சற்று சோர்வாகிறது. சிம்கா மயங்கி கிடக்கும் காட்சி, பின் அவரை நரேஷ் கொலை சம்பவத்தில் தொடர்புபடுத்துவது போல வரும் காட்சிகள் சோர்வடைய வைக்கின்றன. அவல நகைச்சுவையாக முடியும் க்ளைமேக்ஸ் நன்றாக இருக்கிறது. புதிய முயற்சி என்றாலும் முடிந்தவரை சீராக உழைத்திருக்கிறார்கள்.
கோமாளிமேடை டீம்