பட்ஜெட் 2020 - மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!




Image result for budget 2020



பட்ஜெட்டை இரண்டு மணிநேரம் வாசித்து சாதனை செய்திருக்கிறார் நிதி அமைச்சர். புதிய அறிவிப்புகள் பெரும்பாலும் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான அம்சங்களாகவே இருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் சில விஷயங்கள் விலை குறையும். சில விலை ஏறும். அவை பற்றி பார்ப்போம்.


மதிப்பிற்குரிய பெற்றோர்களே, குழந்தைகளுக்கு இறக்கமதி டின் உணவுகள், பொம்மைகள் வாங்கிக் கொடுத்துத்தான் வளர்ப்போம் என நீங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் நெஸ்லே நான் புரோ உணவு ரூ.1,200 லிருந்து ரூ.1,340 ஆக விலை உயர்கிறது. பார்பி பொம்மையுஉம் கூட 800 ரூபாய் விலை கூடுகிறது.


உடல் ஆரோக்கியத்தை உயிராக கருதுகிறீர்களா? அப்படி உடலைப் பராமரிக்க நீங்கள் சாப்பிடும் பருப்பு வகைகளும், ஷூ, செருப்புகளும் விலை ஏறுகின்றன. கலிஃபோர்னியா வால்நட் பருப்புகள் 850 லிருந்து 1280 ரூபாயாக விலை எகிறுகிறது. நைக் ஷூக்கள் 8,999 ரூபாயிலிருந்து 9,749 ரூபாயாக விலை உயர்கிறது.

உள்நாட்டு வரி பர்னிச்சர் பொருட்களுக்கு கூடுகிறது. இதனால் சோபா, மெத்தை, எல்இடி விளக்குகளுக்கு நீங்கள் காசு அதிகம் செலவழித்தால்தான் உங்கள் வீட்டுக்கு வரும். நீங்கள் ஐகியா இறக்குமதி படுக்கை ஒன்றை வாங்க 51 ஆயிரம் ரூபாய் செலவழிக்க நினைத்தால் இனிமேல் கூடுதலாக நான்காயிரம் செலவழிக்க வேண்டும்.

விராட் கோலி, அல்லு அர்ஜூன் அளவுக்கு முடியை மாற்றி ஸ்டைலாக வேண்டுமென விரும்புகிறீர்களா? அத்தனையும் இனி காசு அதிகமாகிறது. முடி உலர்த்தும் பொருட்கள், ட்ரிம்மர், ஷேவர், அயர்ன் பாக்ஸ் என அனைத்து பொருட்களும் விலை கூடுகின்றன. அதிலும் இறக்குமதி ஆகும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க நினைத்தால் ரொம்பவே கஷ்டம். வரியை போட்டு உங்கள் பர்ஸை உரித்துக் கட்டிவிடுவார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட சீஸ், நெய், சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் விலை அதிகரிக்கப்பட இருக்கின்றன. பிரட் டோஸ்டர், ஓவன், குக்கர்கள், காபி மேக்கர் என அனைத்து பொருட்களின் விலையும் கூடுகிறது.

இந்தியத் தங்கமே வேண்டாம். வெளிநாட்டுத் தங்கம் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறினால் நீங்கள் அதற்காக அதன் விலையுடன் கூடுதலாக 1000 ரூபாய் அதிகம் தர வேண்டியிருக்கும்.

ஸ்மோக்கிங் கில்ஸ் என்றால் நீங்கள் எரிச்சலடையவேண்டாம். இனி சிகரெட் பெட்டிக்கு வரி பத்து ரூபாய் ஏற்றப்படுகிறது. எனவே சிகரெட் பழக்கத்தை கைவிடுவது உடல்நலத்திற்கும் பர்சின் நலத்திற்கும் நல்லது.


அழகான சமையல் அறையை அமைக்க நினைத்தால் கஷ்டம். பிராண்ட் பொருட்களைக் கொண்டு சமையல் அறையை அலங்கரிக்க நினைத்தால் ரூ.500 அளவுக்கு நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்கும்.

நன்றி - டைம்ஸ்